ரெண்டு வயசான ஆளுங்க இருக்காங்க, ஆடியன்ஸ்க்கு எமோஷன கடத்தனும், சென்டிமென்ட் சீன் பத்தல, அப்படின்னு யாரையாவது ஒரு ஆள அவுட் ஆக்கிடுவாங்க அப்படின்னு பார்த்தேன். அப்படி எல்லாம் நடக்காம சுபம் மங்களம் அப்படின்னு சொல்லிட்டு படத்தை முடிச்சிருக்காங்க.
அதே
மாதிரி அப்பாவை அடிச்ச உடனே, பயம்,
பயம் அப்படின்னு
பயந்துட்டு இருக்க பையனுக்கு டென்த் ஸ்டாண்டர்ட்ல படிச்ச ஜூடோ கராத்தே அது
மாதிரியான மார்ஷியல் ஆர்ட்ஸ் ஞாபகம் வந்து, கைய முறுக்கி நரம்ப சுருக்கி வில்லன
அடிச்சு வெளுக்க போறான் அப்படின்னு நினைச்சா, பரவால்ல ரொம்ப பிராக்டிகலா அந்த சீன
ஹேண்டில் பண்ணி இருக்காங்க. இதுக்கு முன்னாடி தமிழ் சினிமால இந்த மாதிரி
குடும்பத்தோட பாக்குற மாதிரி மூவி வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு தெரியல. ஆனா கடைசி
நேரம் வரைக்கும் பக்கத்தில் இருக்கிறவங்க கிட்ட லவ்வ சொல்லாம கடைசில சொல்ற
மாதிரியான கதை உள்ள ஒரு படத்தை எங்கேயோ தமிழ் சினிமாலையே பார்த்த மாதிரி ஒரு ஃபீல்
இருக்கு. சரி
எது எப்படியோ ரொம்ப நாள் கழிச்சு ஒரு பீல் குட் மூவி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக