சென்னை வந்து நான்கு மாதங்கள் சென்றும் கடற்கரைக்கு ஒருமுறை கூட செல்ல முடியவில்லை. அவ்வளவு வேலையா என்று கேட்க வேண்டாம். கண்டிப்பாக இல்லை. சரியான நேரம் அமையவில்லை. அந்த நாளும் வந்திடாதோ என்பது போல் அந்த நாளும் வந்தது. நானும் சென்றென்.

அலுவலகத்திலிருந்து நேராகவே சென்றேன். சாலையிலிரிந்து நேராக கடலை பார்பதற்க்கு அருகில் தெரிந்தால் கூட குறைந்தது அரை கிலோமீட்டராவது இருக்கும். கடற்கரை மணலில் கால் மிதித்து பழகலாம் என்று நினைக்கும் போது காலில் மாட்டியிருந்த ஷூ அந்த நினைப்பை ஒத்தி போட்டது. எந்த நாளானலும் அங்கு அதிக அளவு ஜனத்திரளை காண முடிகிரது. வகை வகையாக மனிதர்கள்.

அலுவலகித்திலிருந்து திரும்பி வரும் ஐம்பது வயதை ஒத்தவர்கள்.தன்னுடய மகனுக்கு காலேக் ஃபீஸ் அல்லது தன்னுடய மகளுடய கல்யாண செலவை பற்றிய சிந்தனை மனதில் ஒடி கொன்டிருக்கும்…முக்கால் வாசி நேரம் அவர்களை கையில் ஒரு சிறு பொட்டலத்தில் சுண்டல், கண்டிப்பாக வெள்ளெழுத்து கண்ணாடி, சிறிய பை ஒன்று, அருகில் கழட்டி வைக்கபட்டிருக்கும் செருப்பு. இன்னும் சில பேர் குழந்தையுடன் வந்திருக்கும் பெண்களாக இருப்பார்கள். மூன்று நான்கு பெர் கூட்டமாக. அவர்கள் உட்காந்திருக்க குழந்தைகள் அவர்களை சுற்றி சுற்றி விளையாடி கொண்டிருக்கும். ஜோடிகளை கேட்கவே வேண்டாம். காலியான பெட்டிகடை முதல் உடைந்து நிற்கும் குச்சி வரை மறைவிடமாக நினைத்து கொண்டும் கிசுகிசுத்து கொண்டும் அலம்பல் தாங்க முடியாது.(உனக்கு என்ன போச்சு?? நாம single.அதான் ஒரு காண்டு)

எப்பொழுதும் அவர்களுடன் சுண்டல் விற்பவர்கள். பத்தடிக்கு பத்தடி ரூமில் இருந்து கொண்டு மோட்டு வளையை பார்த்து கொண்டிருப்பதை விட இது போல் பரந்து விரிந்து கண்ணுக்கு எட்டிய வரை எல்லையே இல்லாத இடத்தில் உட்கார்ந்து இருப்பதில் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கிறது. ஏதொ இங்கு வந்து நிலாவுக்கு ராக்கெட் அனுப்புவதற்கு யோசிக்கிரேனோ இல்லையோ, மனம் கனமில்லாமல் இருப்பது போன்ற ஒரு உணர்வு.

அலையில் கால் நனைத்து விளையாடுவது எப்பொழுதும் குழந்தை பருவத்தை ஞாபக படுத்திவிடும். அம்மா அப்பாவுடன் கை கோர்த்து கொண்டு பயந்து பயந்து அலையில் கால் நனைத்தது ஒரு அலாதி சுகம் தான். ஏதொ அலையும் நாமும் தொட்டு தொட்டு விளையாடுவது போன்ற ஓர் உணர்வு. தூரத்தில் தெரியும் கப்பலும் சில வெளிச்ச புள்ளிகளாய் தெரியும் மீனவ படகுகளும் எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கலாம் என்பது பொல் தோன்றும்.ஆனால் எப்பொழுது பார்த்தாலும் இதை கேட்க தோன்றுகிறது. இவ்வளவு அமைதியாக இருந்த நீயா சுனாமியாக உருவெடுத்தாய்? என்று.
எது எப்படியொ, ஒரு முறை கடற்கரைக்கு சென்று வந்தால் அந்த பிரம்மாண்டம் என்னுடய முக்கிய விடயங்கலும் கவலைகளும் இன்னும் பிற இத்யாதிகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பது போல் உள்ளது.

வாரம் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read