Raazi

நாயகியாக அறிமுகமாகிய இரண்டாவது படத்திலேயே அசத்தியவர் அலியா பட். படத்தின் பெயர் ஹைவே. அவரது மற்றொரு படமான உட்தா பஞ்சாப் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கராஸி என்றொரு படம் பார்க்க பரிந்துரை கிடைத்தது. What a performance என்று வாய்பிளந்து சொல்லுமளவிற்கு நடிப்பை கொட்டியிருக்கிறார். கல்லூரி மாணவியாக, RAW ஏஜெண்டாகமனைவியாகமருமகளாககைம்பெண்ணாக என முழு படத்தையும் தாங்கியிருக்கிறார். RAW ஏஜெண்டாக பாகிஸ்தான் ராணுவ மேஜரின் அறைக்குள் சென்று திருடும்போதுஎங்கே மாட்டிக்கொள்வாரோ என்று நமக்கே பதட்டம் ஏற்படுகிறது. 1971 இல் காஸி அட்டாக் தொடர்பான முக்கிய தகவல்களை சேகரிக்க தன் வாழ்க்கையைதொலைத்து அதை நாட்டுக்காக அற்பணித்த ஒரு காஷ்மீரி பெண்ணின் நிஜக்கதை என்பதும் ஆச்சர்யமளிக்கிறது. இதுபோன்று பல பேர் தெரியாத நபர்களின் அறியப்படாத அற்பணிப்புக்காக இக்கதை சமர்ப்பணம் என்று எண்ட்கார்டுடன் படம் முடிகிறது. ‘ஹே வதன் ‘பாட்டு இன்னும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.Pa.Paandi

பவர் பாண்டி என்ற துணையற்ற முதியவரின் வாழ்க்கையை அவர் பார்வையில் படமாக்கிய இயக்குனர் தனுஷி ஆச்சர்யபடவைக்கிறார். ஆரம்ப காட்சியில் பிரசன்னாவின் நடிப்பும் கோவமும் செயற்கைத்தன்மையாக இருந்தாலும் ஃபிளாஷ் பேக் காட்சியில் படம் வேறு டோனில் பயணிக்கிறது. பாண்டியாக ராஜ்கிரண் நடிப்பு பிரமாதம். நல்லி எழும்பு போல் கடித்து விளாசியிருக்கிறார். பக்கத்து வீட்டு ரின்சன் சொல்வது போல் சில்வண்டு வயசில் செய்யும் சேட்டையெல்லாம் ராஜ்கிரண் 60 வயதில் செய்கிறார். அதிலும் ரேவதி வீட்டு கதவை தட்டி “ஏன் ரிப்ளை பண்ணல?” என்று கேட்கும் சீன் அலம்பல் அட்ராசிட்டி. துணையற்று வாரிசுடன் இருக்கும் முதியவிரின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் அதை ஒரு திரைகதையாக படைத்ததில் தனுஷ் பரிமளிக்கிறார். “நம்ம அவங்க வாழ்க்கையா?’ என்ற ஒரு வசனம் ஒரு பானை சோற்றுக்கு சமம். பதம்.

Rajesh kumar

தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்கள் ஒரு தனிதினுசு. 6070 களின் காலகட்டத்தில் ஒரு லேண்ட்லைன் போனுக்காக காத தூரம் ஓடு நாயகி என அது ஒரு தனி வெரைட்டி. கதவு திறந்தது கை திறந்தது க்ரைம்சங்கர்லால் துப்பறிகிறார் என அவர் நாவல்கள் ஒரு சுகமான நாஸ்டால்ஜியா. க்ரைம் நாவல்களில் என்னை பொறுத்தவரை முடிசூடா மன்னன் ராஜேஷ் குமார்தான். பதினைந்து வருடங்களுக்குப்பிறகு அவரது புத்தகம் மீண்டும் கவர்ந்திழுக்கிறது. இத்தனை நாவல்கள் எழுதியிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒரு தனி ராகம். சுகம். கருவை எங்கிருந்து பிடிக்கிறார் என்பது சித்த ரகசியம் போல. அவருடைய க்ரைம் நாவல்களின் விறுவிறுப்புக்கு முதன்மையான காரணம் அதன் நடை. விவரணை சுருக்கமாகவும்கேள்வி பதிலுடன் சம்பாஷணைகள் அதிகமாகவும் இருக்கும். மேலும் முதல் அத்தியாயத்துக்கும் இரண்டாவது அத்தியாயத்துக்கும் கொஞ்செமேனும் சம்பந்தமில்லாது ஆரம்பித்துகடைசி அத்தியாயத்தில் இரண்டுக்கும் ஒரு முடிச்சை போட்டு நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதில் கில்லி நம் க்ரைம் நாவல்  மன்னன். இப்பொழுது எழுதும் பாக்கெட் நாவல்களில்  கூட புது டெக்னாலஜியுடன் கலந்தடிக்கிறார்.

கொசுறு

அக்கடானு நாங்க உடை போட்டா என்ற பாடல் சுவர்ணலதா குரலில் ஒரு ரீங்காரம். ரஹ்மானின் துள்ளல் இசைசுவர்ணலதாவின் குரல்பின்னின்று ஆடும் ரிச் கேர்ள்ஸ் மற்றும் ஊர்மிலாவின் நடன ராஜ்ஜியம் என்று முழுவதுமாக  வியாபித்திருக்கும் பாட்டில் அதையெல்லாம் ஓரம்கட்டி வாயசைவு இல்லாமல் நடன அபிநயங்களில் நம்மை கண்ணசைக்க விடாமல் அசால்டாக ஸ்கோர் செய்திருப்பார் கமல். பல்லவிக்கும் சரணத்திற்கும் நடுவில் இருக்கும் conjoining இசையில் கமல் போட்டிருக்கும் ஸ்டெப்ஸ்மற்றும் முக்கி முக்கி முத்தெடுத்தேன் முக்காலா என்ற வரியில் தன் டிரேட்மார்க் ஸ்டெப்ஸ் அன்று அதகளபடுத்தியிருப்பார். அதான் கமல்.  

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read