2015 மற்றும் 2016 என்று பொறுத்த பார்த்த தமிழன் இப்போது பொங்கி எழுந்திருக்கிறான். இதை ஜல்லிகட்டுக்கான புரட்சி என்று மட்டுமே பார்க்க முடியவில்லை. ஜல்லிக்கட்டையும் தாண்டி 2019 மற்றும் 2020 க்கான அரசியல் மாற்றத்தின் அடிநாதமாகவே தெரிகிறது. 2015 மற்றும் 2016 இல் அம்மா முதலமைச்சராக இருந்தார். அவர் ஏதேனும் முயற்சி செய்து ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக்கூடும் என்ற நம்பிக்கையிலோ அல்லது காவல் துறையின் ஒடுக்கும் கரங்களை கொண்டு தங்களை அடக்கக்கூடும் என்ற உணர்விலோ இத்தகைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை mixture meme மூலம் கலாய்க்கும் அளவுக்கு தைரியம் என்று கூறமுடியாவிட்டாலும், அவர் மீதான அவநம்பிக்கையின் வெளிப்பாடாகவே இந்த புரட்சியை பார்க்கமுடிகிறது. மக்கள் அரசின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டார்கள். விவசாயிக்கு அடைக்கலம் அளிக்காதது, ஜல்லிக்கட்டில் முரண்பட்டது, தமிழகமே வெறுக்கும் ஒரு குற்றவாளியை முன்னெடுத்து செல்வது, NEET தேர்வுக்கு ஆதரவு அளித்தது, உதய் மின் திட்டத்தில் சேர்ந்தது என்று தனக்கான குழியை தானே பறித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் இரட்டை இலை மற்றும் தாமரை இரண்டுமே மிக மோசமான தோல்வியை சந்திக்கக்கூடும். இவர்களுக்கு அடுத்து ஓரளவேணும் தெரிந்த முகமாக இருப்பது ஸ்டாலின் மட்டுமே. வெற்றி தானாகவே அவர்கள் மடியில் விழும். இது இவ்வாறாக இருக்க,

ஜல்லிக்கட்டின் போராட்டம் இத்தகய உச்சத்தை தொட்டிருப்பது, ஒவ்வொரு தமிழனின் ஏன் அனைத்து மாநில மற்றும் நாடுகளிலும் ஆச்சர்யத்தையும் அதனைத்தொடர்ந்து வரவேற்பையும் ஒரு சேரப்பேற்றிருக்கிறது. சுதந்திர போராட்டத்திற்கு பிறகு சாதி மாத இன பேதமின்றி மக்கள் ஒன்று திரண்டிருப்பது தமிழக வரலாற்றில் இது முதல் முறையாகும். முகநூல் மற்றும் வாட்ஸ்அப் இதில் முக்கிய பங்காற்றிருக்கிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் மூர்க்கமடைந்து தன்னுள்ளே ஆழமாக வேரோடிருந்த தனித்துவமிக்க அடையாளங்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. முன்னமே கூறியது போல், கீழடியில் தொல்லியில் ஆதாரங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. தமிழனின் அடையாளங்கள் ஒவ்வொன்றாக மறைக்கப்பட்டு அவனை வேரறுக்கும் நிகழ்வு நம் கண்முன்னே மெதுவாக நடந்துகொண்டிருக்கிறது. இத்தனை நாளும் தன்னுள்ளே சலித்துக்கொண்டு, அலுப்போடு ஒடுக்கபட்டிருந்த ஆதார உணர்ச்சிகள் பீறிட்டு கொப்பளித்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் அக நெருக்கடியை புறந்தள்ளி வைத்துவிட  முடியாது. மாற்றத்தின் ஆதார விதை இங்கே இப்போது தூவபட்டுக்கொண்டிருக்கிறது. அதை ஒரு ஆலமர விருட்சமாக துளிர்த்து அகன்ற நிழலாக வெடித்து வெளிக்கொணரும்  முகாந்திரம் ஒவ்வொரு தமிழனின் கைகளில் உறைந்துகிடக்கிறது.

வாழு. வாழ விடு

வாழ்க தமிழ். வெல்க தமிழ்.
Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read