சிவா: வணக்கம் சார்.
ரஜினி : வணக்கம்.
வாங்க. விஸ்வாசம் படம் தூள். பிரமாதம் பண்ணீட்டிங்க.
சிவா : ரொம்ப நன்றி
சார். உங்களுக்கும் ஒரு கதை ரெடி பண்ணி வச்சிருக்கேன். நீங்க விருப்பபட்டீங்கன்னா
படம் பண்ணிடலாம்.
ரஜினி : ஓ அப்படியா.
ஆனா சிவா எனக்கு என்னன்னா பாருங்க, இந்த
ரஞ்சித், கார்த்திக்
சுப்புராஜ் அப்டி இவங்க கூடலாம் புதுசா
ஒர்க் பண்ணி
வித்தியாசமா ஒரு
டிராக்ல படம்
போய்ட்ருந்துச்சு. வயசுக்கு ஏத்த ஒரு கேரக்டர் மாதிரி கதை கொண்டுவந்தாங்க.
பரவால்ல. படம் ஓகேனு சொல்லலாம். அதுக்கப்புறம் இந்த டுப்பாக்கி எடுத்தாரே
முருகதாஸ், அவர்ட்ட
ஒரு படம் பண்ணலாமான்னு கேட்டேன். வேஷ்டிய பின்னாடி கிளிச்சிவிட்டுட்டு என்
இடுப்புல கட்டி விட்ட மாதிரி ஒரு படம் எடுத்து கொடுத்தார். இப்போ என்ன பண்றதுனு
தெரியாம முழிச்சிட்ருக்கேனா, அதான்
யோசனையா இருக்கு.
சிவா: அப்டிலாம்
பயப்படாதீங்க சார். உங்க ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு எப்பவுமே
கொடுப்பாங்க. அவங்கள நமபி தைரியமா ஒரு படம் எடுக்கலாம். அதுபோக இல்லாம, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் னு
நாலு படத்துல கத்துகிட்ட வித்தைய மொத்தமா இதுல இறக்கலாம்னு இருக்கேன் சார்.
ரஜினி: அப்டின்றீங்க.
சரி கதை சொல்லுங்க. கேப்போம்.
சிவா ரஜினியிடம் கதை
சொல்லுகிறார். அந்த பாவத்தை இங்கு எழுதுவது கபீம் குபாம் தண்டனையை பெற்று
தந்து விடும் என்பதால் தவிர்க்கபட்டிருக்கிறது.
கதை
கே(கெ)ட்ட பிறகு,
ரஜினி: ஒர்க் அவுட்
ஆகுமா. போன படமா தான் அப்பா பொண்ணு செண்டிமெண்ட் . இப்ப திரும்பவுமா?
சிவா : அதுல அப்பா
பொண்ணு. இதுல அண்ணண் தங்கச்சி. கீர்த்தி சுரேஷ் இப்போதான்
உடம்ப குறைச்சிருக்காங்க. அவங்கள புக் பண்ணிடலாம்.
ரஜினி : ஐ. அவங்க தான் எனக்கு ஜோடியா. பேஷ்.
பின்றீங்க.
சிவா : ஐயோ சார். அது
தான் உங்க தங்கச்சி.
ரஜினி: ஓஓ. கொஞ்சம்
உணர்ச்சிவசப்பட்டுட்டேன். அப்போ ஹீரோயின் யாரு?
சிவா: போன படத்துல
நடிச்ச நயன்தாரா போட்டுக்கலாம் சார். ஆனா வயசு வித்தியாசம் காரணமா அந்த படத்துலேயே
நயன்தாராவ போட்டதுக்கு கதைக்குள்ளேயே ஒரு சீன் வச்சி ஒட்டிருப்பாங்க. நான் அந்த அளவுக்கு பங்கம் வைக்கல. ஒரு
பிரென்ட், பேமிலி
பிரென்ட் மாதிரி, ஒரு
குழப்பமா கதைல கொண்டு வந்துடலாம். என்ன ரோல்னு யாருக்கும் தெரியாத மாதிரி. கடைசில
கீர்த்திய காப்பாத்தும்போது கூட, சூரிய
ஒரு தொட்டி ஆட்டோ கொண்டு வந்து இடிச்சி அப்டியே கண்டுக்காம கழட்டி விட்டுரலாம்.
ரஜினி : பென்டாஸ்டிக் சிவா. அப்புறம் என்ன ஸ்பெஷல்.
சிவா: குஷ்பு,
மீனா இவங்க ரெண்டு
பேரையும் கூப்ட்ருக்கேன்.
ரஜினி: மார்வெலஸ்.
சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா கொடுக்கறீங்க. அவங்களுக்கு என்ன ரோல்.
சிவா: அது எனக்கே
தெரியாது சார். கூப்டு வந்து சேலை கட்டி வுட்டு, ஒரு பாட்டுக்கு டான்ஸ் மாதிரி எதாவது அப்டி இப்டி ஆடி, படத்த இன்னோரு அரை மணி நேரம் ரொப்பிரலாம்
சார். அப்டியே படத்த ரிச்சா காமிக்கிறோம். கலர் கலரா வராங்க போறாங்க. அவ்ளோதான்.
ரஜினி : செம. வேற
என்ன ஸ்பெஷல் சொல்லுங்க.
