இதுவரை எத்தனை முறை காய்ச்சல் வந்திருக்கிறது? ஞாபகம் இல்லை. ஆரம்பத்தில் வந்த காய்ச்சலுக்கு இப்போது வரும் காய்ச்சலுக்கும் அவ்வளவாக வித்தியாசம் இல்லை. ஸ்கூல் என்றால் ஒரு நாள் ஜாலியாக லீவ் போடலாம். லதா டீச்சர், வெற்றிவேல் சார் இத்யாதி மொக்கை கிடையாது. வீட்டில் படுத்து தூங்கலாம். கேட்டது உடனே கிடைக்கும். தேங்காய் பர்பி,சிப்ஸ், பொம்மை கார் எல்லாம். அதே சாக்கில் ரெண்டு மூன்று நாள் ஸ்கூலிலும் அடி விழாது. ஒரே பிரச்சினை ஊசி தான். அதுவும் 'நறுக்' என்று கட்டெறும்பு கடித்த மாதிரி. ரெண்டு நாள் வலி தாங்க முடியாது. ஒரு மாதிரி சாய்த்து தான் உக்கார வேண்டும்.

இப்பொழுது வேலை பார்க்கும் இடத்திலோ அதே போல் ஜாலியாக லீவ் போடலாம். வீட்டில் படுத்து தூங்கலாம். மேனேஜர் தொந்தரவு கிடையாது. (திருநள்ளாறு வரை போய் சனி பகவானை தரிசிக்க வேண்டியதில்லை. அவர் கேபின் போனால் போதும்). வீட்டில் நன்றாக படுத்து தூங்கலாம். டிவி பார்க்கலாம். கான்க்ரிட் போட்டனா போடலையா என்ற கவலை இல்லை. Meeting இல்லை. சாயங்கலாம் ஜாலியாக வெளியே சுத்தலாம்.சிம்பிளாக கம்பெனி டாக்டரிடம் கையெழுத்து வாங்கி CSL கொடுக்கலாம். முதலில் இந்த CSL எத்தனை நாள் எடுக்க முடியும் என்று கேட்டு வைக்க வேண்டும்.

கடந்த ஏழு எட்டு வருடமாக காய்ச்சல் பிடித்திருக்கிறது. ஓரளவு சுகமாய் இருக்கிறது.
அதுவும் மூக்கு நம நம என்று ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக தலை வலி வந்து பின்பு உடலெல்லாம் லேசாக வலி பரவத்தொடங்கும். அதிகமாக நடக்க இயலாது. படுத்தே இருக்க தோன்றும். சத்தம் அதிகமாக பிடிக்காது. அதுவும் ஒரு அருமையான நாவல் கையில் கிடைத்தால் போதும்.ஒரு காய்ச்சல் தினத்தில் பெட்டும் நாவலும் தவிர வேறு என்ன வேண்டும். .

சொந்த ஊரில் இருந்து வேலை நிமித்தம் வெளியூர் வந்த பிறகு வெளி டாக்டரை ஒரு முறையேனும் பார்த்தது இல்லை. ஒரே ஒரு போன். Dr. ரவிச்சந்திரன். Family doctor. என்னப்பா காய்ச்சலா என்பார். சரி குறிச்சிகோ என்று azithromycin-4, sinarest-4 காலைல ஒன்னு நைட்டு ஒன்னு போட்டுக்க. அவ்வளவே. இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு கொடுத்த மாத்திரையை முழுங்கி விட்டு இழுத்து போர்த்தி சுருண்டு படுத்து விடுவேன். துங்கும் வரை தான் இந்த நம நம கஷ்டம். அதன் பிறகு எத்தனை மணி நேரம் தூங்குவேன் என்பது தெரியாது. காலையில் எழுந்திரிக்கும் போது அப்படி ஒரு புத்துணர்வு புதிதாய் பிறந்தது போல். சோம்பல் முறித்துக்கொண்டு நம நம இல்லாமல், ஆகா.

இதற்காகவே காய்ச்சல் வரலாம்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read