கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லன்னு சொல்ற மாதிரி அன்னைக்கு அவங்களுக்கு நேரம் சரியில்லைன்னுதான் சொல்லனும்.
வீட்ல அன்னைக்கு wife இல்ல. அதனால பிள்ளைங்க என்கிட்ட சாப்பாடு பண்ணி குடுங்க அப்படின்னு கேட்டாங்க. என்னடா இந்த சோழ பரம்பரைக்கு வந்த சோதனைனு 'என்ன பண்ணலாம்?' அப்படின்னு கேக்கும்போது நூடுல்ஸ் பாக்கெட் எடுத்து வந்து கொடுத்தாங்க.
சரி டூ மினிட்ஸ் தானே ரெடி பண்ணிடுவோம் அப்படின்னு நினைக்கும் போது எனக்குள்ள ஒரு கிறுத்துவமான யோசனை வந்தது. ரெண்டு பேரையும் 'சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க, நூடுல்ஸ் ரெடி பண்ணி வைக்கிறேன். அதுக்கப்புறம் சாப்பிடலாம்.' அப்படின்னு சொல்லிட்டேன்.
ரெண்டு பேரும் குளிச்சிட்டு வந்தாங்க. பையன் முதல்ல வந்துட்டான். ரெடியான நூடுல்ஸ கொஞ்சம் எடுத்து கொடுத்து 'நீ அக்காக்கு தெரியாம பின்னாடி போய் ஒளிஞ்சு உட்கார்ந்து சாப்பிட்டுக்கோ' அப்படின்னு சொல்லிட்டேன். அவனுக்கு அப்படியே புல்லரிச்சி போய்டுச்சு. ஒரு தட்ட எடுத்துட்டு கொஞ்சம் நூடுல்ஸ் எடுத்து போட்டுட்டு பின்னாடி போய் உக்காந்து சாப்பிட்டுட்டு இருந்தான்.
அவன சாப்பிட வச்சுட்டு நான் கிச்சன்ல நிக்கும் போது பொண்ணு வந்துருச்சு. இப்ப என் பொண்ணு கிட்ட சொன்னேன். 'தம்பிக்கு தெரியாம உனக்கு கொஞ்சமா நூடுல்ஸ் கொடுக்கிறேன். இதை நீ முன்னாடி போய் உக்காந்து அவனுக்கு தெரியாமல் சாப்பிட்டு வந்துரு. அவளும் குஷியாகிட்டு ஒரு தட்ட எடுத்துட்டு கொடுத்த கொஞ்சம் நூடுல்ஸ தட்டுல போட்டுட்டு முன்னாடி போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சுருச்சு.
இப்ப ரெண்டு பேருக்கும் அவங்கள ஸ்பெஷலா கவனிச்ச மாதிரி ஒரு feel. இப்ப பையன் சாப்பிட்டு முடிச்சுட்டு வந்தான். தட்ட கழுவிட்டு தெரியாத மாதிரி டிவி பாருன்னு சொல்லிட்டேன். பொண்ணும் சாப்பிட்டு முடிச்சிட்டு வந்தா. தட்டை பின்னாடி வழியா கொண்டு வர சொல்லிட்டு அவளையும் டிவி பார்க்க உட்கார சொல்லிட்டேன். இப்ப ரெண்டு பேரையும் பொதுவா கேட்டேன். 'ரெண்டு பேரும் சாப்பிடறீங்களா?. நூடுல்ஸ ரெண்டு பேருக்கும் ஷேர் பண்ணி தரேன்.' ரெண்டும் எதுவுமே தெரியாத மாதிரி தலையை ஆட்டுச்சுங்க.
இப்போ ஷேர் பண்ணி கொடுத்த நூடுல்ஸ ரெண்டு பேரும் சாப்பிட ஆரம்பிச்சாங்க. அவங்கள ஸ்பெஷலா கவனிச்ச மாதிரி feel பண்ண வச்சதால அவங்க கிட்ட சில பல வேலை வாங்கிட்டேன். அது மட்டும் இல்ல கொடுத்த நூடுல்ஸ்ல பீன்ஸ் கேரட் அப்படியெல்லாம் சேர்க்காமல் அவரைக்கா பொரியலையும் முள்ளங்கியும் கொஞ்சம் கொஞ்சம் வெட்டி போட்டு அந்த கிறுத்துவமான நூடுல்ஸ செஞ்சு வச்சு இருந்தேன்.
அதையும் டேஸ்டுனு நினைச்சு சாப்பிட்டுச்சுங்க அந்த பிள்ளைங்க. இதைத்தான் கார்ப்பரேட் காரன் பண்ணிட்டு இருக்கான். நமக்கு தெரியாம இன்னொருத்தனுக்கு போனஸ் கொடுக்கிறது, அவனுக்கு தெரியாமல் நமக்கு போனஸ் கொடுக்கிறது... ஆனா ரெண்டு பேருக்கும் ரொம்ப கம்மி கம்மியா கொடுத்துட்டு நம்ம முதலாளிக்கு ரொம்ப வேண்டப்பட்ட நம்ப வைச்சு வேலை வாங்கிக்குறான் பாருங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக