அந்த சாப்ட்வேர் கம்பென்யில் வேலை பார்த்த வரை ஒன்றும் தெரியவில்லை. ஜாலியாகத்தான் போனது. எப்படியும் மாதத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு சென்றுவிடலாம். காலை ஒன்பது மணிக்கு உள்ளே வந்தால் இரவு ஏழு மணிவரை AC தான். வேலை பார்க்கிறேனா இல்லையா என்பது வேறு விஷயம். பத்து மணிநேரத்தில் குறைந்தது எட்டு மணிநேரமாவது பிரவுஸ் செய்யலாம். வெட்டி கதை பேசலாம். வெயில் இல்லை. வேர்வை இல்லை. நிரந்தரமும் இல்லை தான். ஆனால் சுத்தி தமிழ் பேசுபவர்கள். பிறந்ததே பேசுவதற்குத்தான் (சாப்பாடு வரும்போது சாப்பாடு தான் First) என்பது போல் பேசினேன்,

முடிந்தது. அழகான சாப்ட்வேர் வேலையை உதறி இந்த PSU வில் குப்பை கொட்டலாம் என்று வந்தேன். Posting ஆனதோ பரோடாவில். குஜாரத் தலைநகரமாம். பாகிஸ்தானுக்கு நாலு மணிநேரத்தில் குறுக்கு வழியில் சென்று விடலாம். அனால் திரும்ப வரமுடியாது. எப்படி சென்றாலும் தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் ஆகி விடுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் சுகமான வேலை. 24 மணிநேரமும் கம்ப்யுட்டரில் வேலை பார்த்து இங்கு கம்ப்யுட்டரை பார்ப்பதே அபூர்வமாய் இருக்கிறது. குஜராத்தில் தண்ணீர் கூட தட்டுபாடு வரலாம், ஆனால் ரொட்டிக்கு என்றும் கிடையாது. எல்லா நேரமும் சுக்கா ரொட்டி is available. டீயை தவிர மற்ற எல்லாவற்றிலும் aaloo(உருளைகிழங்கு) சேர்த்துவிடுகிறார்கள். கேட்டால் சுவை கூடும் என்கிறான் அந்த பெங்காலி சஞ்சய். சூரியன் வர எப்படியும் ஏழரை மணி ஆகி விடுகிறது. பின்பும் இருள் கவிவதற்கும் ஏழரை ஆகி விடுவதால் கூடு திரும்பவதற்கு நேரம் பிடிக்கிறது.

எங்கேயாவது தமிழர்களை பார்த்தால் பாலைவனத்தில் பல நாள் அலைந்து, தண்ணீரை பார்க்கும் பொழுது எச்சில் முழுங்கும் நிலை ஏற்படுகிறது. ஒரு அரசு அலுவலகம் எவ்வாறு நடந்து கொள்ளுமோ எப்படி நடந்து கொள்ள வேண்டுமா, எள்ளளவும் அதில் மாற்றம் இல்லமால் நடுந்து கொள்கிறார்கள்.முழுவதும் paper வொர்க் தான் .இங்கு இருக்கும் 60 வயதை தொடும் இளமை துள்ளும் வாலிபர்கள் கம்ப்யுட்டர் முன் உட்கார்ந்தால் வேலை செய்யாமல் எதோ games விளாயடுகிறாய் என்று புகார் வேறு.அதை கூட சகித்துக்கொள்ளலாம் என்றால் இந்த சாப் சாப் (சார்) என்று கூப்பிடுவதை கொஞ்சம் கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு முன்பு வேலை பார்த்த கம்பெனியின் மேனேஜர் சுரேஷை கூட பேரை சொல்லி அழைத்து, இங்கு வந்த பிறகு ஜெயதேவ் சார் இருக்கிறாரா இதை பண்ணலாமா சார், கூடாத சார், வாங்க சார், போங்க சார்...ஒரே குஷ்டம். இல்லை கஷ்டம்.. சரி பேரை சொல்லி கூப்பிடலாம் என்றால், 60 வயது முதிர்ச்சியில், பத்து ப்ராஜெக்ட் கையாண்ட அனுபவசாலிகள், இந்த PSUவின் தூண்கள் அதை ஏற்று கொள்வார்கள் என்று சொல்லமுடியாது. இரண்டு மாதம் ஆன பின்பு நானும் இந்த போலி சுகத்துக்கு அடிமையானது போல் உணர்கிறேன். யாரவது பேர் சொல்லி கூப்பிட்டால், சிறிது கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

எல்லோர் முகத்திலும் ஊரை விட்டு வந்த கவலை ஒரு ஓரத்தில் தூளி கட்டி ஊஞ்சல் ஆடுவதை கவனிக்கலாம். குறைந்தது 24 மணி நேர பயணமாவது , எல்லாருக்கும். எப்பொழுதும் IRCTC ல் PNR செக் பண்ணி கொண்டிருப்பதை பார்த்தால் கவலையாய் இருக்கிறது. எப்போதடா வீட்டுக்கு செல்லலாம் என்ற ஏக்கம் காட்டி கொடுத்துவிடுகிறது. இதே போல் இருப்பதற்கு துளி கூட இஷ்டம் இல்லை. இருக்கவும் கூடாது என்று வேண்டிகொள்கிறேன். கூழானாலும் அம்மா கையில் சாப்பிட்டால் தான் சுகம்.

புலம்பல் தவிர கொஞ்சம் ரசிக்கவும் முடிகிறது. எதெல்லாம்? அவ்வப்போது புரியாமல் ஆனால் சகஜமாக பேசும் டிரைவர் அப்துலின் குஜராத்தி பேச்சு , முத்து சாப், முத்து சாப் என்று அழைக்கும் ஆபிஸ் பாய் முகேஷின் குரல், ஒரு பேனா கிடைக்குமா என்று ஏக்கமாக கேட்ட காக்காவிற்கு பேனா கொடுத்த பொழுது ஏற்பட்ட சந்தோசம்,(காகா - டீ கொடுக்கும் தாத்தா), Township வெளியில் கிடைக்கும் பரப் கோலா. ( ஐசை பூபோல் உதிர்த்து அதில் பிடித்த flavor. என்னுடைய favorite limcaa தான்,ரெண்டு ரூபா மட்டுமே ), சாயாஜி அரண்மனையில் பார்த்த 1500 ஆண்டு பழமையான் மம்மியின் உடல்,ஏழு மணிக்கே முதுகில் மூட்டை கட்டி கொண்டு பள்ளிக்கு செல்லும் குட்டிஸ்கள்,மெஸ்ஸில் பெங்காலி பைய்யனான கிருஷ்ணா வுடன் ஹிந்தி உரையாடல். ( கொஞ்சம் ஹிந்தி வரும், வரவைத்துவிட்டர்கள்), கொஞ்சம் shuttle, கொஞ்சம் புல்தரை, கொஞ்சம் ச்சிக்கு (சப்போட்டா பழம்), நிறைய ஆனால் நித்தம் என்னை உயிர் வாழ வைக்கும் செல் பேச்சு.

மீண்டும் என் சிங்கார சென்னைக்கு வர துடிக்கிறேன். அந்த நாளும் வந்திடாதோ ???

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read