புதன், ஏப்ரல் 26, 2023

டாப் கன் மேவரிக்

ராணுவ அல்லது போர் சம்பந்தப்பட்ட படங்கள் என்றுமே அட்ரீனலின் அதிகம் சுரக்கவைப்பவை.

'சேவிங் பிரைவேட் ரியான்' அச்சு அசலாக போர்க்களத்தை கண்முன் நிறுத்தியது என்றால் 'எனிமி அட் தி கேட்ஸ்' ஸ்னைப்பர் கன்னை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட ஒரு தரமான படம்.

சமீபத்தில் வந்த '1917' போர் குறித்து வேறொரு பரிணாமம் கொடுக்கும். ராணுவ வீரன் பதுங்கு குழியிலிருந்து வெளியே வருவதில் ஆரம்பிக்கும் படம், அவன் அவனது சகாவை இழந்து அருகே உள்ளே கிராமம் செல்வது வரை அவனது தோளின் மீதேறி warfield ஐ நாம் பார்க்கும் படிக்கு அமைந்து இருக்கும். டெக்கினிக்கலாக 34 கட் இருந்தாலும் படம் பார்க்கும் நமக்கு ஒரே ஒரு கட் தான் தெரியும். போர் சார்ந்த திரைப்படத்தில் எடிட்டிங்கில் ஒரு மைல் கல் இந்த மூவி.



ராணுவ சம்பந்தப்பட்ட படங்களில் நான் முதல் ரேங்க் கொடுத்து முன்னிறுத்த விரும்பும் படம் 'புல் மெட்டல் ஜேக்கட்'. ராணுவத்தின் முதல் கோட்பாடே 'செய் அல்லது செத்து மடி'. முதலில் சுட்டுவிடுவார்கள். அதன் பின்பு தான் விசாரணையே ஆரம்பிக்கும். ஒரு ராணுவ தளவாடத்தின் ட்ரைனிங் என்பது எப்படி இருக்கும் என்பதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு இந்த படத்தின் முதல் பாதி. 'டாணாக்காரன்' படத்தில் காட்டப்படும் ட்ரீட்மெண்ட் டூமச் என்று நீங்கள் கருதினால் இது அதற்கெல்லாம் தாத்தா. 'yes sir' என்கிற வார்த்தை தான். வேறு பேச்சுக்கே இடமில்லை. அகடமிக்குள் சென்று வந்த ஃபீல் நிச்சயம்.

'U571' என்று ஒரு படம் உண்டு. நீர்மூழ்கி கப்பல், சோனார் சிக்னல் என கடுலுக்கடியில் அது வேறு ஒரு உலகம். நீர்மூழ்கி கப்பலுக்குள் எவ்வாறு இருக்கும், அதனின் operation என படம் முடிந்த பிறகும் கூட சோனார் சமிக்ஞைகள் நம் காதில் ரீங்கரமிடும் அளவுக்கு சுவாரஸ்யமானவை.

அந்த வரிசையில் நண்பன் Vallab Muru பரிந்துரைத்த மூவி தான் 'டாப் கன் மேவரிக்'. டாம் க்ரூஸ். முதல் பாகம் 1986இல் வெளி வந்திருக்கிறது. US Navy பிரிவில் SEAL படை போல Airforce க்கு Top Gun. Elite வீரர்கள். அதாவது டாப் கிளாஸ் வல்லவர்கள் கொண்ட டீம் தான் இந்த டாப் கன். 35 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் எடுத்திருக்கிறார்கள் என்றால் படத்தின் craze எந்த அளவுக்கு என்று யூகித்துவிடலாம். இதில் டாம் க்ரூஸ் அணியும் aviator வகை sun glass இப்போது வரை மிகப் பிரசித்தம். சொல்லப்போனால் 25 வயதில் இருப்பதை விட 60 வயதில் மிக handsome ஆக இருக்கிறார் க்ரூஸ். கதை பழைய பஞ்சாங்கம் தான். இந்த வேலையை இவர் இல்லாமல் செய்ய முடியாது என்ற விதி தான். அதனுடன் கொஞ்சம் முதல் பாகத்தின் மாந்தர்களுடன் சில சென்டிமென்ட் காட்சிகள். இவற்றையெல்லாம் எளிதாக யூகிக்க முடிந்தாலும் F18 மற்றும் F14 போன்ற ஜெட் fighter பிளேன்களை வைத்து இவர்கள் செய்யும் வித்தைகள் அதகளம். அதுவும் 5000 அடி hard deck என்று அறுதியிட்டு மார்ஷல் கூறினால் அந்த மிஷனை முடிக்க 100 அடியில் தான் பறந்தாக வேண்டும் என்று ஜெர்க் அடிக்கிறார் க்ரூஸ். G Force க்கு எதிராக mach 10 வேகத்தில் பறக்கும் முதல் காட்சியிலிருந்து அதிரடிதான். F18 இல் பறந்து இவர்கள் செய்யும் சண்டைகள் எல்லாமே நம்மை சீட் நுனிக்கு வர வைத்து விடுகின்றன. முதல் காட்சியிலிருந்து இறுதி வரை டாம் க்ரூஸ் தான். மொத்தத்தில் செமையான ஒரு அட்ரினலின் ரஷ் guranteed

 #TopGunMaverick #warmovie #TomCruise

 

கருத்துகள் இல்லை: