1988 இல் வந்த ஜப்பானிய அனிமேஷன் படம். சிலாகிக்கும் அளவுக்கு பெரிய கதை இல்லை. ஆனால் உணர்வுகளை கடத்திய விதத்தில் ஒரு feel good movie. 

கதை இதுதான்.  தந்தையும் இரு மகள்களும் ஒரு புது இடத்திற்கு குடிபெயர்கின்றனர். அக்குழந்தைகளின் தாய் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு அருகில் உள்ளது அவ்வீடு. அவ்விரு குழந்தைகளும் அருகில் இருக்கு காட்டுக்குள் வசிக்கும் Totoro என்ற ஒரு வன பூதத்தை நட்பாகி கொள்கின்றனர். தாயின் பாசத்தை அதனிடம் உணர்கின்றனர். அப்பூதம் இவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது. தங்கையின் பாத்திரப்படைப்பு ஈர்க்கும்படியாக உள்ளது. அம்மையின் பிரிவு தெரியாது அக்கா பார்த்துக்கொள்கிறாள். அப்பாவின் கதாபாத்திரம் ஒரு காட்சியில் கூட கோவப்படவில்லை. அம்மாவின் திரும்புதலை எதிர்நோக்கி காத்திருக்கும் அந்த இரு குழந்தைகளுக்கும் ஒரு சேதி வருகிறது. உடல் நிலை காரணமாக அவர்களின் தாய் மருத்துவமனையில் மேலும் சில தினங்கள் இருக்க நேர்கிறது. அதனால் இருவரும் ஏமாற்றமடைகின்றனர். தன் வருத்தத்தை தன் தங்கையிடம் கோவமாக வெளிபடுத்துவதும்அதற்கு அவள் தங்கை உன்னை வெறுக்கிறேன் என்று கூறுவதுமாக சிறு குழந்தைகளின் ஏமாற்றம்அதனை கையாளத்தெரியாது அவர்கள் தடுமாறும் விதம் என் முப்பது வினாடிகள் அமைக்கபட்டிருக்கும் அந்த ஒரு காட்சி ஒரு சோறு பதம். பல இடங்களில் ஜப்பானின் மினிமலிச கான்செப்ட் தெரிகிறது. நுகர்வு கலாச்சாரத்தில் நாம் எவ்வளவு தூரம் சூழலை அழிக்கிறோம் என்பதை உணரமுடிகிறது. காதிற்கு இரைச்சலில்லாத பின்னணி இசை. கண்களுக்கு உறுத்தாத கிராஃபிக்ஸ் என்று பதமாய் வெந்திருக்கிறது. பலமுறை பார்க்கலாம். Hey Lets go என்ற பாடலை முணுமுணுக்கலாம்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read