மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு தலைவரின் (சுஜாதா) நான்கு குருநாவல்கள் 400 பக்கங்கள் படிக்கும் வாய்ப்பு ஒரு பயணத்தில் அமைந்தது. இந்த வாய்ப்பை அமைத்து கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. முதல் குறுநாவலின் கரு “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்“. குறளுக்கேற்ப ஒரு ஸ்கிரிப்ட்.. இரண்டாவது குறுநாவல் பழிக்கு பழி ரத்ததிற்கு ரத்தம் போன்று ஒரு வெஞ்சியன்ஸ் கதை. இவை இரண்டையும் விட மிகவும் ரசிக்கவைத்தன அவரின் மாற்று இரு குருநாவல்கள். இரண்டுமே அடல்டரி கலந்தவை.


மூன்றாவது நாவலின் தலைப்பு “ஓடாதே”. பெயருகேற்றார் போல் நாயகனும் நாயகியும் ஓடி கொண்டே இருக்கின்றனர். ஏன் துரத்துகிறார்கள், எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலேயே ஓடுவது இன்னும் சிறப்பு. நாம் வாழ்கையில் தினமும் ஓடிக்கொண்டிருப்பதை போல. தேனிலவுக்கு கிளம்பியவர்களை துரத்தும் போலீஸ், அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து ஓடும் ஜோடி, அங்கங்கே அவர்கள் இணைய முற்படும் நேரங்களில் எல்லாம் கதவைதட்டும் போலீஸ் என்று நாவல் முழுவதும் அதகளபடுத்தியிருக்கிறார். வசனங்கள் முழுவதும் இளமை கொப்பளிக்கிறது. உதாரணத்திற்கு “ஏங்க, இதெல்லாம் கனா போல இருக்குது” என்று மனைவி சொல்ல “ஏழுப்பிடாதே” என்று அடுத்த டயலாக்.

நான்காவது நாவல் “விரும்பி சொன்ன பொய்கள்”. கிறிஸ்டோபர் நோலனின் “இன்ஸெப்ஷன்” படத்தில் இறுதியில் வருமே டொட்டம் என்று, அது போல முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறார். இந்த நாவலை எழுதிய வருடம் 1989. அப்பொழுதே ஒரு 25 வருடங்கள் முன்னோக்கி யோசித்திருக்கிறார். மணிரத்னம்  கட் டயலாக்ஸ் தந்தை என்றால் இவர் மணியின் குரு  எனலாம் . இரண்டு நாவல்களிலுமே காதல் உணர்ச்சி மிகை. விரசங்கள், சல்லாபங்கள் என்று ஆங்காங்கே தூவியிருக்கிறார். நாவல் எழுதும்போது சுமாராக அவருக்கு ஐம்பத்தேழு வயது இருக்கலாம். வசனங்கள் முழுவதும் இருபது வயதிக்குடையது. கவிதையில் வாலிபக்கவிஞர் வாலி என்றால் இவர் உரைநடையில் வாலி.

இதில் சிறப்பு “ஓடாதே” நாவலை திரைப்படமாக எடுக்க விழைந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு படத்திற்கு ஓடாதே என்று பெயர் வைக்க முடியாது என்பதால் டைட்டிலை மாற்ற சொல்லி கேட்டிருக்கிறார்கள். தலைவர் முடியாது என்பதால் இந்த நாவல் காப்பாற்றபட்டிருக்கிறது என்று ஆசுவாசுபடுத்திருக்கிறார். . ஏன் காப்பாற்றபட்டிருக்கிறதென்றால் “கரையெல்லாம் செண்பகப்பூ” நாவலையும் படத்தையும் ஒரு முறை பார்க்கவும்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read