தான் பார்த்து கேட்டு ரசித்து ருசித்து அனுபவித்த ஒன்றினால் உருவாக்கபட்ட படைப்பு ஒன்று மட்டுமே என்றும் தன்னிறைவு பெறுகின்றது. அதனுடன் சரிசதவித கலவையில் மிகா கற்பனையும் கலந்து  பார்வையாளனை ஈர்க்கும் வகையில் படைக்கும்  ஒரு படைப்பாளி முழுமை அடைகிறான். அவ்வகையில் இயக்குனர் பிரேம்குமார் திரைக்கதை எழுதுவதற்காக எடுத்து கொண்ட ஒருவருட காலத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். கதையை திரைக்கதையாய் மாற்ற 96 படம் ஒரு இலக்கணம் என்றே சொல்லலாம்.

தன்னிடம் பயிற்சி பெறுபவர்களிடம் அதட்டுவதும் , முன்னாள் காதலி முன்பு பெட்டி பாம்பாக அடங்குவதும் என விஜய் சேதுபதி அண்டர்ப்ளேவில் ஸ்கோர் செய்கிறார்.  இரண்டே உடைகளில் வந்து ஒரு படத்தில் முத்திரை பதிப்பது என்பது 18 வருடமாக நடிக்கும் நாயகிக்கு பெரும் சவால். அதை அநாயசமாக கடந்துவிடுகிறார். பக்ஸ், முருகதாஸ், தேவதர்ஷினி என பாத்திரப்படைப்பும் அதற்கேற்ற சிறு வயது நடிகர் தேர்வும் ஆகப்பொருத்தம். பக்ஸ், முருகதாஸ், விஜய் என்று மூன்று பேரிடமுமே விகல்பமில்லாத நட்பை வெளிபடுத்தி, தேவதர்ஷினி இயல்பாக பரிமளிக்கிறார்.சற்றும் மிகையில்லாத உறுத்தாத வசனங்கள், அதிராத ஒலியமைப்பு,கதையோட்டதினூடே செல்லும் பாடல் வரிகள் மற்றும் காட்சிகள் என குழுவின் அபரிமிதமான உழைப்பு படம் முழுவதும் விரவிகிடக்கின்றது.
பிளாஷ்பேக்கில் ராகதேவனின் பாடல்கள் மற்றும் அதனை பாடிய குரலும் நம்மை கட்டிபோடுகின்றன.

த்ரிஷாவின் கணவர் யார், விஜய் சேதுபதியின் குடும்பம் என திரைக்கதைக்குத்தேவையில்லாத விவரங்களை லாவகமாக தவிர்ததில் இயக்குனர் பிரேம்குமார் நம்பிக்கையளிக்கிறார்.

திருமண பந்தத்தின் பிறகு தன் பழைய காதலை எல்லை மீறாது இருவரும் பல இடங்களில் தடுமாற்றத்துடன் வெளிபடுத்திய விதம், இறுதியில் வரும் ஏர்போர்ட் காட்சிகளில் வார்தைகள் பரிமாறாமல் கண்களால் உணர்வுகளை பரிமாறிக்கொண்டதில் என நடிப்பில் வேறு பரிமாணத்தை தொட்டிருக்கின்றனர் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும்.

ஹோட்டல் ரூமுக்கு சென்ற பின் விஜய் சேதுபதியை த்ரிஷா போனில் அழைப்பது, யமுனை ஆற்றிலே பாடல் காட்சி, கல்லூரி வாசலில் இருவருடைய கோணத்திலும் ராஷமோன் பாணியில் கதையை விவரித்தது என ஒவ்வொரு ஃப்ரேமிற்கும் ஊணாய் உழைப்பை கொட்டியிருக்கிறார் பிரேம்குமார்.


Best Movie of 2018.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read