அத்துவானக் காட்டுல டபக்கின்னு ஒருத்தன தனியா விட்டுட்டு போறது மாதிரியான டிபிக்கல் பேய் பட சீன்கள் இருந்தாலும், பசங்க, அம்மா சென்டிமென்ட், தங்கச்சி பாசம் அது இதுனு கதை நல்லாருக்குது.
தமன்னா ராக்ஷி கண்ணா ரெண்டு பேரு இருந்தாலும் கதைல மசாலா எலிமன்ட் ஃபுல்லா குறைச்சு த்ரில்லர் எலிமன்ட் சேர்த்துருக்காங்க.
படம் முழுக்க சுந்தர் சி தான். காமெடிக்கு யோகி பாபு, கோவை சரளா, கணேஷ் இருந்தாலும் பல இடங்கள்ல 'எங்க முடிஞ்சா சிரிக்க வச்சி பாரேன்' ரகம் தான். ஆனா பூமர் குட்டிப்பசங்க (!!!) பல பேரு விழுந்து விழுந்து சிரிச்சாங்க. நமக்கு தான் ஒர்க் அவுட் ஆகலை.
த்ரில்லர் சீன்ஸ் எல்லாம் செமத்தியா இருக்குது. அதுக்கு ஏத்த மாதிரி பக்கா bgm. ஆனா க்ளைமேக்ஸ்ல காதை மூடி பாக்குற அளவுக்கு அவ்ளோ இரைச்சல். 'ஜோ ஜோ' பாட்டு இதம்
'என்னங்க நானும்' அப்டின்னு கேட்டு குஷ்பு அம்மன் பாட்டுக்கு ஆடிருக்காங்க.
ஜோடிக்கு சிம்ரன். 53 அப்புறம்
48 வயசு. என்னா ஆட்டம்.
டைட்டில் போட்ட உடனே எந்திச்சு போய்டாதீங்க அப்பு. ரொம்ப எதிர்பார்த்த தமன்னா ராக்ஷி கண்ணா பாட்டு எண்ட் கிரெடிட்ல தான் வருது. ஒன் மோர் காவால சாங்.
இந்த வருஷ சம்மர் சீசனுக்கு படமே வர்ல. களை கட்டலை. இந்த கேப்ல அரண்மனை கல்லா கட்டப்போறது உறுதி.
க்ளீன் ஃபேமிலி எண்டர்டெய்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக