மணிகர்னிகா

படைப்பாளி யார் என்ற சர்ச்சையை தாண்டி ஒரு தரமான வரலாற்று நிகழ்வை தயாரிக்க முன்வந்ததற்கே கங்கனாவுக்கு மிகப்பெரிய சல்யூட். 16 வயதில் திருமணமாகி 22 வயதில் விதவையாகி பின் 30 வயதில் வீரமரணம் அடைந்தவர் லக்ஷ்மி பாய். அதற்கு உருவம் கொடுத்து சற்றும் குறைவில்லாது, எப்பொழுதும் வீரத்தை முகத்தில் காட்டும் அசாதாரண நடிப்பு. சேலையின் முந்தனையை தூகீ போட்டு மிடுக்குடன் வீரநடை போதும் அந்த ஒரு காட்சியே போதும் கங்கனாவின் அற்பணிப்பான நடிப்பிற்கு. ஒரே வார்தையில் சொல்ல வேண்டும் என்றால் ஆக்ரோஷமான நடிப்பு. FEROCIOUS.

சர்வம் தாள மயம்

ராஜீவ் மேனனின் மற்றுமொரு நாகரீகமான படைப்பு. ஜி.வி. பிரகாஷ் பொருத்தமான தேர்வு. நடிப்பில் மிளிர்கிறார். தொடுகறியாக நாயகியை உபயோகபடுத்தியிருப்பது ஒரு குறை. படம் முழுவதும் நெடுமுடி வேணுவின் சாம்ராஜ்யம். நடிப்பில் மிரட்டுகிறார். இரண்டு மணிநேரம் இருபது நிமிடங்கள் போனதே தெரியவில்லை எனும் அளவிற்கு திரைக்கதையில் விறுவிறுப்பு. பட்த்தின் இறுதியில் ஜி.வி வாசிக்கும் அந்த மிருதங்க காட்சிக்காகவே படம் பார்க்கலாம். படம் முடியும் பொழுது நீங்கள் ஒரு மிருதங்கத்தை வாங்கலாமா என்று எண்ணினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. ஒரு தரமான மியூசிக்கல் சினிமா.களவு

புதுமுக இயக்குனரின் படைப்பு. ஸ்டார் காஸ்டிங்க் இல்லையென்றாலும் தன் எழுத்தை மட்டுமே வைத்து களத்தில் இறங்கி சொல்லியடித்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷன், வக்கீல் காட்சிகளெல்லாம் தரம் ரகம். திரைக்கதையே நாயகன். ஆரம்பம் முதல் இறுதி வரை சற்றும் தொய்வில்லாது நகரும் ஒரு ஆகச்சிறந்த மிகவும் under estimate செய்யபட்ட தவறவிடக்கூடாத படம்.

LKG

RJ பாலாஜியின் கதை திரைக்கதை என்று டைட்டில் கார்டில் பார்க்கும்போதே ஆர்வம் வந்துவிடுகிறது. ஆரம்பித்த முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை சமகாலத்திய அரசியலை எள்ளி நகையாடியிருக்கிறார். அந்த துணிவிற்கே பாலாஜிக்கு ஒரு சபாஷ். பாலாஜி தன் நடிப்பை பற்றி கவலைப்படாது திரைக்கதையை  நம்பி களமிறங்கியிருக்கிறார், இரண்டாம் பாதியில் திரைக்கதையில் தொய்விருந்தாலும் இறுதியில் பேசும் அந்த ஐந்து நிமிட காட்சி வாக்களிக்க காதிருக்கும் நம் எல்லோருக்குமானது. நெத்தியடி ஆரமபம்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read