ஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா  நம்ம தலைவரோட ஏதாவது ஒரு புக்க வாசிச்சா தான் குளிர்ச்சி குளிர்ச்சி கூல் கூல்.

உயிர்மை பதிபகத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவரது எழுத்துக்களின் இயல்பு சார்ந்து அதை தொகுதி வாரியாக பிரித்து பதிப்பிக்கும் உயிர்மைக்கு வாசகர்கள் என்றென்றும் நன்றி நவில்வார்கள். சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள், தேர்ந்தெடுத்த சிறுகதைகள்,ஸ்ரீரங்கத்து கதைகள்,மர்ம கதைகள்,கணேஷ் வசந்த் தொகுதிகள் என பல பல. ஓகே. விஷயத்திற்கு வருகிறேன்.

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படித்த பொழுது ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்திருந்தார். அது, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில பார்முலாக்களின் தொகுப்பு. உதாரணத்திற்கு கண்மூடி திறப்பதற்குள் நாயகனும் நாயகியும் எங்காவது வெளிநாடு சென்று மரத்தை சுற்றி டூயட் பாடுவது, எந்த நேரமானாலும் காதலியை வில்லன்களிடமிருந்து   காப்பாற்றுவதயே தொழிலாக கொண்டிருக்கும் நாயகன், கடைசி நேரத்தில் மட்டுமே எட்டிபார்க்கும் போலீஸ் என சில பல விஷயங்களை ஹாஸ்யமாக போகிற போக்கில் சொல்லிபோவார்.


தலைவரின் பாணியை பின்பற்றி அவர் எழுதிய சில குறுநாவல்களின் சுஜாதா டச் என்று எனக்கு தோன்றியது கீழே.

1.   ரே ஒரு வரிக்குள் ஆயிரம் கதைகள் கூறுவார்.

a.   “கருநீலத்தில் ஷர்ட் அணிந்து கற்றடித்தால் விழக்கூடிய சிகரட் பிடிக்கும் சிறுவர்கள்”.

b.   “பெண்கள் உரக்கக்கத்தும் வர்ணங்களில் பட்டுப்புடவை அணிந்து     ஜரிகை நிழல்களில் பொறாமைபட்டார்கள்”.

c.  “ரூபாய் நோட்டுக்களை தலையய் சுற்றி எறிய     அந்த பாண்ட் மாஸ்டர் அவைகளை பொறுக்கிக்கொண்டு எச்சில் வழிய ஆஜ்கல் தேர் மேரே பியார்ஐ கிளாரிநெட்டில் ஊதினான்.     -(6961-1969)

2.   ரிகர் மார்டீஸ்’, ‘செரிப்ரல் ஹெமேரேஜ்’, அப்டமினல் இன்க்ஷெசன்’, The fallopian tube represents the cranial end of the mullerian duct covered with peritoneum except along a twin area inferiorly” etc (ஜோதி-1971) போன்ற வாயில் நுழையாத மெடிக்கல் வார்தைகளை சந்தடி சாக்கில் பிரயோகித்திருப்பார்.

3.   தையின் நாயகன் மனநலம் குன்றி, பெண்களையோ குழந்தைகளையோ கடத்தி கொள்வானேன் என்றால், அதன் பின்புலமாக நாயகனின் அம்மாவின் நடத்தை ஒரு காரணமாக இருக்கும்.

“உன் அம்மா வாழ்வின் விதம். மை டியர் சாரதி, போ. உன் நினைவுக்குள் மறுபடியும் போ. ராஜூவை பற்றி சொன்னாயே, ராஜு யார்? எதற்காக உன் வீட்டிற்கு அடிக்கடி வந்தார். அப்புறம் அந்த கீ கொடுக்கும் குரங்கு பொம்மை. சர்ரக் சர்ரக். எப்படி வந்தது? யார் கொடுத்தது? ஒரு நாள் அந்த பொம்மை காணுமென்று படுக்கை அறைக்குள் நுழைந்தாயே. என்ன பார்த்தாய்?”

