காலை தினமும் நடைபயிற்சி முடித்து அந்த வழியாக வருவதுதான் வழக்கம். வரும் வழியில் இருக்கும் தேவாலயத்தில் ஆறு மணிக்கு மணி அடித்து ஏசுவின் பாடலை ஒலிப்பார்கள். பல முறை கேட்ட ராகம் போல் தோன்றினாலும், அவசரகதியில் ஒரு முறையேனும் நின்று கேட்டதில்லை. இன்றும் அதுபோல் எங்கேயோ கேட்டது போல இருக்கிறதே என்று தோன்றவே, அருகில் சென்றுதான் கேட்டு பார்க்கலாமே என்று யத்தனித்தென். காதில் ஒலித்த அந்த பாடல்,

'தேன் இனிமைய...ிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே'

நினைவு கொசுவர்த்தி சுருளாக சுருள, காலச்சக்கரத்தில் ஒரு பத்து வருடம் பின்னோக்கி சென்றது. தூய யோவான் மேனிலைப்பள்ளி. ஏழு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளி. அந்த ஆறு வருடங்களும், காலை ஒன்பதிற்கு அடிக்கும் மணிக்கு பிறகு, வகுப்பின் மூலையில் சதுரமாக தொங்கிகொண்டிருக்கும் ஒலிபெருக்கியை பார்த்துக்கொண்டே அதில் இருந்து ஒலிக்கும் பிரேயர் பாடல்களை கேட்டும், பாடியும், மற்றவன் பாடுகிறானா என்று ஓரக்கண்ணில் பார்த்தும் கழித்த பொன்னான நாட்கள். பரந்து விரிந்த அந்த பள்ளியின் (சுமார் 80000 சதுர அடி) எந்த மூலையில் யார் சென்று கொண்டிருந்தாலும் சரி, ஒன்பது மணி பிரேயர் பாடல் ஒலிக்கும்போது அந்தந்த இடத்தில் அங்கேயே நின்று இறைவனுக்கு நன்றி கூறி பிரார்தித்து பின் நகரும் ஒழுக்கத்தை கற்று கொடுத்த பள்ளி. சிறு துளி பேரு வெள்ளமாக, தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல், அங்கு கற்று கொண்ட ஒழுக்கம் இன்று வரையில் அலுவலக வேலை முதற்கொண்டு தனி மனித வாழ்விலும் பலருக்கு உதவியிருக்கும் என்பது திண்ணம்.

'தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.
தந்தானைத் துதிப்போமே

என்ற அடுத்த பாடல் ஒழிக்க ஆரம்பித்திருந்தது.கள்ளனை துரத்தும் நாய் போல் உருண்டோடி, வேர்த்து விறுவிறுத்து, தொட்டியில் கழனியை குடிக்கும் மாடு போன்று சோறு தின்று, குதிரை போல் ரயிலிலும் பேருந்திலும் நின்றுகொண்டே தூங்கி கழிக்கும் தேமே என்ற வாழ்கையில், அவ்வப்போது இது போன்று பால்யத்தை நினைவுபடுத்தும் சங்கதிகள், படித்தோம் படுத்தோம் என்று டெட்லைன் போன்று பரபரப்பு இல்லா, மீளா வாழ்கைக்கு திரும்ப துடிக்கிறது என்பதை மறுதலிக்க இயலாதுகல்லூரி தினங்களில் நண்பர்களோடு கதைத்து கொண்டிருக்கும்பொழுது அடிக்கடி இந்த ஸ்டேட்மெண்ட் யார் வாயிலிருந்தாவது தவறாமல் வந்துவிடும். 


‘மச்சா இந்த பொண்ணுங்க ஃபிரண்ட்ஷிப் பாத்திருக்கியா? எல்லாம் மேலோட்டமாதான் இருக்கும். கல்யாணம் வரைக்கும் தான். அதுக்கப்புறம் ஒருத்தியாவது டச்ல இருக்காளுங்களா? சுத்தமா இருக்காது ஆனா பசங்க அப்டியில்ல. கடைசி வரைக்கும் அவன் டச்லேயேதான் இருப்பான்’

நிதர்சனமான பொய்!!!

