நேட் ஜியோ சேனலில் ‘Snakes in the
City’ என்றொரு சீசன் ஒளிபரப்பபடுகிறது. தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரம்
சர்ஃபிங்க் விளையாட்டுக்கு மட்டும் பேர்போனதல்ல. பாம்புகளுக்கும் சேர்த்தே புகழ் பெற்றது.
சைமன் கீஸ் தான் கீ பெர்சன். அவருடைய கேர்ள் ஃப்ரெண்ட் (?) சூசி
கில்லெட் என இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். கான்செப்ட்
இதுதான். தங்களது வசிப்பிடத்தில் பாம்பு புகுந்துவிட்டது என்று அழைப்பவர்களுக்கு, அவர்கள் இடத்திற்கு சென்று அந்த பாம்பை பிடித்து பின் காட்டிற்குள் விடுவது.
ஒரு பாம்பு பிடிக்கு 30 டாலர். இவர்கள் அட்டென்ட்
செய்யும் அழைப்புகள் ஏழை பணக்காரன் என்ற வகுப்பு பேதமில்லாத மெய்நிகர் கழக ஆட்சியை
போன்று (!!!) சமத்துவத்தை கடைபிடிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. ஸ்லம் எரியாவிலும்
பாம்பு பிடிக்கிறார். பெசன்ட் நகர் போன்ற பாஷ் எரியாவிலும் வித்தை காட்டுகிறார்கள்.
டர்பன் நகரம் முழுவதும் இந்திய வம்சாவளி முகச்சாயல் தெரிகிறது. கிச்சன், பெட்ரூம் வார்ட்ரோப்,
டாய்லட், கார் பார்க்கிங் ஏரியா, மொட்டை
மாடி, மரங்கள் என சகல இடத்திலும் பாம்பு பிடிக்கிறார்கள். மேலும்
பிடித்த பாம்பை கையில் வைத்து ஒரு சிறு விளக்கம் கூட தருகிறார்கள். அதுதான் இந்த ஒளிபரப்பின்
ஹைலைட்டே. பிளாக் மாம்பா, க்ரீன் மாம்பா, வைன், மொசாம்பிக் ஸ்பிட்டர் கோப்ரா, மலைப்பாம்பு, தண்ணீர் பாம்பு என பல வகைகள். Black
Mamba பாம்பு வகைகளிலேயே மிக கொடியது எனத்தெரிகிறது. 20 நிமிடங்களில்
மரணம். Green Mamba வும் அதே போலத்தான். Mozambique Spitter Cobra என்பது விஷத்தை வாயிலிருந்து பீய்ச்சி
அடிக்கிறது. ஆறு அடி தூரமென்றாலும் எதிரியின் கண்களில் கூறி பார்த்து துப்புகிறது.
Sniper தோற்றுவிடும் என்கிறார்கள். Vine பாம்பு மரத்தில் இருக்கும் twig போலவே camouflage
செய்துகொள்கிறது. ஆகையால் இது மரத்தில் இருக்குபொழுது ஒரு உடைந்த சுள்ளியை
போல் தெரிகிறது. அதிக விஷமுள்ளது. சைமன் ஒரு டாங் மூலம் பாம்பின் உடலை பிடிக்க, சூசி இன்னொரு டாங் மூலம் உதவி செய்ய, இதுபோன்ற பல பாம்புகள்.
அனைத்தையுமே கையில் பிடித்து பாங்காக விவரிப்பது சைமன் கீசின் ஸ்பெஷல் எனலாம். ஆறு
சீசன் தாண்டிவிட்டது. சூசிக்கு ஸ்பிட்டர் கோப்ரா
அலர்ஜியாம். இவர்கள் இருவருக்குமே இருவருமே இரண்டாவது என்ற கொசுறு செய்தியுடன் இந்த
பத்தி ஓவர்.
ராகதேவனின் இசையில் ஜானகியின் குரலில் வெளிவந்த ‘ஓஹோ மேகம் வந்ததோ’ என்ற
பாடலின் விசுவலுக்கு நியாயம் சேர்த்த மணிரத்னம், அதே ராகதேவன்
இசையில் சித்ராவின் குரலில் வெளிவந்த ‘ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்’ பாடலின் விசுவலுக்கு மெனக்கிடவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது. மௌன
ராகம் 86 இல் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. அதன் பின் மணி எடுத்த காதல் கதை தான்
இதயத்தை திருடாதே. 89 இல் வெளியானது. ‘வான்
மேகம்’ மெட்டை விட மிகத்துள்ளலான இசையை ‘ஆத்தாடி அம்மாடி’ பாடலுக்கு ராஜா போட்டிருப்பார். அவ்வளவு
‘enthu’ பாடலில் இருக்கும். அதுவும் ‘சொல்லம்மா
சொல்லம்மா வெக்கத்திலே’ என்ற வரியில் பாடலின் விசுவலை காண அதிக
எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் பாடலிலோ ‘கிரிஜா ஷெட்டர்’ என்ற பிரிட்டன் பெண்ணை ஷாம்பூ போட்டு உலர்த்திய லூஸ் ஹேருடன் நெற்றி நடுவில்
ஆறாம் நம்பர் சிவப்பு ஐடக்ஸ் ஸ்டிக்கர் பொட்டிட்டு ‘லூசு மாதிரி
அங்கையும் இங்கையும் ஒடும்மா’ என்று சொல்லிருப்பார்கள் போல. அந்த
அம்மாவும் இரு கையை தூக்கி அங்கும் இங்கும் ஓடி குதித்துகொண்டே இருக்கிறது. முகத்தில்
உணர்ச்சியின் வெளிப்பாடே இல்லை. Zero Expression. சந்தோஷ் சுப்ரமணியம்
ஜெனிலியா போல. ஒலிப்பதிவு PC. அனைத்துமே லாங் ஷாட். HD
பிரிண்டாக இருந்தால் விண்டோஸ் XP இல் வால்பேப்பராக
வைக்கலாம். அவ்வளவே. பாக்கி எல்லாம் ஏமாற்றம் தான். இதே ‘ஓஹோ
மேகம் வந்ததோ’ பாடலில் ரேவதி, பாடலின் ஒவ்வொரு
வார்தைக்கும் தெறித்து விழும் expressions, துள்ளல் ஆட்டம் என்று
‘ரௌடி பேபி’ போல அதகளம் செய்திருப்பார்.
இந்த அளவுக்கு ஈடு கொடுக்கவில்லையென்றாலும், புன்னகை மன்னனில்
வரும் ‘வான் மேகம்’ பாடலின் எனேர்ஜி அளவுக்காவது
கிரிஜா முயற்சி செய்திருக்கலாம். ம்ஹூம். ஒலியுடன் நிப்பாட்டி ஒளியை மறந்திட்டால் ‘ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்’ ஒரு பிரமாதமான வினையூக்கி பாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக