மகாபாரதத்தில் காந்தாரி 101 பிள்ளைகளை பெற்றடுத்தது பற்றி அறிந்ததுண்டா? குந்திக்கு முன்பே கருவுற்ற போதிலும் காந்தாரியால் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. கோபம் கொண்டு தன் வயிற்றில் தானே குத்திக்கொள்கிறாள். அதன் காரணமாக ஒரு சதை பிண்டத்தை மட்டுமே பெற்றெடுக்கிறாள். வியாச முனிவர் இதை அறிந்து அவளுக்கு உதவ முன்வருகிறார். அந்த சதை பிண்டங்களை 101 துண்டுகளாக வெட்டி ஒவ்வொன்றையும் நெய்யும் மூலிகையும் நிறைந்த குடங்களில் போட்டு வைத்து சில நாட்கள் கழித்து அவற்றை கௌரவர்களாக பெற்றெடுக்க உதவுகிறார். Why those 101 pots cannot be an incubator of that good old period? ஏன் அவை தற்காலத்திய இன்குபேட்டர்களாக இருக்க முடியாது? நெய் என்று குறிப்பு இருக்கிறதே தவிர அது ஒரு வகை எண்ணை என்ற பொருளிலே எழுதபட்டிருக்கிறது.

ராமாயணத்திலே வரும் புஷ்பக விமானம் பற்றி ஏன் நாம் பெருமை கொள்ளவில்லை? அவை ஏன் ஒரு fantasy கதைகளாவே பார்க்கபடுகின்றன? Epic என்று ஏன் அதை வரலாற்றிலிருந்து பகுத்தும் பிரித்தும் வைத்துள்ளோம்?  கண்ணால் பார்க்கமுடியாத கையால் தொட்டு உணரமுடியாத ஒன்றை நிஜமில்லை என்றே அறிவியல் கூறுகிறது. அவ்வாறெனில் “The lost city of Dwarka” by S.R.Rao என்றொரு புத்தகம் இருக்கிறது. பாகவத புராணத்தில் கிருஷ்ணன் துவாரகை என்றொரு நகரத்தை நிறுவி அதன் குடிமக்கள் அனைவருக்கும் நகர மக்கள் என்று அடையாளத்திற்காக லட்சிணை  கொடுத்துள்ளான். அந்த லட்சிணை எந்த வடிவத்தில் அதில் என்ன பொறிக்கபட்டிருந்தது மற்றும் எவ்வாறு இருந்தது என்பதற்கு பாகவத புராணத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது.  1981 இல் S.R.Rao தலைமையில் செய்யப்பட ஆழி அகழ்வாராய்ச்சியில் (marine expedition) சில தகவல்கள் கிடைக்கின்றன. நீண்ட சிதிலமடைந்த மதில் சுவர்கள், நகர வாயில் கோபுரங்கள், இடிபாடுடன் கூடிய கட்டிடங்கள். இவை அனைத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக அங்கு கிடைத்த உலோகத்தினால் ஆனா லட்சிணைகளின் அடையாளங்கள் பாகவத புராணத்தில் சொல்லபட்ட குடிமக்களின் லட்சிணையை ஒத்து போகிறது. மொத்தமாக 5% இடங்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்யபட்டுள்ளன என்றும் மீதம் 95% இடங்கள் identify செய்யபட்டு நிதி உதவிக்காக காத்துக்கொண்டிருக்கின்றன என்று இந்த புத்தகத்தில் S.R.Rao குறிப்பிட்டுள்ளார்.

பூம்புகார் கதியை தமிழகமே அறியும். தற்பொழுது முப்பது வருடங்கள் கழித்து ஒரு முழு அகழ்வாராய்ச்சிக்கு தயாராகிக்கொண்டிருந்த கீழடி கிராமம்,  இப்பொழுது மூடபட்டிருக்கிறது. ஐந்து மாதங்களுக்கு முன்பே ஒரு நாளிதழில் வெளிவந்த செய்தியை வைத்துக்கொண்டு, ஊர் ஊராக விலாசம் தேடி மதுரைக்கு சென்று மனைவி மக்களுடன் பார்த்து வந்தோம். அங்கு கிட்டதட்ட் முப்பது குழிகள் தோண்டபட்டு இருந்தன. ஒவ்வொன்றும் பத்துக்கு பத்து அடிகள். தோண்டுவது என்றால் JCB கொண்டு அல்ல. தங்க ஆபரணம் செய்வது போன்று பெயிண்ட் பிரஷ் வைத்துக்கொண்டு இன்ச் பை இஞ்சாக செய்யும் நகாசு வேலை அது. அத்தனை வேலையாட்கள் கொண்டு செதுக்கி எடுக்கபட்ட குழி அது. ஒவ்வொன்றும் வரலாற்றுப்புதையல். தமிழின ஆதாரம். உரை கிணறு முழு வடிவத்தில் கிடைத்திருக்கிறது. இதுபோன்று முழு வடிவத்தில் வேறு எங்கும் கிடைத்ததில்லை என்று சந்தோசகமாக கூறினார் அங்கிருந்த ஒருவர். வீட்டின் சுவர், சமையல் அறை என்று ஒரு நகரமே காலுக்கடியில் இருப்பதை உணரமுடிந்தது. கண்டுபிடிப்பில் அவர்கள் அறுதியிட்டு கூறியது யாதெனில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் மார்க்கமாக ரோம் நகரத்தினருடன் வாணிபம் செய்தது திண்ணமாயிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டு முன்பு கடல் மூலமாக வாணிபம் செய்திருக்கிறோமென்றால் தமிழ் நாகரிகத்தின் அடிச்சுவடு குறைந்தபட்சம் இன்னும் ஓராயிரம் ஆண்டுகள் முன்பு செல்லலாம். யுக்தி கல்பதாரு புத்தகத்தில் கப்பல் கட்டுவதை பற்றி அவ்வளவு தெளிவாக இருக்கிறது. மச்ச யந்த்ராவில் திசை காட்டும் கருவியை பற்றி சொல்கிறது. அக்னிபுராணத்தில் ஆயுதங்களை பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஒரு பகுதியில் வில் அம்பு பற்றி தெள்ளத்தெளிவாக கூறபட்டுள்ளது. பயிற்சி செய்யும் அம்பு எவ்வாறு தயார் செய்யப்பட வேண்டும்?, எந்த காட்டு விலங்கை வீழ்த்த அம்பின் பின்னால் எந்த பறவையின் இறகை பயன்படுத்தவேண்டும்?, என்றெல்லாம் குறிப்பு காணக்கிடைக்கிறது. கீழடியில் கண்டெடுக்கபட்ட பானை ஓடுகள் ஒன்றிரண்டை ஞாபகமாக எடுத்து வைத்துக்கொண்டோம். யார்கண்டது அவை என் பாட்டன் அல்லது முப்பாட்டன் செய்ததாக இருக்கலாம்.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபொழுது அவர்கள் செய்த முதல் வேலை, நம்மிடமிருந்த கல்விச்செல்வத்தை அழித்ததுதான். குருகுலத்தை ஒழித்தார்கள். நூலகம் அனைத்தையும் அழித்தார்கள். சங்க கால திரட்டுகள் ஓலைச்சுவடிகள் எல்லாம் அழிந்துபோயின அல்லது எடுத்து செல்லபட்டன. வாணிபம் செய்ய இடம் கொடுத்து பின் வஞ்சிக்கபட்டு வேரறுக்கபட்டோம். ஒருவேளை இந்த வரலாற்றுச்சுவடுகள் அனைத்தும் உலகுக்கு தெரியவந்ததேயானால் தான் எழுதிய வரலாற்றை (timeline) முழுவதுமாக மாற்ற வேண்டிய கட்டாயதிற்கு உண்டுபடுவோம் என்று எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவை. குமரிக்கண்டமெல்லாம் தோண்டி எடுக்கப்ட்டால் முழுவரலாறும் மாற்றியமைக்கவேண்டிவரலாம். Supreme Court வருவதற்க்கு முன்பிருந்தே நம்மிடமிருந்த ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. அடுத்த தலைமுறைகள் அதை ஒரு ஆவணமாக மட்டுமே காணும். இதுபோல் இதுவரை எத்தனை இழந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. யாருக்காக இந்த விளையாட்டு என்பதும் புரியவில்லை. ஒன்று மட்டும் நிதர்சனம். நம்முடைய வேர்கள் நம்மிடமிருந்து ஒவ்வொன்றாக அறுந்துகொண்டிருக்கின்றன. நாம் அதை இருகபற்றிக்கொள்ளாமல் இந்த அநீதிக்கு சாட்சியாய் இருந்துகொண்டிருக்கிறோம். வரும் தலைமுறைகள் யார் நீ? என்று நம்மை கேட்கப்போகும் தூரம் வெகு தொலைவில் இல்லை.Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read