பாகுபலி முழுவதுமே ரசிக்கும்படியான காட்சிகள் தான். தேவசேனையின் ஓவியத்தை பார்த்த பின்பு “அழகே பொறாமைப்படும் பேரழகு” என்று ராஜா மாதா  சிவகாமி சொல்வதுபோல ஆச்சர்யமே ஆச்சர்யப்படும் அளவுக்கு(!!!) ரசனையான சில காட்சிகள்.

1       பாகுபலி ஒற்றை ஆளாக தேரை இழுத்து நிறுத்தி சிவகாமியின் அடிபிறழாமல் நடக்கவைப்பது கொஞ்சம் விமர்சனத்திற்கு ஆளாகினாலும், யானையை அடக்கிய பின்பு அதன் மேல் ஏறி இடுப்பில் இரு கையையும் வைத்துக்கொண்டு வானை நோக்கி கம்பீரமாய் பார்க்கும் அந்த காட்சி கொள்ளை அழகு. அந்த காட்சியின் தொடர்ச்சியாக யானை வில்லை தூக்கி நிறுத்த அதில் நெருப்போடிருக்கும் அம்பை பூட்டி கால் வளைத்து கம்பீரமாய் அந்த பொம்மை மேல் எய்வது சூப்பர் ஸ்டைல்.


2.       தேவசேனையின் intro சீன். பல்லக்கிலிருந்து குதித்தெழுந்து பின்புய் லாவகமாக துணியை வைத்து ஏமாற்றி ஒரு வாள் வீச்சில் நால்வரையும் தூக்கியெறிந்து திரும்பி நிற்கும் அந்த காட்சி. இதைவிட பிரமாதமாக எந்த நாயகியும் அறிமுகபடுத்தப்படவில்லை.

3.       பிண்டாரிகள் குந்தள தேசத்தில் போர் தொடுக்கும்போது, “நாவிரல், பிடித்ததும் மறுமுகம்” என்று production environment இல் உள்ளங்கை நெல்லிக்கனியாக நறுக் சுருக் என்று தேவசேனைக்கு knowledge transition கொடுப்பதும் தொடர்ச்சியாக தன் வில்லால் வீரனை அடித்த பின்பு தேவசேனையுடன் சேர்ந்து ஆறு அம்புகளை எய்வதும், என்று அக்காட்சியை பிரமாதபடுத்தியிருப்பர்.

4.       சிலருக்கு பிடிக்காமல் போகியிருந்தாலும், “ஒரே ஓர் ஊரில்” என்ற தேவசேனையின் பாட்டு கனகச்சிதம். அன்னப்படகு, ஆடல், கடல், மலையென்று கண்களுக்கு விருந்து. தமிழ் ரிலீசில் பாட்டின் இறுதி காட்சியை நீக்கியமைக்காக இளைஞர்கள் குழு வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறது. சிற்றரசான குந்தள தேசத்திலிருந்து மகிழ்மதிக்குள் நுழையும்போது பிரபாஸ் மகிழ்மதி என்ற ஒற்றை சொல்லை மட்டுமே உதிர்ப்பார். ஆனால் ராஜமௌலி காட்சிமூலம் அது பிரமாண்ட தேசம் என்பதை காண்பிப்பார். மேலும் குந்தள தேசத்தின் கொடி மகிழ்மதி யானை சிற்பத்தின் காலில் பட்டு உடைவது குறியீடு.

5.       தேவசேனையை மகிழ்மதியின் அரசவைக்குள் அழைத்துவரும் காட்சி. ஒரு panoramic view இல் அரசவை காட்டப்பட்டிருக்கும். பெரிய தர்பார். சூரிய ஒளிச்சத்தில் illuminate செய்யபட்டிருக்கும். அமைச்சர்கள், காவலர்கள், பின்பு அரசவையை காண கூடியிருக்கும் மக்கள், வானை முட்டும் சிலைகள் என்று பிரமாண்டத்தில் அதகளபடுத்தியிருப்பார்.

6.       பெண்களின் மேல் கையை வைத்தவன் தலையை வெட்டியிருக்க வேண்டும்” என்று சேனாதிபதி சேதுபதியின் தலையை வெட்டுவது எந்த ஒரு ஹீரோவுக்கும் அமையாத பக்கா மாஸ் சீன்.

7.       அமரேந்திர பாகுபலி இறந்து போகும் தருவாயில் , ஒரு பாறையில் அமர்ந்து வாள் மீது கையை வைத்து கொண்டு “ஜெய் மகிழம்தி”  என்று கம்பீரமாய் அமர்ந்து உயிரை விடும் காட்சி முத்தாய்ப்பு. அதன் முன்னதாக “வந்தாய் அய்யா”என்ற பாடலில் “நீ அமர்ந்ததால் பாறை கூட சிம்மாசனமாய்”என்று ஒரு வரியை கவனம் கொண்டீர்களா?

8.       ராஜமாதா சிவகாமியின் கையில் பாகுபலியின் ரத்தத்தை தோய்த்து “தவறு செய்துவிட்டாய் சிவகாமி” என்று தொடங்கி நீ தூங்கடா என்ற பாடலும், பின்பு சிவகாமி தேவசேனையின் காலை தொடுவதும், அடுத்த அரசன் மகேந்திர பாகுபலி என்று அறிவிக்கும் வரை அனைத்துமே நெகிழ்வான காட்சிகள்.


9.       இறுதியாக போரில், பாலத்தின் தீ வைத்த காரணத்தினால் தேவசேனையின் அடிபிறழாமல் இருக்க பல்வாள்தேவனின் தங்கச்சிலையின் தலை உடைந்து அதன் மீதே தேவசேனையை நடக்கவைத்திருப்பது சூப்பர். பின்பு இறுதி காட்சியில் பல்வாளை வதம் செய்ய வரும் மகேந்திர பாகுபலி தன் கையில் வாளை வைத்துக்கொண்டு குதிக்கும்பொழுது பின்புலத்தில் வானில் அமரேந்திர பாகுபலி விண்ணை முட்டும் அளவுக்கு காட்சி தருவதும் அவன் வாரிசாக அவன் ரூபத்தில் மகேந்திர பாகுபலி தன்னை கொல்ல வரும் காட்சியும் பிரமாதம். Desktop Wallpaper.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read