தினம் இரவு கைப்பேசியில் அம்மா அப்பாவை அழைத்து குசலம் விசாரிப்பது வழக்கம். அன்றும் வழக்கம்போல் பேசி கொண்டிருந்த பொழுது மாதம்பாக்கம் அருகில் தெஅனுபூரிஸ்வரர் ஆலயம் இருப்பதாகவும் 18 சித்தர்களையும் நிறுவியிருப்பதாகவும் சொன்னார்கள். சரி முயற்சித்து பார்க்கலாம் என்று தேடியதில் தாம்பரம் கேம்ப் ரோடில் இருந்து ராஜ கீழ்பாக்கம் செல்லும் வழியில் இருப்பது தெரிந்தது. ஆனால் M51G என்ற ஒரே பேருந்து தான். அதுவும் தினதிற்க்கு நான்கு முறை தான் என்பது தெரிந்தது. இந்த முறை பின் வாங்கவில்லை.ஆட்டோவிலாவது போய் விடலாம் என்று முடிவெடுத்து கிளம்பிவிட்டோம்.

இந்த முறை என்னுடன் இரண்டு நண்பர்கள். ஒரு வழியாக T51 பிடித்து கேம்ப் ரோடில் குதித்த பொழுது மணி 2.30. எத்தனை மணிக்கு இந்த M51G வரும் என்று தெரியாதலால் ஆட்டோவில் செல்லலாம் என்று முடிவெடுத்த நேரத்தில் பேருந்து வந்து விட்டது. அப்பொழுது தான் தெரிந்தது இருபது நிமிஷத்திற்கு ஒரு பேருந்து என்று.எங்க்ளுடய 75 ரூபாயய் சேமித்த தாம்பரம் பேருராட்சி 18 வது வார்டின் சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துவிட்டு பயணமாணோம். 4 ரூபாய் டிக்கடுக்கு பதினைந்து நிமிடத்தில் இறக்கி விட்டார்கள்.


பச்சை பசேல் என்று சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடமா என்று நம்ப முடியவில்லை. எனக்கு எங்கள் ஊர் அருகில் இருக்கும் கருங்குளம் நியாபகதிற்கு வந்தது.நாங்கள் சென்ற நேரம் உள்ளே அனுமதிக்க வில்லை ஆதலால் அருகில் இருந்த தெப்பத்தில் சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்தோம். மிகப்பெரிய தெப்பம். எங்களைத்தவிர யாரும் இல்லை. நாங்கள் இருந்ததாலோ என்னவோ நிர்வாண மீன்கள் வெளியில் எட்டி பார்க்க வில்லை.(ஏதோ try பண்றான் !!!).


அதே போல் 18 சித்தர்களுக்கான கோவில் அருகிலயே ஒரு ஸ்வாமிகளுடய மடத்தில் இருந்தது. சதாசிவ ஸ்வாமிகள் என்று நினைக்கிறேன். 1870-1929. அங்கே விஷேஷமாக பச்சைக்கல்லை நிறுவியிருந்தார்கள். ஸ்ரீ சக்கரத்தை 3D யில் எxட்ருடெ செய்தால் எப்படி இருக்குமோ அது போல் இருந்தது. இரண்டடி உயரம் இருக்கும். விப்ரடிஒன் அதிகம் இருக்கும் என்ற காரணதினால் கல்லை நிறுவியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதை தவிர சித்தர்களுக்கு என்று தனியாக பாலாலயம் இருக்கிறது. 18 சித்தர்களும் உள்ளே வீற்றிருக்க வெளியில் இருந்த வாட்ச்மேன் "தொடாம பாருங்க" என்று கத்திக்கொண்டிருந்தான். எல்லாச்சிலைகளுமே பாலிஷ்ட். ஒரிரு ஆண்டுகளுக்கு முன் செய்தவையாக இருக்கும். வட இந்தியாவில் சிலைகள் முழுவதும் பாலிஷ்டாக இருக்கும். உள்ளே குடிப்பதற்கு அக்வா ப்யுரிஃபைட் தண்ணீர் இருந்தது. ஆனாலும் உப்பு அதிகமாகத்தான் இருந்தது.

அதை முடித்துவிட்டு சரியாக ஐந்து மணிக்கு நடை திறக்க உள் சென்றோம்..கோவில் கோபுரம் சிதிலமடைந்திருந்தது அல்லது கோபுரமே இல்லை. சரியாக 1000 வருடம் பழமையானது.பராந்தகச்சோழன் கீ.பீ.954 இல் கட்டியிருக்கிறான். கம்பீரமான கொடிமரம். பலி பீடம். இடது புறம் திரும்பியிருந்த நந்தி. அதன் பிறகு சுயம்பு லிங்கம். சுயம்பு லிங்கம் மிகச்சிறியதாக இருந்தது. உள் பிரகாரச்சுற்றில் தக்ஷினாமூர்த்தி, பிள்ளயார்,முருகன் என்ற வழக்கம் போல் அவருடய பரிவாரங்கள். கவனிக்கதக்க வகையில் கருவரையய் ரதம் போல் அமைதிருந்தார்கள். எல்லாக் கல்களிலும் புரியாத வகையில் எழுத்துக்கள் வெட்டபட்டிருந்தன. இந்த முறை படிக்க முயன்றதில் " பயிர் செய்த முழுவதும் " என்று ஒரு வரி மட்டும் விளங்கியது. மற்றவை முழுவதும் புரியாத செந்தமிழிழும் அல்லது எழுத்துக்கள் மங்கியும் இருந்தன. 1000 வருடங்கள் கம்பீரமாக நிற்கும் அந்த கோவில் ஒரு பிரமாண்டத்தை தான் தருகிறது. அதைத்தவிர கல்வெட்டில் உபயோகமான குறிப்புகள் ஏதாவது கிடைக்கலாம்.தமிழருடைய வாழ்க்கை பண்பாட்டு முறையை பறை சாற்றுவதாக இருக்கலாம். இதையெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு அரசு நிதி ஒதுக்கலாம். அல்லது ஒரு துறை ஏற்படுத்தலாம்.


தேனுகம்பாளும் அருகிலேயே காட்சி தருகிறார். நால்வர் சன்னதி, சூரியன்,சந்திரன்,பைரவர் இவையெல்லம் இது போன்ற புராதன கோவில்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. வெளி பிரகாரச்சுற்று முழுவதும் தோட்டம் போல் பராமரிதிருந்தார்கள். நல்லவேளை கோவில் மதில் சுவரில் வெள்ளை அடிக்கவில்லை. அந்த பழமை அப்படியே இருக்க சுவர் முழுவதும் கை வைத்து கோடு போல் தடவிக்குடுத்து கொண்டே சுற்றி வந்தோம். கோவில் மண்டபத்தூண்கள் முழுவது சிற்பங்கள் தான். சிலவற்றை பதிவேற்றம் செய்துள்ளேன். பாலக்குமாரனிண் உடையார், சாண்டில்யனிண் நீழ் விழி, சந்திரவதனா (எஸ்.பாலசுப்பிரமணியண்), நான் கிருஷ்ணதேவராயன் போன்ற நூல்களைப் படிக்கும் பொழுது எப்படியாவது அந்த காலத்தில் வாழ்ந்து விட முடியாதா என்று தோன்றும்.அவர்களுடய வர்ணணைகள அது போன்று இருக்கும். (The other Side is always Green). அதற்கு இதை போன்ற கோவில்கள் ஒரு வடிகால் என்பதில் எந்த ஐய்யப்பாடும் இல்லை.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read