தக்காளியெல்லாம் இப்போது ஒரு தினுசாக உருண்டையாக (போல்) இருக்கிறது. முன்பெல்லாம் நாட்டு தக்காளி என்றோ அல்லது பெங்களூர் தக்காளி என்றோ கிடைக்கும். நாட்டு  தக்காளிக்கு ஒரு வடிவம் கிடையாது. உருண்டையாக முளைத்த தக்காளியை இருபக்கமும் கையை வைத்து பிடித்து இழுத்தால் போல் ஒரு வடிவத்தில் இருக்கும். பெங்களூர் தக்காளி வெர்னியர் கேலிப்பரில் அளவெடுத்து செய்தது போல் இருக்கும். நாட்டு தக்காளியில் விதையுண்டு. பெங்களூரில் விதை கிடையாது. (அவ்வளவாக) அதுதான் BT. ஆனால் இப்போது கிடைக்கும் தக்காளியோ உருண்டையும் இல்லாது நாட்டு தக்காளியுடன் ஒரு கலப்பு செய்து கொஞ்சம் விதையுடன் கிடைக்கிறது. சொல்லவருவது யாதென்றால் நாட்டு தக்காளியை கொலை செய்துவிட்டோம்.அதுமட்டுமில்லாது, எந்த காய்கறியும் பிரிட்ஜில் வைக்க மறந்துவிட்டால் வாடுவதில்லை. தேமே என்று கல்லு போல இருக்கிறது. (கெடாமல்). அவ்வளவும் விஷம். பூச்சிக்கொல்லி மருந்து எனும் பேரில் விஷம். காய்கள் சாவதில்லை. நமது சந்ததிகள் கண் முன்னே மலடாகிக்கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் வாங்கும் எந்த காயும் பூச்சிமருந்து தெளிக்காமல் வளர்க்கப்படுவதில்லை. இல்லையெனில் அவ்வளவு பெரிதாகவோ அவ்வளவு நாட்கள் தாங்கும் சக்தியுடன் அவை வளரமுடியாது. ஆர்கானிக் பற்றி ஐடியா இல்லை. அதுவும் ஈமுக்கோழி வகையரவா என்ற சந்தேகம் கிளம்புகிறது.

இருபது வருடத்திற்கு முன்பு ஓட்டை ஓட்டையாக இருந்த கீரை என்றால் ஒதுக்கிவைத்துவிடுவோம்.  இப்போது அதுபோல் ஓட்டை உள்ள இலைகளை பார்ப்பதே அபூர்வம். புழு பூச்சிகளை அண்ட விடுவதில்லை. தனக்கு மட்டுமே என்ற மனிதனின் எண்ணம் மெதுவாக சூழலை அழித்து கொண்டிருக்கிறது. அழிவது சுற்றுசூழல் அல்ல. மனிதன் மட்டுமே. அதில் தான் மட்டுமே வாழ நினைப்பது நாம் நம் அடையாளத்தை தொலைக்க ஆரம்பிக்கும் தருணம். நீர் சூழ் உலகு என்பது போல் நன்செய் புன்செய், நல்லவை கெட்டவை, என புழு பூச்சி முதல்கொண்டு கொத்தி கொள்ளும் பிளாக் மாம்பா பாம்பு வரை எல்லாம் சேர அமைந்ததே இவ்வுலகம். ஏதேனும் ஒன்றை அழிக்க நினைத்தால் Eco Balance தொந்தரவு செய்யப்படுகிறது. இங்கு இருப்பதை பாதுகாக்க மறந்துவிட்டு பேரண்டத்தில் பூமி போல் ஒன்றை தேட ஆரம்பித்துள்ளோம்.  சுத்த வெளியில் ஆயிரம் சூரியன் இருக்கலாம். ஆனால் பூமி ஒன்றுதான்.

கத்திரிக்காயில் புழு வந்ததென்றால் சந்தோசப்பட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் அணில் கடித்த கொய்யபழமும் புழு கடித்த கீரையும் நமக்கு என்றுமே கெடுதல் செய்ததில்லை.


Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read