வெள்ளி, ஆகஸ்ட் 11, 2023

ஜவான்


செப்டம்பர் 7 தானே படம் ரிலீஸ். அதுக்குள்ளே ரிவியூவா அப்படிதானே ஷாக் ஆகிறீங்க.

ஜவான் ரிவ்யூ இல்ல. ஆனா அது  சம்பந்தமா தான். அட்லீ பத்தி.



வயசு 36. தன்னோட 23வது வயசுல ஷங்கர் கிட்ட அசிஸ்டன்ட்டா ஜாயின் பன்றாரு. எந்திரன் அப்புறம் நண்பன். கூடவே 'முகப்புத்தகம்' அப்டினு அவரு இயக்குன ஷார்ட் பிலிம் அவருக்கு நல்ல ரீச் கொடுக்குது. தன்னோட இயக்குனர் கனவு அவருக்கு 'ராஜ் ராணி' படம் மூலமா நனவாகுது. 'எங்கேயும் எப்போதும்', 'வத்திக்குச்சி' அப்டினு ரெண்டு மாறுபட்ட சினிமாவை தயாரிச்ச 'Fox star studios' இவரோட முதல் படத்தை தயாரிக்க முன்வராங்க. AR முருகதாஸ் சேந்து ப்ரொட்யூஸ் பன்றார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். பட்ஜட்ட விட மூணு மடங்கு கலெக்ஷன். அதுக்கப்புறம் இவர் இங்க பண்ணதெல்லாம் ரிக்கார்ட் பிரேக்கிங் கலெக்ஷன் தான். தளபதியோட 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' எல்லாமே வேற லெவல் ரீச். மொத்தமே  நாலு படம் தான் டைரக்ட் பண்ணிருக்கார்.  நாலுமே சூப்பர் ஹிட்.

இது இப்படி இருக்க பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஒரு கம் பேக் தேவைப்படுது. கிட்டதட்ட கடைசியா நடிச்ச நாலஞ்சி படங்களும் சரியா போகலை. 'ஜீரோ' மூவி அனௌன்ஸ் பண்ண டைம்ல ஷாருக்கும் அட்லீயும் வேற வேற சந்தர்ப்பங்கள்ல மீட் பன்றாங்க. KKR மேட்ச் பாக்குற நேரத்துல ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துல உக்காந்து டிஸ்கஸ் பண்ணிட்ருந்தது வைரல் ஆச்சு. அப்போ அட்லீ பிகில் ஷூட்டிங் பண்ணிட்ருக்கார். ஹைப் என்னன்னா ஷாருக் மெர்சல் படத்தை தான் ரீமேக் பண்ணப்போறாரு அப்டினு டாக் ஓடுச்சு. ஆனா எதுவும் ஊர்ஜிதம் ஆகல. அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்னு சொல்ற மாதிரி தன்னோட அஞ்சாவது படம் ஷாருக் தான் அப்படிங்கிறது confirm ஆகுது. பாலிவுட் பாட்ஷாவ இயக்குற வாய்ப்புன்னா சும்ம்மாவா. அதுமட்டும் இல்லாம நம்ம தமிழ் சினிமாவுக்கான டோன் வேற. ஹிந்தி சினிமாவுக்கான டோன் வேற, பாலிடிக்ஸ் வேற. அத்தனை விஷயங்களையும் சமாளிச்சு இவர் எடுத்துருக்குற 'ஜவான்' மூவி ட்ரைலர் ரொம்பவே நல்லா வந்துருக்கு. சொல்லப்போனா ரொம்பவே ஸ்டைலிஷா பண்ணிருக்கார்னு தான் சொல்லணும்.

ஆனா அட்லீ மேல வைக்கப்படற விமர்சனங்கள் அவர் ஒரு 'copycat' அப்டிங்கிறதுதான். ராஜா ராணிக்கான பல சீன்ஸ், ஏன் கதை கூட மௌன ராகம், எங்கேயும் எப்போதும் படத்துலேந்து எடுத்திருப்பார். தெறி படம் சத்ரியனோட கதை அப்படிங்கிறது தெரியும். அதே போல விமர்சனங்களை மெர்சல் மற்றும் பிகில் சந்திச்சுது. ஆனா விஷயம் என்னன்னா அவரு பல படங்கள்லேந்து காட்சிகளை கதைகள் உருவுனாலும் தற்போதைக்கு ஏத்த மாதிரி சீன்ஸ் அமைச்சு பிரெஷா கொடுக்கறதுல கிங். அதுக்கு சாட்சி பட்ஜட்ட விட மூணு மடங்கு கலெக்ஷன் பண்ணின அவரோட படங்கள். அதனாலதான் ஷாருக் அவரை கிங் ஆப் மாஸ் அப்டினு கூப்பிட்டார்.

இதெல்லாத்தையும் விட அவர்கிட்ட என்ன பிடிச்சதுனா, அவர் தான் வளர்றது மட்டும் இல்லாம தன்னோட டீம்மையும் எலிவேட் பண்ணி கூட்டிட்டு போறார். தன்னோட டீம் வச்சுதான் படம் எடுக்க முடியும் அப்டினு பாலிவுட் பாட்ஷாவை கன்வின்ஸ் பண்ணின வரைக்கும் அவர் கில்லிதான். அவர் டீம்னு நான் சொல்றது எடிட்டர் ரூபன், DOP GK விஷ்ணு, ஸ்டண்ட் அனல் அரசு, ப்ரொடக்ஷன் டிசைஞர் முத்துராஜ், நடனகக்கலைஞர்கள் ஷோபி மற்றும் லலிதா, அப்புறம் பல படங்களுக்கு ஏன் பல இளசுக்களுக்கு vibe கொடுத்துட்டிருக்கிற நம்ம அனிருத் தான் அங்க ம்யூசிக். அதுமட்டும் இல்லாம நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபுனு ஒரு பட்டாளமே ஜவான் படத்துல இருக்குறாங்க.

ட்ரைலர் பார்த்தா நான் சொல்ல வரது புரியும். கிங் ஆப் பாலிவுட் படத்துல இருக்குற முக்கியமான டெக்னீஷியன்ஸ் எல்லாருமே தமிழ் ஆளுங்க. அங்க இருக்குற பல பெரிய திரைகள்ல நம்ம தமிழ் ஆளுங்க பேர் பிரதானமா வரப்போது அப்டிங்கிறதே பெரிய விஷயம். இதனால அந்த டெக்னீஷியன்ஸ் போகப்போற தூரம் வேற லெவல். அந்த பெருமை அட்லீக்குத்தான்.

அந்த வகைல அட்லீ கிங் ஆப் மாஸ் தான். 

 

கருத்துகள் இல்லை: