ஆவசவியூகம்
தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஏழைப்பெண்ணை அடையத்துடிக்கும் முதலாளி, அவளை அவனிடமிருந்து தற்செயலாக காப்பாற்றும் ஒரு அநாதரவான இளைஞன், அந்த இளைஞனுடனான அந்த பெண்ணிற்கு ஏற்படும் மையல், அதனைத்தொடர்ந்து எழும் பகை, அதன் பின் நிகழும் கொலை, அந்த கொலையை அதனை பற்றிய விவரங்களை சாட்சிகளின் வழியே துப்புதுலக்கும் டாகுமெண்டரி அமைப்பில் கிளர்ந்தெழும் இந்த சினிமா கொஞ்சம்கொஞ்சமாக தொட்டுச்செல்லும் பரப்புகள் ஆச்சர்யமூட்டுகின்றன.
கேரள கம்யூனிசம், ஆணாதிக்கம், புயல், சுற்றுப்புறம், கார்ப்பரேட் கைதுடைப்பு, ஊடக விஷமத்தனங்கள், காதல், தாவரவியல், நீர் வாழ் உயிரினங்கள் என எங்கெங்கோ களமாடுகின்றன. சென்ட்ரிபியூகள் விசை போல வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் படத்தின் மையக்கரு சுயநலமிக்க மனித இனத்தினை கேள்வி கேக்கும் புள்ளியிலேயே அறைந்து நிற்கிறது.
நம்பத்தகுந்த ஒரு டாகுமெண்டரி போன்றதொரு தோற்றம் இந்த சினிமா பேசவந்த பொருளை வெகு எளிதாக பார்வையாளனிடம் கொண்டு சேர்க்கிறது. இவ்வாறு இந்த கதையை எப்படி சொல்லத்தோன்றியது என்று நீங்கள் வியக்கும் அந்த ஒரு புள்ளியே படத்திற்கு பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.
ஒரு satrical surrealistic black காமெடி genre movie. விருப்பமுள்ளவர்கள் துணிந்து இரண்டு மணிநேரங்களை விரயம் செய்யலாம். வியக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக