கவர்ன்மென்ட்
வேலை
லைஃப்ல
செட்டில் ஆகணும்னுட்டு எப்படியாவது அடிச்சி பிடிச்சி கவர்ன்மென்ட் வேலைக்கு
போயிடறாங்க. அதே
மாதிரி கவர்ன்மென்ட் வேலை பாக்குற வரன் உசிதம் அப்டினு விளம்பரம் பண்ணி கலயாணமும்
பண்ணிடறாங்க. அதுக்கப்புறம் தான் கச்சேரியே ஆரம்பிக்குது.
ஒரே
ஊர்ல வேலை பாக்குற மாதிரி ரெண்டு பேருக்கும் அமையறது அப்படிங்கிறது 15 லட்சம் பேங்க் ல டெபாசிட் ஆகற மாதிரி
அபூர்வமான காரியம். ஒருத்தரு தெக்க இன்னொருத்தர் வடக்கனு வாழ்க்கை போகும். பல பேரு
அப்டி தான் ஓடிட்ருக்காங்க.
எனக்கு
தெரிஞ்சி ஒரு கேசுல அந்தம்மா கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில நர்ஸா வேலை பாக்குறாங்க.
இவரு அரசு பேருந்து கழகத்துல வேலை பாக்குறாரு. ரெண்டு பேரு வேலை பாக்குற இடமும்
கிட்டத்தட்ட 180 கிலோமீட்டர்
தூரம். ரெண்டு பேரும் அலைய வேண்டாம்னுட்டு நடுவாந்திரமா ஒரு லொகேஷன பாத்துட்டு
வீடு எடுத்துகிட்டாங்க. இப்போ அந்தம்மா 50 கிலோமீட்டர், அவரு
130 கிலோமீட்டர்ன்னு போய்ட்ருக்கு.
அதுவும் எப்படி. அப் அண்ட் டவுன் அவரு 260 கிலோமீட்டர் தினம் போய்ட்டு வராரு. அந்தம்மா வீடு வந்து சேர 7
மணி, அவரு 8.30 மணி. சாப்பிட்டு தூங்கி மறுநாள்
ஓட்றதுக்குத்தான் டைம் இருக்கும். ஒரு மாசத்துக்கு 5000 கிலோமீட்டர் மேல டிராவல் பண்ணுனா
எப்படியிருக்கும்.
இதுவாச்சும்
பரவால்ல. ஒருத்தரு 400 கிலோமீட்டருக்கு
அந்தப்பக்கம் வேல பாப்பாரு. எப்படின்னா அவங்க கன்யாகுமரி, இவரு திண்டுக்கல் பக்கம். மாசத்துக்கு
ரெண்டு முறை பாத்துக்கிட்டாலே அதிசயம்தான். இதுல எங்கேந்து ஒரு நார்மலா லைஃப லீட்
பண்ண. ஊருக்கு வந்துட்டு போறதே ஒரு போராட்டம் தான். மாசத்துக்கு ரெண்டு வாட்டி
வந்துட்டு போறாரே அந்த அங்கிள் யாருமா ங்கிற ரேஞ்சுல தான் புள்ளைங்க இருப்பாங்க.
குடும்பமா சேர்ந்து கோவிலுக்கு போறது, கடைக்கு படத்துக்கு போறது, ஷாப்பிங் பண்றது, அன்னன்னைக்கி குழந்தைகள் பேச வேண்டிய
விஷயங்கள் அப்டினு பல ஐட்டம் இந்த மாதிரி லைஃப் ஸ்டைல்ல மிஸ்ஸிங்.
இந்த
ஸ்டேட் கவர்ன்மென்ட் வேலை இப்டி இருக்குன்னா சென்ட்ரல் நிலைமை கேக்கவே வேணாம்.
அவரு வேற ஸ்டேட். இவங்க வேறே ஸ்டேட். வருஷத்துக்கு ரெண்டு தபா தான். என்னதுனு
கேக்கப்பிடாது.
கவர்மெண்ட்
வேலையாச்சே அப்படின்னு யோசிச்சிட்டு வேலையை விட்டு வெளியே வர முடியாது. வரவும்
தோணாது. இருந்து அனுபவிக்கவும் முடியாது. ஒரே ஊர்ல ரெண்டு பேருக்கும் வேலை
கிடைக்காதான்ற ஏக்கத்திலேயே கடைசி வரைக்கும் ஓடிப்போயிடும். எது எப்டியோ, மாசம் பொறந்தா துட்டு வருதுல்ல.
அப்புறம் என்ன புலம்பிகிட்டுனு சொன்னா நாம அதுக்கு எவ்ளோ விலை கொடுக்குறோங்கிறதும்
ரொம்ப முக்கியம்.
கால்
காசானாலும் கவர்ன்மென்ட் வேலைனு எவனாவது சொல்லிட்டு வரட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக