ஒரு தமிழ் படம். இப்பதான் ரிலீஸ் ஆச்சு. OTTல. படம் பேரு ‘விடியாத இரவு ஒன்று வேண்டும்’.
ஹீரோ பெயர், ஹீரோயின் பெயர் எல்லாம் தெரியல. டைரக்டர் யார் தெரியாது. ப்ரொடக்ஷன் கம்பெனி பெரியது கிடையாது. இருந்தும் இந்த படம் பாக்கணும் அப்படின்னு ஏன் உந்துதல் வந்ததுனா அந்த படத்தோட டைட்டில் தான். டைட்டில் பார்க்கும்போது ஏதோ திரில்லர் மாதிரி தெரிஞ்சது பார்க்கலாமே அப்படின்னு முடிவு பண்ணி பாக்க ஆரம்பிச்சேன்.
அதாவது நம்ம ஜாதக கட்டத்துல சனி உச்சத்தில இருந்து சடை பின்னிக்கிட்டு இருந்த நேரம்னு நினைக்கிறேன். அவ்வளவு புத்திசாலித்தனமா எடுத்து நம்மள சோதிச்சு இருக்காங்க. உதாரணத்துக்கு சொல்லணும்னா படம் ஸ்டார்ட் ஆன உடனே ஹீரோவும் ஹீரோயினும் ஒரு கார்ல டிராவல் பண்ணிட்டு இருக்கற மாதிரி ஒரு சீன். ஹீரோயின் ஹீரோவும் எங்க போய்ட்டு வராங்கன்னா டேட்டிங்க்கு. அதுவும் மகாபலிபுரம் போயிட்டு ஈசிஆர் ரோட்ல ரிட்டன் ஆயிட்டு இருக்காங்க. நேரம் பார்த்தீங்கன்னா நைட் பத்து மணி இருக்கலாம்
என்ன மாதிரியான சிட்டுவேஷன் அப்படின்னா அடுத்த நாள் காலைல ஹீரோயினுக்கு வேற யோரோடவோ நிச்சயதார்த்தம். அதுக்கு முதல் நாள் ஹீரோவை பத்தி நல்லா புரிஞ்சுக்கலாமே அப்படிங்கறதுக்காக ஒரு டேட்டிங். இப்போ ஹீரோயின் வீட்டில் இருந்து போன் அடிக்கடி வந்துட்டே இருக்கு. ‘எங்கம்மா இருக்க?’ அப்படின்னு சொல்லி அவங்க அம்மா கேட்டுட்டே இருக்காங்க ஹீரோயின் அந்த போனை பார்த்து டென்ஷன் ஆகி ‘டேய் சீக்கிரம் போடா சீக்கிரம் போடா’ன்னு ஹீரோ கிட்ட சொல்லிட்டே இருக்காப்ல
இந்த மாதிரியான ஒரு சிட்டுவேஷன்ல ஹீரோ வண்டியை ஓட்டிட்டு இருக்காரு. ஹீரோயினோட டார்ச்சர் தாங்காம ஈசிஆர் ரோட்ல வந்துட்டு இருந்தவரு இங்க ஒரு ஷார்ட்கட் இருக்கு அப்படின்னு சொல்லி நடுவுல ஒரு காட்டுல இறங்குறாப்ல. அப்படியே ஒரு திரில்லான ஒரு மியூசிக் வருது. கார் போய்ட்டே இருக்கு. அந்த அத்துவான காட்டுல, ஒரு இடத்துல வண்டியை நிப்பாட்டிட்டு ஹீரோ சுச்சு போறாரு. அந்த சுச்சு போற டைம்ல ரெண்டு திருடங்க கார்ல இருக்கிற பெட்ரோல ஒரு ட்யூப் போட்டுட்டு வாயை வைச்சு திருடியுறாங்க. ‘என்னடா’ன்ற லெவெல்ல இருந்துச்சு. சரி என்னதான் எடுத்து வச்சுருக்காங்கனு பாத்தேன்.
அது தவிர அந்த கேப்புல ரெண்டு பேய் உருவம் மரத்துல தெரிஞ்சு நம்ம ஹீரோயின பயமுறுத்துது. இப்போ ஹீரோ காருக்குள்ள வந்து பார்க்கும்போது ஹீரோயின் சீக்கிரம் வண்டி எடுன்னு டென்ஷன் பண்றாப்புல. ஹீரோ எரிச்சலாகி கார ஸ்டார்ட் பண்றாரு. கொஞ்ச தூரம் போன பிறகுதான் பாக்குறாரு. கார்ல பெட்ரோல் இல்ல. உடனே ரெண்டு பேரும் டென்ஷன் ஆயிடறாங்க. காரும் நின்னு போயிடுது இப்போ இறங்கி வெளியில நிக்கிறாங்க. யாராவது கிடைப்பாங்களானு பாக்குறாங்க. அப்போ ஹீரோ சொல்றாரு. ‘நீ இங்கேயே இரு. (அந்த அத்துவான காட்டுக்குள்ள). நான் அப்டியே மெய்ன் ரோட் வரைக்கும் போய்ட்டு தேடி பாத்துட்டு வரேன்’ அப்டின்னு சொல்றாரு. பாக்குற நமக்கே எரிச்சல் வரும்போது ஹீரோயினுக்கு வருமா வராதா? போட்டு காய்ச்சுறாப்புல.
அப்புறம் வண்டியில ஒருத்தரு வர, அவரு இவங்க கார்ல இருக்குற டயர பாத்துட்டு போலீசுக்கு ஃபோன்பண்ண, அப்புறம் போலீஸ் வர, அவங்க என்ன ரத்தம் யார கோல பண்ணினனு விசாரணைய ஆரம்பிக்க, அப்புறம் அவங்கள ஒரு பங்களாவுக்கு கூட்டிட்டு போக, அங்க இவங்கள உள்ள தங்க வைக்க, வெளில டூட்டிக்கு ரெண்டு PCய போட, உள்ள அவங்கள பேய் பயமுறுத்தனு ஒரு மாதிரியா ஜலபுலஜங்க் ரேஞ்சுக்கு படத்த கொண்டு போய்ட்டு இருக்காங்க.
இவ்ளோ தூரம் அத பாத்துட்டு இருக்கும்போது சட்டய கிழிச்சிட்டு ‘எனக்கு 15 லட்சம் கிடைச்சிடுச்சுனு’ தெருவுல ஓடலாங்கற மாதிரி ஒரு ஃபீல். அப்டி ஒரு மொக்கையான படம். கபீம்குபாம்னு சொல்லலாம். அப்போ பாருங்க ஒரு டயலாக்.
டைரேக்டரோட நகைச்சுவை உணர்வும், காண்பிடென்சும் அப்டியே காஃபியும் டிகாஷனும் கலந்த மாதிரி கொப்புளிச்சிட்டு வருது. என்னன்னா,
பேய் அவங்கள உள்ள ஒரு காட்டு காட்டிட்டு இருக்கு. ஹீரோவா தூக்கி பந்தாடி எரிஞ்சிடுச்சு. ஹீரோயின டார்கட் பண்ணுது. அப்போ ஃபோன் அடிக்குது. அதாவது சார்ஜே இல்லாத ஃபோன்ல கால் வருது. ஹீரோயின் பயந்து மிரண்டு நிக்கிறாப்புல. பேய் அந்த ஃபோன அட்டென்ட் பண்ண சொல்லுது. எல்லாமே அசரீரி டைப். ஹீரோயின் பயந்துட்டே அட்டென்ட் பண்ண, அந்த பக்கம் பேய் ஹீரோயின மிரட்டுது. நீங்க ரெண்டு பெரும் நிறைய தப்பு பண்ணிருக்கீங்க. அதனால நான் சொல்றத ஒழுங்கா கேளுனு மிரட்டுது.
இப்போ ‘ஒண்ணு ரெண்டு, மூணுனு நான் எண்ணுவேன். நீ என்ன பண்ணணும்னா’ அப்டினு பேய் கேப் விடவும், ஹீரோயின் ‘நான், நாழு, அஞ்சு, ஆறுனு கனிட்டினியு பண்ணனுமானு’ கேக்குறாப்புல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக