கேயாஸ் தியாரியை, கேயாஸ் தியரி என்ற பெயரிலேயே தசாவதாரம் படம் வாயிலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆண்டவர். அந்த கேயாஸ் தியரியுடன் வேண்டேஜ் பாயிண்ட் தியரி என்று இன்னொன்றையும் பிணைத்து சிக்கலில்லாத திரைக்கதையை வெகுஜனமும் ஒப்புக்கொள்ளுமாறு சிறப்பாக கையாண்டிருக்கிறார் சிம்புதேவன். ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்திற்குப்பிறகு மீண்டும் நிகழ்வின் நிழலில் கரை ஒதுங்கியிருக்கும் சிம்புதேவனின் திரைமொழியை தாராளமாய் ரசிக்கலாம்.
நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நம்மை அறியாமலேயே
பின் விளைவுகள் உண்டு என்பதே இந்த படத்தின் உயிர் நாடி. அந்தப்பின்விளைவுகளின் தேடலை
நியப்படுத்தியிருக்கிறது கசடதபற. படத்தின்
வெற்றிக்கு அதன் டைட்டில் கார்டு டிசைன் முதல் முகவரி. குறுக்கெழுத்து போல ஆறு கதைகளின் பெயர்களை அறிமுகப்படுத்தும்
கசடதபறவின் டைட்டில் கார்டே நம்மை உள்ளே இழுத்து உட்கார வைத்துவிடுகிறது. 6 கதைகள்.
ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர்களில் பயணிப்பவை. அதனதன் போக்கில் ஆறு கதைகள் பயணித்தாலும்
எல்லாவற்றிற்கும் யதார்த்தமான நெருடலில்லாத ஒரு கோர்ப்பு. ஆறு கதைகளுக்கும் தனித்தனி
எடிட்டர், இசையமைப்பளர், ஒளிப்பதிவாளர் என்று இருப்பினும் படம்
நெடுகிலும் ஒரே பதம்.
சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சுப்பு பஞ்சு,
வெங்கட்பிரபு, சிஜா ரோஸ் என்று தெறிவான பாத்திரத்தேர்வு. பிரேம்ஜியின் அய்யர் பாஷையும் விஜயல்க்ஷ்மியின் விளிம்பு
நிலை கதாபாத்திரமும் திருஷ்டி கழிப்பு போல கொஞ்சமே கொஞ்சமாக ஒட்டவில்லை. மற்றபடி ஒரு
வீக்கெண்டுக்கான பெர்ஃபெக்ட் மூவி.
The
Butterfly Effect படத்தை கொண்டாடும் நாம் இதையும் அதே உணர்வோடு ரசித்து
வரவேற்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக