படம் பார்த்த அனைவருக்கும் ஏற்படும் ஒரு அதீத உணர்வு-அதன் பிரமாண்டம் தரும் ஆச்சர்யம். ராஜமௌலியின் கதை சொல்லும் திறன் ஊரறிந்ததே. எடுத்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். கடைசியாக வந்த நான் ஈ திரைப்படம் ஒரு ஈயை வைத்து இப்படியும் கதை சொல்ல முடியுமா என்று அனைவரையும் மூக்கின் மீது விரலை வைக்க வைத்துவிட்டது. அதுவே பாகுபலியின் மீது சொல்லொன்னா எதிர்பார்பை ஏற்படுதிவிட்டது. எதிர்பார்த்ததுக்கு மேலேயே எகிறி அடித்திருக்கிறான் பாகுபலி.தன் அப்பாவிடம்  கதையை கேட்டு அதற்கு பாத்திர படைப்பு கொடுத்து அவற்றை திரையில் உயிரளித்து கிராஃபிக்ஸில் பிரமாண்டம் என ஆதி முதல் அந்தம் வரை ராஜமௌலி கொடுத்திருக்கும் அற்பணிப்பு அளப்பரியது. எங்கு கதையை ஆரம்பிக்க வேண்டும் எந்த இடத்தில் முதல் பகுதியை நிறைவு செய்ய வேண்டும் எதில் எண்ட்கார்ட் போட்டு ரசிகனை கட்டிபோடவேண்டும் என்று அனைத்து வித்தையையும் அறிந்துள்ளவர் ராஜமௌலி. அதற்கு சற்றேனும் குறைவில்லாமல் திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு காட்சியேனும் தொய்வில்லாமல் நகர்கிறது.

முதல் பகுதியின் அறிமுகத்தில் தமிழ் மக்களுக்கு பிரபாஸ் அவ்வளவாக பரிசியமில்லாத முகம். ஆனால் படம் முடிவதற்குள் ரசிகனின் மனதில் பாகுபலியாக சிம்மாசனமிட்டு அமர்ந்துகொள்கிறார். என்ன ஒரு உடற்கட்டு. படத்திற்காக ஒன்னரை கோடி அளவில் பிரபாஸுக்கு ஒரு GYM ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார் ராஜமௌலி. ஒரு படத்திற்கு மூன்றரை வருடம் என்று முழுதாக directors’ hero வாக தன்னை அற்பனித்துள்ளார். ஆண்டாண்டு காலத்திற்கும் பிரபாசின் கேரியரில் இது மின்னிக்கொண்டிருக்கும்.


படத்தின் அடிநாதமே கிராபிக்ஸ் தான். முதல் பகுதியில் அருவியில் ஆரம்பித்ததில் சரி,
 ஷிவுடு மலையேறி ஒரே தாவலில் அம்பெய்து அதன் மூலமாக மலையின் உச்சியில் ஏறியது என்று ராஜமௌலியின் கற்பனைக்கு சற்றேனும் குறைவில்லாமல் ஈடு கொடுத்திருக்கின்றது கிராபிக்ஸ் டீம். காலகேயர்களுடன் போர் காட்சிகள், போர் தந்திரம், ஒரு புது மொழி,மகிழ்மதியின் பிரமாண்டம், பல்லாலதேவனின் வானுயர்ந்த சிலை என எல்லாமே இரண்டாம் பாகத்திற்கு ரசிகனை ஆவலோடு காத்திருக்கசெய்துவிட்டது. இந்தியா வரலாற்றில் எந்தவொரு படத்திற்கும் இவ்வாறான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கவும் நிகழ்வில்லை. இரண்டையும் ஒரு சேர அடித்திருக்கிறான் இந்த பாகுபலி.


இரண்டாம் பாகத்தில் பல்லாலதேவனின் தலை உடைவதாகட்டும்,
 அணையை வைத்து போர் வீரர்களை தவிடுபொடியாக்குவதும், யானை மேலே கம்பீரமாக ஏறி நிற்பதும்., ஏன் இறுதிகட்ட போர்க்காட்சியில் அகழியின் பாலத்தில் சறுக்குவது என்று இரண்டாம் பாகத்தில் பதிநாறடி பாய்ந்திருக்கின்றனர். Mission Impossible படத்தில் டாம் க்ரூஸ் துபாயில் ஒரு கட்டிடத்தில் சறுக்கி வருவதை மிஞ்சி விடுகிறான் இந்த பாகுபலி. டெஸ்க்டாப்பில் Full HD வால்பேப்பர் வைப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கின்றன. குதிரையின் மீது கம்பீரமாய் வருவது, வாளை சுலற்றுதல், அகழி காட்சி, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பது என ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ரகம். போரில் குதிரையில் அமர்ந்துகொண்டே இரண்டு கைகளாலும் அம்பையும் வாளையும் சுழற்றி எதிரிகளை பந்தாடிய காட்சிகள் இவ்வளவு தெளிவாக ரசனையுடன் இதுவரை எந்தவொரு சினிமாவிலும் பார்க்காதது.

ராஜமௌலி ஒரு இயக்குனர் என்பதை விட தான் ஒரு நல்ல ரசனையுள்ள படைப்பாளி என்று மீண்டும் நிரூபித்துக்கொண்டு இந்தியா சினிமாவின் அடையாளமாய் உலகளாவிய புகழை தேடியிருக்கும் படமே பாகுபலி.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read