இந்திய
தேசிய மொழியில் ‘ஷைலி’ என்ற வார்தைக்கான அர்த்தம் ‘மொழி நடை’. ஒரு கதையையோ அல்லது சிறு பத்தியையோ படிக்கும்பொழுது, ஆதியோடந்தமாய் அதன் இணக்கத்தையும் சுவாரஸ்யத்தையும் சுவை கூட்டுவதில் இந்த
ஷைலியானது, ‘தாமரை சந்தானபாரதி?!!’ (கண்டுபிடிங்கோ) போல் முக்கிய பங்குவகிக்கிறது. போலவே ஒரு திரைப்படத்தை பார்க்கும்
ரசிகனை, தொடக்கம் முதல் இறுதி வரை கட்டிபோடுவதற்கு, ஒரு நல்ல திரைக்கதை அல்லது காட்சியமைப்பு இன்றியமையாததாகிறது. அந்த வகையில் GVM, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வில் சொல்லி அடித்திருக்கிறார். By far the best screenplay written
by gvm (Imho).
இருவருடங்களுக்கு
முன்பு அறிமுகபடுத்திய ‘மறுவார்தை
பேசாதே’ பாடல் வெளியீட்டில் தொடங்கிய ENPT க்கான எதிர்பார்ப்பு தங்கம் விலை போல ஏற்றத்தில் இருந்தது. ஆனால் இரண்டு வருடங்களில்
வெளியீடு, தள்ளிவைப்பு, போசன் மோஸ்டர், டீசர், டிரைலர், டிராக்டர் என்று
y=sinx சைனுசாய்ட் கர்வ் போல் ஏற்ற இறங்கத்துடன் உருமாறியது.
‘மறுவார்தை பேசாதே’ என்ற இந்த ஒரு பாடலை
மட்டுமே தனியே எடுத்து கூராய்வு செய்து Doctorate பட்டமே வாங்கலாம்.
அவ்வளவு மெனக்கெடல்கள். ‘விசிறி’ க்கு ஒன்று, ‘எதுவரை போகலாம்’ க்கு ஒன்று என்று
மொத்தம் மூன்று டாக்டரேட் !!!. ‘மறுவார்த்தை பேசாதே’ பாடலிற்கு தர்புகா சிவா கொடுத்த உழைப்பை, காட்சிபடுத்துதலில்
GVM கோட்டை விட்டிருக்கின்றார். UnJustified. இந்த பாவியை மன்னியும் பிதாவே.
படம்
வெளியீட்ட பின்பு, பரவலான ஒரு
நெகடிவ் கருத்தாக ‘வாய்ஸ் ஓவர்’ கான்செப்ட்
சொல்லப்பட்டது. ஆனால் என்னை பொருத்தவரை படத்திற்கான மிகப்பெரிய பிளஸ் இந்த வாய்ஸ் ஓவர்
தான். அதுவும் சிம்மக்குரலோன் (??!!!) கௌதமின் குரலை விடுத்து
தனுஷின் குரலை தேர்ந்தெடுத்த ஒரே காரணத்திற்காக ‘கர்த்தர் உம்மை
ஆசீர்வதீப்பாராக”.
நான்லீனியர்
ஸ்டைலில் படத்தை பிசிரில்லாமல் கோர்த்து காட்சிபடுத்திய விதத்தில் இயக்குனருக்கு ஒரு
ராயல் சல்யூட். படம் முழுவதுமே தனுஷ் தான். ஸ்கிரீன் பிரசன்ஸ் அட்டகாசம். ‘எதுவரை போகலாம்’ என்ற பாட்டில்
வரும் ஏரியல் ஷாட், மற்றும் ‘விசிறி’ பாடலின் தொடக்கத்தில் தனுஷ் போடும் ஸ்டெப் என அவ்வளவு(ம்) க்யூட்.
ஆரம்பத்தில்
லேகாவிடம் வழிவதும் பின்பு வரும் பாடல்களில் எல்லாம், காதலியிடம் தான் கற்ற அறுபத்தினான்கு வித்தைகளையும்
காட்டுவதும் என ரொமாண்டிக்கில் ரியல் லைப் தனுஷ் போல (சுச்சி-மலேஷியா-மூனுஷா) அதகளம் செய்திருக்கிறார்.
ஆக்ஷன் ஸீக்வன்சில் ஆட்டோ பைலட் மோட், பீஸ்ட் மோட், டெத் விஷ் மோட் என்று வாய்ஸ் ஓவருடன் வெரைட்டி விருந்து. 4 க்கு 4 கேரவன்
டாய்லட்டாகட்டும் அல்லது மும்பை பிளாட்டில் இருக்கும் லிப்ட் ஆகட்டும், அதரலாக் மற்றும்
கத்திக்குத்து சண்டையை காட்சிபடுத்திய விதம் அருமை.
கார்த்திக்
சுப்புரஜ்ஜுக்கு கைகூடாதது, சுந்தர்சிக்கு கைகூடாதது GVMக்கு கைகூடியிருக்கிறது.
மேகா ஆகாஷையே அழகாக காட்டியிருக்கிறார். வேல
ராமமூர்த்தியை ஐ.ஏ.எஸ். அதிகாரியை போல் அண்டர் யூஸ் செய்திருக்கின்றனர்.
காம்பவுண்ட்
கேட் காதல், VTV கேரளா குளம், சென்னை மத்தியாகைலாஷ் FOB, GVM வீடு என பழைய படங்களின் டெம்ப்ளேட் காட்சிகள் நமது
மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதியில் நினைவுக்கு வந்தாலும், தர்புகா
சிவாவின் கவர்ந்திழுக்கும் பின்னணி இசை அதை மறக்கடிக்கின்றது.
எனை
நோக்கி பாயும் தோட்டா - The
finest creation from GVM.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக