சமீப காலங்களில், ஏன் வாழ்நாளிலேயே அதிகமாய் கேட்ட பாடல் என்றால் அது ராசாளி தான். மிகச்சிறந்த வெரைட்டி கலந்த மெல்லிசை. நவீனமும், கர்நாடகமும் பின் பக்தி பாடளின் இசை என கூட்டு கட்டி கலந்தடித்த ராகமாலிகா. ராசாளியில் (கண்டு) பிடித்த சில விஷயங்கள்.

சத்யப்ரகாஷின் உச்ச ஸ்தாயி அருமை.

“ராசாளி..... பந்தயமா?“ என்பது இரண்டே வார்த்தைகள் தான் என்றாலும் மூச்சை பிடித்து இழுத்து அத்தனை ஆலாபனை செய்து படுவது சிரமமென்றாலும் அனாயாசமாக ஸ்கோர் செய்து விடுகிறார். 
அருணகிரிநாதரின் quondam and first ever rap in the world ,

“முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்“ என்ற பாடலின் ராசாளி வடிவமே,

“எட்டு திசை முட்டும் எனை பகலினில்,
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்,
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில்.. மடிவேனோ?
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்,
பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில்,
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ?”

முன்னே, VTV இல் “அன்பில் அவன்” பாடலில் மூன்று திருக்குறளை புகுத்தி square cut boundary அடித்தார் என்றால், ராசாளி பாடலில் Helicopter Six அடித்திருக்கிறார், நம்ம ARR.

ஷாஷா பாடும் நின்னுக்கோரி வர்ணம், ஒரு memorising மோகன ராகம். ஷாஷா, நின்னுக்கோரி என்று பாடி முடித்து பின் “வெய்யில் மழை வெட்கும் படி”  என்று சரணத்தை பாட ஆரம்பிப்பதற்கும் நடுவில் ஷ்ஷ் ஷ்” என்ற ஒரு pass வருவதை கவனித்தீர்களா? ஒருவேளை இந்த பாடலை பாடகர்கள் மேடையில் பாடும்போது மூச்சு விடுவதற்காக குடுக்கபட்ட pass என்பது அடியெனின் கருத்து.

ஏன் என்றால், சரணம் நம்பர் ஒன்றில் சத்யபிரகாஷ் பாடும்பொழுது
“வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ?” என்று முதல் தடவை பாடி பின்பு அதையே இரண்டாம் தடவை பாடும்பொழுது “விடுவேன்?” என்று முடித்து உடனே “ராசாளி இ இ இ இ இ இ” என்று இழுக்க போய்விடுவார்.  Hence the conclusion.

மொத்தத்தில் 100/100 கொடுக்கலாம். பாட்டின் விஷுவலை காண ஆவலாயிருக்கிறேன்.Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read