பார்த்த...ு பழகிய வரைக்கும் இந்த கூற்றை ஓரளவு நான் ஒத்துக்கொண்டிருந்தாலும், அவர்களுடைய நட்பு நுனிப்புல் மேய்ச்சல் அளவுக்குத்தான் என்பது ஈகோயிஸ்ட் ஆண்களின் தவறை மூடி மறைப்பதற்காக கண்டுபிடிக்கபட்ட கூற்று என்று ஒருவாறு அனுமானிக்க முடிக்கிறது

ஆறு சகோதரிகள், நான்கு சகோதரர்கள் என்ற ஆலமரம் போல் பரந்து விரிந்திருக்கும் குடும்பங்கள் கூட திருமணத்திற்கு பிறகு அறுத்தெரியப்பட்ட நாற்றாகவே அறியப்படுகின்றன. காற்றின் வேகத்தில் சுதந்திரமாக மேலே பறக்கும் பட்டத்தை அங்குமிங்கும் சுண்டி அலையவிட்டு வேடிக்கை பார்த்து பின் நூலை மெதுவாக சுற்றி பட்டத்தை கைக்குள் அடக்குவது போல், திருமணமான முதல் நாள் முதலே, ‘நீ இந்த குடும்பத்தின் அடையாளம், கெக்கே பெக்கே என்று நாலு பேர் முன்னாடி சிரிக்காதே என்று ஒவ்வொரு நாளும் ஒரோர் நிபந்தனைகள் விதிக்கபட்டு, உறவினர் வட்டம் முதல் நட்பு வட்டம் வரை நாளுக்கு நாள் சுருக்கபடுகிறது.

பத்து மாதம் சுமந்து பெற்றவளுக்கு எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு மனைவியின் இனிஷியலை தருவித்திருக்கிறார்கள்???

திருமணம் முடிந்து தனக்கும் தன் பிறந்த வீட்டுக்கும் எச்ச சொச்சமாக அறியப்படும் உறவாக இருக்கும் தந்தையின் இனிஷியலை கூட எத்தனை பெண்கள் மறந்து கணவனின் இனிஷியலை சேர்த்துக்கொள்ள வைக்கபடுகிறார்கள்???? (பிரியத்துடன் சேர்க்கபட்டவை தவிர்த்து)

திருமணத்திற்கு பின் புகுந்த வீடு மட்டுமே உன் வீடு என்று சொல்லும், கணவர்களே, உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தால் இதையே சொல்லி வளர்க்கும் தைரியமிருக்கிறதா?

ஒரு பெண்ணிற்கு அவள் அக்காவும் தங்கையும், கடைசி வரை அக்காவாகவும் தங்கையாகவும் தான் தெரிகிறார்கள். ஆனால் கணவன் மற்றும் அவன் வீட்டாரின் வரட்டு கவுரவத்தின் முன் அவள் பாத்திரமும் காட்சிகளும் மாற்றப்படுகின்றன. lமாமனார், மாமியார், ஓரகத்தி, நாத்தனார், அண்டை அயலார், பிறந்த வீடு, இருபத்து நாலு மணி நேரமும் துணை தேடும் குழந்தை, இதோடு கணவனையும் சேர்த்து அவள் வெற்றிகரமாக சமாளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நம் சமூகத்திற்கு தெரியாமலில்லை, அவள் நட்பு வட்டம் ஏன் சுருங்கியது என்று?

நட்போ, சுற்றமோ எதுவாகினும் உறவில் பலவீனபட்டவள் அல்ல பெண். உறவை பலபடுத்த வந்தவளே பெண். குடும்பத்தின் மகிழ்ச்சியை ஆக்கும் அழிக்கும் ஒரே சக்தி பெண்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read