சிவா : சூரிய
காமெடிக்கு கூப்டுக்கலாம்.
ரஜினி: போன படத்துல
யோகி பாபு. இந்த படத்துல சூரி. செம யூத்தா இருக்கும்ல.
சிவா : உங்களையே
யூத்தாதான் காமிக்கிறோம். அவரு வழக்கம்போல டங்கிலிஷ் பேசிட்டு கடுப்படிச்சிட்டு
இருப்பார். சாரி. காமெடி பண்ணிட்ருப்பார்.
ரஜினி : வேற என்ன
ஸ்பெஷல்.
சிவா: செமயா ஒன்னு
யோசிச்சிருக்கேன். குளப்புலி லீலானு ஒரு ஆர்ட்டிஸ்ட். உங்களோட
ஒரு நாலு வயசு கம்மி.
ரஜினி : நீங்க என்ன
சொல்லப்போறீங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன். அவங்கதான என்னோட அம்மா கேரக்டர்
பண்ணப்போறாங்க. கரெக்டா?
சிவா : இல்ல சார்.
அதையும் தாண்டி. பாட்டி கேரக்டர். இது எப்படி இருக்கு?
ரஜினி: பத்த
வைக்குறீங்களே சிவா. பட்டைய கிளப்புறீங்களே. வேற வேற சொல்லுங்க.
சிவா ஸ்டண்ட் சீன்களை
வரிசையாக விளக்குகிறார்.
ரஜினி : படம் புல்லா
ச்சும்மா பத்திக்கிட்டு எரியும் போல. அந்த லாரிலாம் எப்படி வெடிக்குது?
சிவா: எனக்கே
தெரியாது சார். வெடிக்க வைக்கிறோம். தீபாவளில. எதையாவுது எரிப்போம்.
ரஜினி: அப்புறம் வில்லன் பில்டிங்க்குள்ளேயே போய்ட்டு
இந்த 9.50,
10.10 மணிக்கு அலாரம் வச்சிட்டு கொல்றேனே. அது எப்படி. என்ன லாஜிக்.
எப்படி நான் வில்லனோட இடத்துல சேஃபா
இருக்குறேன். ரசிகர்கள் கேக்கமாட்டாங்களா?
சிவா: லாஜிக்கா. என்ன
ஜோக் சார். அதலாம்
நாம பாக்கலாமா. சும்மா
அப்புடியே படம் எடுக்க வேண்டிதான் சார். கதைல ஒரு விறுவிறுப்பு எப்படி கொண்டு
வர்றது. நீங்க ஒரு
பவுன் விஷயத்த மறந்துட்டீங்க.
ரஜினி: கரெக்ட். கரெக்ட். சரி, அந்த பில்டிங் மேல நின்னுட்டு கையிறு கட்டி ஒரு அடியாள தொங்க வைக்கிறோம். பட் நான் மேல கயிற
இழுத்தா அந்த ஆளு வெளில போனுமே. எப்படி கண்ணாடில வந்து மோதுறான்.
சிவா: சார். நீங்க
சொல்றது லாஜிக். பட் நம்ம பண்ணப்போறது மேஜிக். கயிறு கைல இழுக்கும்போது நீங்க வாய
கோணிட்டு சூப்பரா ஒரு எக்ஸ்ப்ரெஸன் குடுப்பீங்க. பாருங்க. அப்டியே க்ளாப்ஸ்
அள்ளும் சார்.
ரஜினி :
ஜமாய்ச்சுடலாம் போங்க.அப்புறம் சிவா இன்னோனு
கண்டுபிடிச்சிட்டேன்.அந்த லீலா கேரக்டர் எனக்கு பாட்டியா நடிக்கறதுனால தான்
காண்டாகி கீர்த்தியோட லவ்வ எண்ட
சொல்லாம வேற ஏதோ பொய் சொல்லி அப்டியே கதை வேற எங்கெங்கோ
போய், செம
ட்விஸ்டு சிவா
சிவா: ஆமா சார்.
பாய்ண்ட புடிச்சிட்டீங்க. தவிர
முத பாட்டா நம்ம SPB யோட பாட்டு. நாலு ஹீரோயின். ரெண்டு வில்லன். காமெடி அதகளத்துக்கு சூரி, ரெண்டு வில்லன். கொல்கட்டால சூட்டிங். அங்கங்க ஃபைட். உங்க அதிரடி டான்ஸ்.
60 ஷாட் மாதிரி லாரிய வெடிக்க வைக்கிறோம். இந்த கிழி போதுமா சார்.
ரஜினி : போன தடவ
வேட்டிய பின்னாடி கிழிச்ச மாதிரி படம் எடுத்தாங்க. இந்தத்தடவ நீங்க அண்டர்வெரோட ரோட்ல ஓடுற
மாதிரி படம் பண்ணப்போறீங்க. அப்டிதானே
சிவா : ஆமா சார்.
ஆமா.
ரஜினி: ஒரு நூறு கோடி
சம்பளம் போதும்.
சிவா: அவ்வளவுதான்
சார். சன் பிக்சர்ஸ் உள்ள வந்தாச்சு. மொக்கப்படம்னாலும் ஓட்டிடுவாங்க. கவலையே
வேண்டாம்.
எ பிலிம் பை சிவா .அண்ட் டீம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக