இவ்ளோ பெரிய ஸ்டாருக்கு அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு கதை ரெடி பண்றதுங்கிறது அவ்ளோ ஈஸி இல்ல. ஏன்னா பல தரப்பட்ட ஆடியன்ஸ திருப்தி படுத்தனும். சின்ன குழந்தைங்க, 2k கிட்ஸ், ரஜினி ரசிக பெருமக்கள், பேமிலி ஆடியன்ஸ், வயசானவங்க, தாய்க்குலம் இப்டி நிறைய. அவ்ளோ எலிமெண்ட்ஸ் உள்ள கொண்டு வந்து, தன்னோட டெரெக்சன் ஸ்டைலையும் தக்க வச்சுக்கணும். நெல்சன் மேல பெரிய பொறுப்பு. நிறைவேத்திருக்காரா? பாக்கலாம்.
போலீஸ்ல வேலை பாக்குற தன்னோட பைய்யன் ஒரு பெரிய கேஸ்ல மாட்டி இறந்து போய்டுறார். அதுக்கு பழி வாங்கிறதுக்கு ரஜினி ஒரு அவதாரம் எடுக்கிறார். அதுதான் ஜெய்லர். மொத்தப்படத்தையும் தன்னோட தோள்ல தாங்கி நிக்கிறார்.
முதல்ல ரஜினிய பாராட்டியே ஆகணும். ஒரு சில டெரெக்டர் கைல மட்டும் தன்னை ஒப்படைச்சு தன்னோட சூப்பர் ஸ்டார் இமேஜ் கெடாம ஓடிட்ருந்தவர், அந்த வட்டத்துல இருந்து வெளிய வந்து பண்ண முத படம் 'எந்திரன்' தான். அதுக்கப்புறம் 'கபாலி' படத்துல தான் பழைய ரஜினியை, அதாவது நடிப்புல பழைய ரஜினியை பாக்க முடிஞ்சது. முக்கியமா தன்னோட மனைவியை ரொம்ப நாள் கழிச்சி மீட் பண்ற அந்த சீன்ல அழுவார் பாருங்க. காலா, 2.0, அப்புறம் பேட்ட அப்டினு புது முயற்சிகள் செஞ்சு பார்த்தார். ஒர்க் அவுட் ஆகியிருந்துச்சி. க்ரே ஷேட் எப்பவுமே ரஜினிக்கு சூட் ஆகும். சிட்டி ரோபோவை விட, ரெட் சிப் ரோபோ தான் மனசுல நின்னுச்சு. இந்த படங்களுக்குப்புறம் 'தர்பார்', 'அண்ணாத்தே' அப்டினு திரும்பவும் தன்னோட பழைய சர்க்கிளுக்கு போய்ட்டார். சுமாரா தான் இருந்துச்சு. அடுத்ததா புத்தம் புது காம்பினேஷன். நெல்சன் கூட ஜெய்லர். 72 வயசுலேயும் புதுப்புது முயற்சிகள் பண்ணி இப்பவுள்ள குட்டி பசங்க வரைக்கும் கனெக்ட் பண்ணிக்கிற ரஜினி ஆச்சர்யம் தான். ரஜினிட்ட இருக்குற ரொம்ப பாசிட்டிவான விஷயம் என்னதுனா, அவர் தன்னை அப்டியே டைரக்டர் கிட்ட ஒப்படைக்கிறது தான். அதாவது 'director's hero' அப்டினு சொல்லுவாங்கல்ல, அதுமாதிரி. complete submission. மித்தது இயக்குனர் கைலதான்.
ஜெய்லர்ல பிடிச்ச எலிமெண்ட்னு பாத்தா சூப்பர்ஸ்டார் ரஜினியும் இருக்காரு. அவருக்கான நடிப்புக்குண்டான ஸ்கோப்பும் இருக்கு. அதேபோல நெல்சன் ஸ்டைலும் இருக்கு. டார்க் காமெடி, நெல்சன் டீம் அப்டினு டைரக்டருக்கு உண்டான விஷயத்தையும் காம்ப்ரமைஸ் பண்ணாம ஒரு மாஸ் மூவி கொடுத்திருக்கார். Hats off நெல்சன்.
ஆடியோ லாஞ்சுல ரஜினி சொல்லிருப்பாரு. 24 மணி நேரத்துல அனிருத் 20 மணிநேரம் உழைக்கிறாருனு சொல்லுவார். படத்துல அது நல்லாவே தெரியுது. சொல்லப்போனா படத்தோட உயிர் நாடியே ம்யூசிக் தான். BGM தான். அதுவும் ஹுக்கும் BGM படத்தை அவ்ளோ எலிவேட் பண்ணிருக்கு.
சம்பந்தமே இல்லாத தமன்னா பாட்டை படத்துல எந்த இடத்துல எங்க சொருகுவாங்க அப்டினு பாத்தேன். கதையோட இணைஞ்சி கொஞ்சம் கூட துருத்தலே இல்லாம அதுவும் ரஜினிக்கு ரெண்டு ஸ்டெப் போட்டதுவரைக்கும் கதையோட மிங்கில் பண்ணி எடுத்திருக்காங்க. காவாலா பாட்டுக்கு தியேட்டரே அதிருதுனு சொல்லித் தெரிய வேண்டிதில்லை.
ஏகப்பட்ட ஸ்டார் காஸ்டிங். மோகன்லால், ஜேக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார், கிஷோர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், VTV கணேஷ், தமன்னா இன்னும் நிறைய. பேன் இந்தியா மூவி அப்படிங்கிற கான்செப்டுக்காக ஸ்டேட்டுக்கு ஒரு ஆக்டர் பிடிச்சிருக்காங்க அப்டின்னுதான் சொல்லணும். விநாயகம் கேரக்டர் தான் மெய்ன் வில்லன் ரோல். மத்ததெல்லாம் 'கோன் பனேகா க்ரோர்பதி'ல 'போன் ஆப் பிரென்ட்' ஆப்ஷன்ல வர மாதிரி ரஜினிக்கு சப்போர்ட் பண்ற கேரக்டர்ஸ்.
பிளாஷ் பேக் ரஜினி கெட்டப் நல்ல மாஸா இருக்கு. ஆனா சீன் பத்தலை. அலெக்ஸ் பாண்டியன், [பாட்ஷா ரேஞ்சுக்கு வரல. அதாவது கொடுத்த பில்டப்புக்கு நமக்கு இம்பேக்ட் கொடுக்கல. இன்னும் யோசிச்சி ரெண்டு மூணு சீன்ஸ் சேத்துருக்கலாம். பிரச்சினை என்னன்னா ரஜினியோட இமேஜ் அல்ரெடி வேற எங்கேயோ போயிடுச்சி. அத தாண்டி எடுக்கிறது ரொம்ப சவால் அப்புறம் கஷ்டம். வேணா ரிப்பீட் பண்ணலாம். பீட் பண்ண முடியாது.
Fight சீன்ஸ்ல ரஜினிக்கு ரொம்ப ரிஸ்க் இல்லாம எடுத்திருக்காங்க. அங்கங்க ஸ்டைலான மூவ்மண்ட்ஸ். அவ்ளோதான். பட் நல்லாருக்கு.
படத்துல ரொம்ப பிடிச்சதுனு பாத்தா
1. ரஜினி, அவரோட ஸ்டைல், நடிப்பு
2. அனிருத் ம்யூசிக், BGM
3. டார்க் காமெடிஸ்
4. of course காவாலா பாட்டு.
இந்த ஒரு பத்தி spoiler alert
அஸ்வின்ஸ் படத்துல நடிச்ச வசந்த் ரவிதான் ரஜினியோட பைய்யன். தன்னோட பைய்யன காப்பாத்துறதுக்காகத்தான் அவ்ளோ ரிஸ்க் எடுத்து ட்ராவல் பண்ணிருக்கார். கடைசில ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வழின்னு இந்த மாதிரி ஒரு க்ளைமேக்ஸ் தேவையா நெல்சன் அவர்களே. 'அஸ்வின்ஸ்' படத்துல குழம்பி இருக்குற மாதிரி ஜெய்லர் படத்திலேயும் என்னென்னவோ யோசிச்சி குழம்பி நிக்குது அந்த வசந்த் கேரக்டர். எல்லா ஆடியன்சும் ஒரு நல்ல happy ending எதிர்பாக்குற நேரத்துல, மொத்த effortம் காணடிச்சிட்டார். படத்துல ரெண்டு மூணு ட்விஸ்ட் நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. டெஸெர்ட் சண்டை, கிரீடம் ஸீன். இது பத்தாதா? இதுக்கு மேலேயும் ஒரு டிவிஸ்ட் வைக்கறேனுட்டு எப்படி இப்டி ஒரு க்ளைமேக்ஸ். சத்தியமா மனசு கேக்கல. ஒருத்தரு கூடவா rush அல்லது preview பாத்துட்டு feedback சொல்லல. ரஜினிக்கே தெரிய வேண்டாமா? அந்த ஒரு ட்விஸ்ட் இல்லேன்னா படம் வேற எங்கேயோ போயிருக்க வேண்டியது. முன்னாடிலாம் alternative climax ரெண்டு மூணு வச்சிருப்பாங்க. ரிசல்ட் சரியில்ல அப்டினு தெரிஞ்ச உடனே வேற climax போட்டு படத்த மாத்திருவாங்க. தயவு செஞ்சு அது மாதிரி ஏதாவது நடந்தா நல்லது. வசந்த மாளிகை, வாழ்வே மாயம், வேட்டையாடு விளையாடு, கிரீடம், முகவரி, காதலர் தினம், யாரடி நீ மோகினி மாதிரி படங்கள்ல மூவி ரிலீஸ் ஆனப்புறம் கிளைமாக்ஸ் மாத்தி ரிலீஸ் பன்னிருக்காங்க.
ரஜினியோட ஸ்டைல், கரிஷ்மா, நடிப்பு, அழகான பேமிலி, அனிருத் ம்யூசிக் BGM, தமன்னா சாங், டார்க் காமெடிஸ் அப்டினு எல்லாம் இருந்தும் இது எல்லாத்தையும் overshadow பண்ற மாதிரி ஒரு கிளைமாக்ஸ். பசங்க கைல ஐஸ் கிரீம் கொடுத்து பாதில பிடுங்கினது மாதிரி ஒரு பீல். என்னதான் எல்லாம் இருந்தாலும் அந்த ஒன்னு மட்டும் இல்லேன்னா அப்படிங்கிற ஒரு feel தவிர்க்க முடியல. மத்தபடி அலப்பறை தான்.
#Rajinikanth #jailer #jailerreview #NelsonDilipkumar #TamannaahBhatia #anirudh #SunPictures #KalanithiMaran

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக