மணி ஏழை நெருங்கி கொண்டிருந்தது. சில்லென்ற பனிக்காற்று போட்டிருந்த ஆடையின் ஊடே ஊடுருவிசென்றது. வெளியே சாரல் மழை. நாங்கள் சென்று கொண்டிருந்த தொடர் வண்டி ஊட்டியை நெருங்க நெருங்க வேகம் குறைந்திருந்தது.

மலைப்ரதேசமாதலால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று குளிர்ச்சியை கொடுத்தது. குளிருக்கு இதமாக ஸ்வட்டரை மூடிக்கொண்டு மனைவி நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். அவள் அருகே என் குழந்தை வாயில் விரல் இட்டு தூக்கத்தில் இருந்தது. முதலில் விரல் சூப்புவதை நிறுத்த ஒரு வழி செய்ய வேண்டும். அடுத்த பத்தாவது நிமிடத்தில் "உதகை அன்புடன்…" என்ற போர்டு வரவேற்றது.

இரண்டு மணி நேரத்திற்குள் முழுவதுமாய் புத்துணர்வு பெற்று ரூமை பூட்டிக்கொண்டு கிளம்பினோம். மத்திய வேளையில் கூட குளிர் ஆட்டிகொண்டிருந்தது. எதிர்பார்த்திருந்த ஆனால் அன்று எதிர்பார்க்காத எதோ ஒன்று நடகவிருபது போல் மனம் முழுவதும் மகிழ்ச்சி வியாபித்திருந்தது. அங்கிருந்து சரியாக அரை மணி நேர கார் பயணத்தில் "பொட்டானிகல் கார்டனில் " உதிர்ந்து கொண்டோம். புல்வெளியை பார்த்த மாத்திரத்தில் குழந்தை ஓடி சென்று உருள ஆரம்பித்தது. மனம் முழுவதும் அந்த ஆசை இருந்தாலும் வயதும் போலி கௌரவமும் அதை தடுத்து நிறுத்த, மெதுவாக மனைவியிடம் பேசி கொண்டே நடக்க ஆரம்பித்தேன்.

கார்டனில் முதலில் நாங்கள் சென்று பார்த்தது கண்ணாடி மாளிகை (Glass House ) தான். இத்தனை வகை ரோஜா செடியா என்று ஆச்சர்யப்படும் விதத்தில் அத்தனை வகைகள். அழகாக அடுக்கியிருந்தார்கள். எல்லா இடங்களிலும் "செடிகளை தொடாதிர்கள்" என்ற வாசகம் எச்சரிக்கை செய்து கொண்டிருக்க, அதை அலட்சியம் செய்வது போல் சிலர் பூவை பறித்து கொண்டிருந்தார்கள். குழந்தையும் மனைவியும் ஒவ்வொரு ரோஜாவாக ரசித்து கொண்டிருக்க, நான் மெதுவாக வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இரண்டு சுட்டி பையன்கள் செடிகளுக்கு அருகில் செல்ல, " Don't go there" என்று ஒரு பெண்மணி கத்திகொண்டிருக்க கண்டிப்பாக அம்மாவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த முகம் எனக்கு நன்கு பரிச்சியமாகியிருந்தது. இன்னும் அருகில் சென்று பார்க்க, "அட இது பிரியா அல்லவா?, எத்தனை வருடமாயிற்று?"

கண்முன்னே கொசுவர்த்தி சுருள் சுற்ற மனது ஒரு பத்து வருடத்திற்கு முன் சென்றது. கல்லூரியில் இரண்டாமாண்டு குப்பைகொட்டிகொண்டிருந்த நேரம். ஒரு கருத்தரங்கிற்காக குறிப்பிட்ட கல்லூரியில் இருந்து சிலபேர் மட்டும் கலந்துகொண்டோம். அங்கு தான் முதன் முதலில் அவளை சந்தித்தேன். சந்தித்தேன் என்று சொல்வதை விட பார்த்தேன் என்று சொல்வது தான் பொருந்தும். "எந்த காலேஜ்" என்ற பரஸ்பர கேள்வியை தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அதன் பின் இரண்டு வருடம் கழித்து ஒரு நேர்முகத்தேர்விற்காக பெங்களூர் செல்ல, ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக அவளும் அங்கு வந்திருந்தாள். அதன் பின்பு மீண்டும் ஒருமுறை அறிமுகமாகிக்கொண்டு பேசி கொண்டோம். இரவு நேரம் தான் பேருந்து என்பதால் வேறு வழியில்லாமல் இருவரும் சேர்ந்து பெங்களூரை சுற்றி வர வேண்டிதாகியது. ஆனால் அந்த தருணத்தை ஏற்படுத்தி கொடுத்த கடவுளுக்கு நான் பல முறை நன்றி கூறியிருக்கிறேன். இல்லையென்றால் அது மாதிரியானதொரு உண்மையான நட்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அங்கு ஆரம்பித்தது, பின்பு இரண்டு வருடம், அடுத்த வேளை என்ன உணவு என்பது முதல் அடுத்த நிமிடம் என்ன செய்வோம் என்பது வரை ஆழமாய் வேரூன்றியிருந்தது. வெகு சீக்கிரமே அவள் திருமணமாகி சென்று விட, இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, பின்பு பண்டிகை நாட்கள், முக்கிய நிகழ்வுகள் என்கிற ரீதியில் தான் தொடர்பிருந்தது. ஆனால் இப்பொழுது வரை அவள் கொடுத்த பரிசுகளும், எடுத்த புகைபடங்களும், நீங்காத நினைவுகளும் என் மனதில் அந்த நட்பை உயிருடன் வைத்திருந்தன.
கொசுவர்த்தி சுருள் அணைந்து விட, நிஜ உலகிற்கு வந்து ஒரு முறை கிள்ளி பார்த்து கொண்டு உறுதி செய்துகொண்டேன்.

"ஹாய் ப்ரியா?" சந்தேகுத்துடன் அழைக்க, நிமிர்ந்தாள். அவளே தான்.

"ஹாய்ய்ய்…..நீ நீயா??. I just can't believe my eyes. எப்டி இருக்கிற…இங்க எப்டி? I cant control it. குதித்தே விட்டாள். நானும்.

நீல நிற புடவை. வயதை மறைப்பதற்கான முயற்சிகள் எதுவும் இல்லை. ரேமண்ட்ஸ் பேனாவில் அளவேடுத்தது புள்ளி வைத்தது போல் சின்ன பொட்டு. தரையை தொட்டு விடும் என்ற பயத்தில் கூந்தல். அன்று எப்படி பார்த்தேனோ அதே போல் இருந்தாள். தினமும் வாக்கிங் செல்வதால் கொஞ்சம் கூட மாறவில்லை என்று நினைக்கிறேன் . High heels. இன்னும் விட வில்லை போல்.

பிரியா, "ஏய் என்ன அப்படி பாக்குற….?"

"இல்ல இன்னும் எப்டி அதே மாதிரி அசிங்கமா இருக்கிறனு பார்த்தேன், பிரியா"

"ஒ! நான் கூட டூர் வந்த இடத்தில உன்ன பாத்துடோமேன்னு வருத்தத்துல இருக்கிறேன் போ."

அடிக்கடி ஒருவர் மாற்றி ஒருவர் இப்படி காலை வாரிகொள்வதுண்டு.

"சரி சரி போதும். எங்க இருக்கிற பிரியா எப்படி இருக்கிற?"

"நான் வேலைக்கு ஜாய்ன் பனி ஒரே வருசக்த்டுல திருச்சி வந்துட்டேன்.

 இன்னும் அங்க தான் இருக்கிறேன். கோகுல் கொஞ்சம் இங்க வாங்க".

ஆறடி உயரத்தில் ஒருவர் அருகில் வந்தார்.

பிரியா, This is my friend, நான் சொலிருகேன்ல."

"oh yes. glad to meet u here. நிறைய தடவ உங்கள பத்தி சொலிருக்கா . still நீங்க DELL la தான் இருகிரிங்களா?"

"ஆமா நான் இனும் அங்க தான் continue பண்றேன். நீங்க.?"

"I am with priya. that is easy for us too…."

"thats great…."

அதற்குள் வாண்டுகள் இரண்டும் எங்கோ ஓடி விட, அதை துரத்தி கொண்டு கோகுல் சென்றார்.

பிரியா, "ரொம்ப நாளாச்சுல்ல? I am so happy you know?".

"எனக்கும் தான் ப்ரியா. ரெண்டுமே உன்னுடைய குழந்தைங்களா? so cute. பேரு என்ன?"

"பிரியா"

"நான் உன் குழந்தைங்க பேர கேட்டேன்."

"ஒ..ஸ்ரீ, ராம். ரொம்ப துரம் போய்ட்டியே டா. ஞாபகம் வச்சிருந்தியா?"

"சத்தியமா உன்ன ஞாபகம் வச்சிருகல பிரியா. மறந்தாத்தனே ஞாபகம் வச்சுக்க."

"ம்ம்ம். உன்ன பார்த்ததும் நிறைய பேசனும்னு நினைச்சிருந்தேன். பட் எல்லாம் மறந்துட்டு."

"நானும் ப்ரியா. நிஜமா."

"பொய் சொல்லாத பிராடு, எங்க உன் வைப்?"

"oh yes மறந்தே போய்டேன். ஸ்வப்ன ithar aao."

"ஸ்வப்னாவா . நம்ம ஊரு மாதிரி தெரியலையே.?"

"ஆமா நாக்பூர் தான். குஜராத்தி. ரெண்டு பேருக்குமே பிடிச்சிருந்தது. அதான்.."

ஸ்வப்னா அருகில் வர, பரஸ்பர அறிமுகம் முடிந்த பின், எனது குழந்தைய அப்பொழுது தான் கவனித்தாள்.

குழந்தையை கையில் தூக்கி கொண்டாள்.

"ஹாய் உன் பேரு என்ன?"

"ராஜி"

உடனே என்னை திரும்பி பார்த்த பிரியா, " still u….இன்னும் நீ அவளை மறக்கலையா?, ஸ்வப்னா எப்படி இதுக்கு ஒத்துகிட்டாங்க?"

"அதனாலத்தான் சொல்றேன். இப்போ அத பத்தி பேசி என் பத்தினிட்ட என்ன மாட்டி விட்டுடாத."

"உன்ன திருத்தவே முடியாது டா. ஸ்வப்னா…உங்களுக்கு தமிழ் தெரியுமா?."

"கொஞ்சம் கொஞ்சம் ப்ரியா…இல்லன இவர் அடிக்கிற லூட்டிய தாங்க முடியாது."

நல்ல நேரத்திற்கு ராஜி ஒரு மானை துரத்தி ஓட, ஸ்வப்னா அவள் பின்னாடி சென்றுவிட்டாள்.

ப்ரியா,"அம்மா அப்பா எல்லாரும்..?"

"எல்லாரும் என்னோட தான். இன்னும் அம்மா மடில தூளி ஆடுறேன் போதுமா?"

"நீ கொஞ்சம் கூட மாறல. சரி வா. எதாவது சாப்பிடலாம்."

நாங்கள் இருவரும் அருகில் இருந்த புட் கோர்ட்டுக்கு நடந்து சென்றோம்.

பிரியா, "I am so tired. நேத்து முழுதும் ட்ராவல். தூக்கமா இருக்கு. "

"327 வது தடவ."


'என்னது?"

"நீ என் பக்கதுல இருக்கும் போது தூக்கம் வருதுன்னு சொல்லி insult பண்றது."

"ஒ! நீ இன்னும் மாறல.உனக்கு எப்படி இவ்ளோ அழகா ஒரு குழந்தைனு யோசிச்சேன்."

"ஆமா நான் கூட கோகுல் ஸ்மார்டா இருக்றத கவனிச்சேன்."

இருவரும் சிரித்து கொண்டோம்.உள்ளே நுழைந்து டேபிளில் எதிர் எதிரே உட்கார்ந்தோம். பேரர் அருகே வந்து மெனுவை அடுக்க ஆரம்பித்திருந்தான். அவனை பாதியில் நிறுத்தி,

"ரெண்டு ஸ்வீட் பொங்கல்,ரெண்டு சிக்கன் பிரியாணி. கொண்டு வாப்பா."

"That's My favorite da.. "

"அதான் ஆர்டர் பண்ணினேன்".

"ம்ம்ம். இன்னும் மறக்காம ஞாபகம் வச்சிருக்கிற. சந்தோசம் தான். நீ ஏன் திருச்சி வந்துட கூடாது."

"ஆமா. பல தடவ என் கைல transfer ordera குடுத்து போயிட்டு போயிட்டு வா னு சொன்னனுங்க. நீ வேற. இன்னும் என்ன transfer பண்றானுங்க. retire ஆகிரதுக்குல முடியும்னு நினைக்கிறேன் பிரியா."

"நீ, ஸ்வப்னா,கோகுல்,நான் எல்லாம் ஒன்ன இருந்த நல்லாருக்கும் இல்லையா?"

"ஆமா பிரியா. but நீ இவ்ளோ தூரம் இருந்ததால்தான் நான் உன்ன எப்ப பாக்கபோறேன்ர ஆர்வம் இருந்தது. இப்ப கூட பாரு, இங்க உன்ன பார்ப்பேன்னு நினைச்சு கூடபாக்கல தெரியுமா . I am so happy. இந்த சந்தோசம் அடுத்து எப்ப வரும்னு தெரியாம, ஆனா கண்டிப்பா இருக்குன்னு தெரிஞ்சுட்டு வாழ்ரதுலதான்….."

"I can understand….சொல்ல வேணாம் புரியுது. ஆனா ரொம்ப கஷ்டமா…."

அவளுடைய செல்போன் சிணுங்கியது. "கோகுல் தான், ஆங். ஓகே கோகுல். I am coming there."

பிரியா,"கோகுல அங்க கேட் பக்கம் வெயிட் பண்றார். இன்னும் அரை மணி நேரத்துல train, so…"

"ஓகே ப்ரியா. carry on. Will meet you again. ஆனா எப்ப எங்கனு தெரிய வேண்டாம்."

இருவர் கண்ணிலும் நீர் துளிர்த்ததை மறைக்க முடியவில்லை.அவள் குழந்தையுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவர்கள் வந்த கார் தூரத்தே சென்று புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று மனதில் ஒரு வெறுமை சூழ்ந்த மாதிரியான ஒரு உணர்வு. என் குழந்தை அருகில் வந்தது.

"டாடி, அம்மா அங்க என்ன போக விடமாட்டேன்றாங்க". மழலையாய் உதிர்த்தது.

"ஏன் ஸ்வப்னா?" என்று கேட்டுக்கொண்டே மீண்டும் புல்வெளிக்குள் நடக்க ஆரம்பித்தேன்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read