“ராஜா ராஜா, இந்த காசு. போயி புவனேஸ்வரி கொட்டாயில போய் சினிமா பாத்துட்டு வா. இந்தா காசு போடா. பார்த்த சினிமாவாயே எத்தன தடவை பார்க்கிறது. வீட்டுக்கு போய் சைக்கிள் விடலாம். வீட்டுக்குள் இருட்டாக இருக்கிறது. வாசற் கதவு தாழிடபட்டிருக்கிறது.பின்பக்கம் ஏறி குதித்து வரத்தெரியும்.ரேழிபக்கம் செல்ல கூடத்தை கடக்க ... ஊஞ்சல் நடுங்குகிறது.தரையிலே பாய் போட்டிருக்கிறது. அப்பா இல்லை.” இந்த சிகரட்டை மட்டும் பிடிக்காதீங்கோ குமாரசாமி. எனக்கு குமட்டிண்டு வரது. அம்மா குரல். ஸ்தம்பித்து நின்று கொண்டிருக்கிறான்.-(அப்ஸரா-1977)


4.   தை அதன் கருக்களம் எல்லாமே பெங்களூரை சுற்றியே நடக்கும். அவர தான் வாழ்நாளில் அதிக நாட்களை அங்கு செலவளித்த காரணமாக இருக்கலாம்.

“விதான் சௌதா, சோமனஹள்ளி. காப்பான் பார்க், காந்தி நகர்......


5.   தையின் நாயகி அல்லது ஏதாவது ஒரு பெண் கதையில் அறிமுகபடுத்தும்போது கண்டிப்பாக அவள் அழகை பற்றி ஒரு பத்து வரிக்கு குறையாமல் எழுதியிருப்பார்.

“விக்ரம் அவளை நிதானமாக பார்த்தான்.பணக்காரத்தனம் ஏதும் இல்லை. முரட்டு கதர் போல் இருந்த துணியில் சட்டை அணிந்திருந்தாள். உதட்டில் சாயமில்லை.புருவங்கள் திருத்தபடவில்லை.. ரொம்ப நாள் அடிபட்டு பழசாகி போன ஜீன்ஸ். மணிக்கட்டில் இரும்பு வளையல். இடது கை சுண்டு விரலில் இரும்பு மோதிரம். மெலிதான உதடுகள். பத்தொன்பது வயதிருக்கலாம். எழுந்து நின்றால் நல்ல உயரமிருப்பாள்.” – (சிவந்த கைகள் -1981)

6.  ங்கில வார்த்தைகள் கன்னா பின்னாவென்று ஆங்காங்கு வந்து விழுந்திருக்கும்.

“What do you think of him?

It was absurd.

He is a corrupt bastard.

I want to beat the hell out of him.

Not that soon man..

Oh that Crazy chap.

Too much strain that got him.

இவை எல்லாம் 1980 களில் எழுதபட்டவை.


7.   யர் மாமா அல்லது அய்யர் மாமி இப்டி யாராவது ஒரு பிராமினாள் கேரக்டர் முக்கிய கதாபாதிரமாக வரும்.


8.   ஜாவா, கோபால், பைனரி என்று கணினி சம்பந்தப்பட்ட வார்தைகள் அதிகம் புழங்கும்.


9.   ல்லாவற்றிற்கும் மேலாக கதாநாயகி பிரா அணிந்திருக்காளா இல்லயா என்பதை ஒரு வரியிலாவது விவரிக்காமல் விடமாட்டார். ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர்.

“உள்ளே பிரா இருக்கிறதா இல்லயா என்பது சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அவள் ஒருமுறை குனிந்தபோது பார்த்தான். உள்ளுடை ஏதுமில்லை.” – (சிவந்த கைகள் -1981)


10. பேர் தெரியாத பிரபலமான ஆங்கில புத்தகம் மற்றும் கதாசிரியர்களை அறிமுகபடுத்துவார். ஒரு முறை முக சிறந்த சிறு கதையாக ‘The Rain” என்றொரு முப்பது பக்க கதையை கூறியிருந்தார்.

“ஜே.டி ஸாலிஞ்சர் படித்த பெண்ணை இதுவரை நான் சந்தித்தது இல்லை.

ஃப்ராணி அண்ட் ஜூயி படிதிருக்க வேண்டுமா? அல்லது காச்சர் அண்ட் தி ரை?

அப்புறம் ஹக்ஸ்லி?- (ஒரு சிக்கலில்லாத காதல் கதை-1971)

துழாவலை இன்னும் சற்று பெரிதாக்கினால் ஒரு முப்பது நாற்பதென்று சுஜாதாவுக்கேவுரிய டச் கண்டுபிடிக்கலாம். இருந்தும் தேடவைப்பவர். இல்லாமலும் தேடவைப்பவர்.


சுஜாதா சுஜாதா சுஜாதா.!!!


Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read