இன்ஜினியரிங்
கோர்ஸ்ல ரெண்டாவது செமஸ்டர் படிக்கும்போது M2 னு ஒரு பேப்பர் வரும். மேத்தமெட்டிக்ஸ். என்னடா பன்னெண்டாவது
வரைக்கும் தான் கேல்குலஸ் அது இதுனு உயிரை எடுத்தாங்கன்னா இன்ஜினீயரிங்க்லயுமா
அப்டினு மலைப்பா இருக்கும். ஒன்னு ரெண்டு இல்ல. மொத்தம் 4 மேத்ஸ் பேப்பர். M3 ஓரளவுக்கு ஈஸியா இருக்கும். இந்த M2
மாதிரி ஒரு எமகாதகன் எட்டு செமஸ்டர்லயும் கிடையாது. எப்பேர்ப்பட்ட ஆளானாலும் ஒரு
காட்டு காட்டிடும். அதாவது பன்னெண்டாவதுல ஸ்டேட் ரேங்க் எடுத்தவன் கூட பெயில் ஆகற
மாதிரியான ஒரு கோட்டான் அது. அதுவும்
சிவில் எஞ்சினியரிங்ல ரெண்டாவது செமஸ்டர்ல மொத்தம் பதினொரு பேப்பர். அதுவும் நாலே மாசத்துல
எழுதனும். என் நண்பன்லாம் எப்பிடியாவது நான் ஒண்ணுலயாவது பெயில் ஆயிடுவன்னு அவ்ளோ நம்பிக்கையா
இருந்தான். பார்டர்ல அந்த கோட்டானா தோக்கடிச்சிட்டேன்.
அப்போ
தோராயமா ஒரு 250 காலேஜ் இருந்துச்சு. அதுல 230 காலேஜாவது அண்ணா யூனிவெர்சிட்டியோட இணைக்கப்பட்டிருக்கும். எல்லா
காலேஜுக்கும் அண்ணா யூனிவர்சிட்டி தான் ராஜா. ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எல்லாமே
அண்ணா யூனிவர்சிட்டி சொல்றபடிதான். கொஸ்டின் பேப்பர் யாரு செட் பண்ணுவாங்கனு தெரியாது. தமிழ்நாட்டுல எந்த காலேஜ் ப்ரொபெஸர் வேணா
இருக்கலாம். அதனால ஒவ்வொரு செமஸ்டரும் 12th எக்ஸாம் ரேஞ்சுக்கு ஒரு பொது தேர்வு மாதிரி 'பக் பக்'னு இருக்கும். நம்ம காலேஜ்ல அந்த போர்ஷன் கம்ப்ளீட்
பண்ணிருக்காங்களா இல்லையா அப்டின்லாம் யாரும் பாக்கமாட்டாங்க. கொடுத்துருக்கற சிலபஸ்லேந்து எங்கேந்து வேணாலும்
கொஸ்டின்ஸ் கேப்பாங்க. ஒவ்வொரு செமஸ்டரும் பாஸாகி வெளில வரதுக்குள்ள அவ்ளோ டென்ஷன் இருக்கும். அப்டிலாம் நித்ய கண்ட பூர்ணாயுசா எழுதி வாங்குன டிகிரி.
எதுக்கு
இத சொல்லவரேன்னா, இந்த தன்னாட்சி அந்தஸ்து (autonomous)
பெற்ற காலேஜ்ல, தப்பு தப்பு யூனிவெர்சிட்டினு சொல்லணும், பாத்தோம்னா, சிலபஸும் அவாளோடது. கொஸ்டின் பேப்பரும்
அவாளே ரெடி பணிப்பா. அதாவது பேப்பர் ஹேண்டில் பண்ண வாத்தியாரே. இதுல என்ன வசதின்னா,
அவரு எந்த போர்ஷன் கவர் பண்ணலையோ அதுலேந்து
கொஸ்டின் வராது. கவர் பண்ண போர்ஷன்ல இம்பார்ட்டண்ட் கொஸ்டின் என்ன அப்டிங்கிறத
ஈஸியா கெஸ் பண்ணிடலாம். அதுவும் இல்லேன்னா அவங்களே சொல்லிடுவாங்க. அதுக்கு ஒரு
எக்ஸாம். இதே மாதிரி தான் எட்டு செமஸ்டரும். வாத்தியாரோட குட் புக்ல இருந்துட்டா
போதும். இந்தா புடினு மார்க் அள்ளி போட்ருவாங்க. இன்டெர்னல்ல கையே வைக்க மாட்டாங்க.
வைக்கவும் கூடாது. வச்சா பாஸ் பெர்செண்டேஜ் கம்மியா போயிடும். அப்புறம் காலேஜ் ரெபியூட்டேஷன் கெட்டுடும். அதனால எப்பவுமே
இன்டெர்னல் full
மார்க்ஸ் தான். ஆனா, இந்த அண்ணா யூனிவர்சிட்டி affiliated காலேஜ்ல நெலம தல கீழா இருக்கும். மிரட்டி மிரட்டியே இன்டெர்னல்
மார்க்ஸ்ல கை வைப்பாங்க. அதுவும் 20க்கு 20 மார்க் எடுக்கிறதுலாம் சாதாரண விஷயம் இல்ல. இது போக அந்த பொது
தேர்வு வேற.
அப்புறம்
இந்த தன்னாட்சி பெற்ற யூனிவெர்சிட்டில ஒரு பிரிவுக்கு மேக்சிமம் 120 பேர் படிப்பாங்க. அதுல முத வரவங்களுக்கு ஒரு கோல்டு மெடல், யூனிவர்சிட்டி பர்ஸ்ட்னு சர்டிபிகேட் கொடுக்கிறது உண்டு. அப்போ
தமிழ்நாடு முழுக்க இருக்கற காலேஜ்ல அதே பாடப்பிரிவில படிக்குற 2500 பேர்ல முத மார்க் வாங்குறவங்களுக்கு கொடுக்கற கோல்டு மெடலும் இந்த autonomous
கோல்டு மெடலும் ஒண்ணா. Bathla Brand அலும்னியும் லேடர் வச்சா கூட எட்டாது. ஆனா வெளில யூனிவர்சிட்டி firstனு சொல்லும்போது யாருக்கும்
வித்தியாசம் தெரியாது. எட்டாப்பு பாஸு. SSLC fail கதைதான்.
இதெல்லாத்தையும்
விட பிரமாதமான விஷயம் என்னன்னா, இன்னும் சில autonomous காலேஜ்ல பணம் கட்டிட்டு பரிட்சைக்கு வந்து ரோல் நம்பர் எழுதிட்டா மட்டும் போதும். க்ளாஸ் எங்க இருக்குதுனே தெரியாம டிகிரி வாங்குன பசங்க
இப்போ ஜபர்தஸ்தா இஞ்சினியர்னு
சொல்லிட்டு வெளில வந்துட்ருக்காங்க. எஞ்சினியரிங்க் க்வாலிட்டி அவ்ளோ
மட்டமா போய்டுச்சி.
அந்த
காலத்து PUCனு இப்போ இருக்குற ஓல்ட் ஜெனரேஷன்
சொல்ற மாதிரி நாமளும் அந்த காலத்து அண்ணா யூனிவர்சிட்டினு காலர் தூக்கிவிட்டு
சொல்லிக்கலாம்.
ஆகையால்,
autonomousல 10 CGPA னா, அண்ணா யூனிவர்சிட்டி affiliated
காலேஜ்ல படிச்சி வரவங்களுக்கு அது 6
CGPA தான்.
கதம்
கதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக