புதன், அக்டோபர் 09, 2024

கழிவிறக்கம்


அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் கூறிய ஒரு விஷயம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருக்கும் அவர் மனைவி, பள்ளியில் உள்ள கழிவறை அசுத்தமாக இருப்பதால் காலை முதல் மாலை வரை அங்கு சிறுநீர் கூட கழிப்பதில்லை என்பதே அது. பெரும் பாதகம். ஆத்திரத்தை அடக்கினாலும்..என்ற சொலவடை தான் ஞாபகம் வருகிறது.

அலுவலகம் சென்றால் நான் என்னக்கு செய்யும் ஆகப்பெறும் பணி என்றால், காலை ஒரு லிட்டர் தண்ணீர் மத்திய உணவிற்குப் பிறகு ஒரு லிட்டர் தண்ணீர். பின்பு ஒரு மணி நேர விடையில் நீர் பிரித்தல் வேலை. எவ்வளவுக்கு எவ்வளவு உடல் கழிவுகளை வெளியேற்றாமல் அடக்குகிறோமோ அதே அளவுக்கு நோயையும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.

குடல் பாதுகாப்பு பேணுதல் என்பது இப்பொழுது நல்ல விழிப்புணர்வு கண்டு வருகிறது. பசிக்கும் நேரத்தில் புசித்து உணர்வெழும் நேரத்தில் கழிவுகளை அகற்றினாலே நோய்கள் வாரா.      

போலவே, எட்டு மணி பத்து மணி வரை ஆபிசில் குப்பை கொட்டும் கண்ணியவான்கள் கவனத்தில் கொள்ளுதல் நல்லது. வேலைபளு மற்றும் ஸ்ட்ரெஸ் காரணமாக ஓவர் ஈட்டிங் செய்யும் கண்மணிகள் வேளாவேளைக்கு சக்கையை வெளியேற்றுவது அதிமுக்கியம். மனதுக்கு பாரமென்றால் வேண்டப்பட்டவரிடம் குமுறுவதைப்போல், வயிற்றுக்கு பாரமென்றால் பாரபட்சமின்றி கழிவறையில் தஞ்சமடையுங்கள்.  

கலகலவென்று சிரிப்பது மட்டும் முக்கியமில்லை, கழிவதும் தான்.

சிம்பிளாக சொல்வதென்றால் 'வந்தா போங்க'

தலைப்பில் இருக்கும் '' சரிதானே.  

கருத்துகள் இல்லை: