படத்துல பல சீன்கள் சூப்பரா இருந்துச்சு. பர்டிகுலரா ஒரு சீன் ரொம்ப
நல்லாருந்துது.
ஜோவும் ஸ்ருதியும் க்ளைமேக்ஸ்ல பேசுற இந்த சீன். ஸ்ருதி ரொம்ப
குழப்பமான ஒரு மன நிலைல இருக்கிறாங்க. பட் ஜோ தெளிவான ஒரு நிலைல இருப்பார். அது
வசனத்துல மட்டும் இல்ல. லைட்டிங்கிலேயும் காமிச்சிருப்பாங்க. ரெண்டு பேரும் ஜன்னல்
பக்கம் தான் இருந்தாலும் ஸ்ருதி மேல கொஞ்சமா டார்க் ஷேட் விழும். ஆனா ஜோவுக்கு
நல்ல வெளிச்சம் காமிச்சிருப்பாங்க. அதே சீன்ல ஸ்ருதி பேசி முடிக்கும்போது தன்னோட
குழப்பத்துலெந்து வெளில வந்துருப்பாங்க. 'என் வாழ்க்கைல ஒரு பைய்யன் இருக்கான்' சொல்லும் போது அவங்க மேல வெளிச்சம்
வரும்.
நல்ல டீம் அப்டிங்கறது இதுதான். ஸ்க்ரிப்ட்டை டீம் மொத்தமும்
உள் வாங்கினாத் தான் இந்த மாதிரி மேஜிக் நடக்கும். அது ஜோ படத்துல நடந்துருக்கு.
கேப்டனுக்கும் ஒளிப்பதிவாளருக்கும் டீமுக்கும் வாழ்த்துக்கள் Rahul K G
Vignesh Rio Raj Mathewo Arulanandhu Hariharan Ram




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக