அவன் tvs ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான். கொஞ்சம் ஸ்மார்ட்டாக தான் இருந்தான். அநேகமாக ஆபிஸ் முடித்து செல்பவனாக இருக்க வேண்டும். ஒரு பேருந்து வந்தது.கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் ஏறி விடலாம் என்று முடிவு செய்து படிக்கட்டில் தொற்றி கொண்டபொழுது மணி சரியாக 6.30.

"சார் கொஞ்சம் உள்ள போங்க சார்".

பேருந்துக்குள் எப்படியோ உள் சென்று நின்று விட்டான். ஆசுவாசப்படுத்தி கொண்டு பார்த்தபொழுது தான் நிற்க கூட இடமில்லாமல் நிற்பது புரிந்தது. டிக்கட்டை வேறு எடுக்க வேண்டும். சனியன் பர்சை வேறு காணவில்லை.

"சார் ஒரு டூ ருபீஸ் டிகாட் எடுங்க".

"சார் எனக்கு ஒரு சாந்தி வாங்கி குடுங்க".

"என்னது?"

"டிக்கட் சார்."

"ஒ. அப்படியா. நானும் அங்க தான் போகணும்.எத்தனாவது ஸ்டாப்பு?"

"இதுக்கு அடுத்தது சார்".

கூட்டநெரிசலில் மூச்சு விட முடியவில்லை.

"கொஞ்சம் நகரு. படிகட்டுல நிக்காத.உள்ள வா". கண்டக்டர் கத்தி கொண்டே எச்சி தொட்டு டிக்கட் கிழித்தார்.

இரண்டு மூன்று பேருக்கு டிக்கட் வாங்கி குடுத்துவிட்டு இவன் டிக்கட் வாங்குவதற்கு காசை எடுத்தான். அதற்குள் சாந்தி வந்துவிட்டாள்.

"சார் ஒரு டூ ருபீஸ் குடுங்க".

கண்டக்டர் காதில் வாங்கியது மாதிரியே தெரியவில்லை. சரி ரெண்டு ரூபாய் கவர்மெண்டுக்கு நஷ்டம் என்று இறங்கி மணி பார்க்க யத்தநித்தபொழுது தான் அவனுக்கு தெரிந்தது. மொபைலை யாரோ அபேஸ் செய்து விட்டார்கள்.திரும்பி பார்த்த பொழுது பேருந்து அங்கேயே நிற்க ஓடி சென்று தோற்றினான். மொபைலை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் என்று வெறியில் படிக்கட்டில் நின்றவர் பாக்கெட்டில் கை விட்டான்.

"டேய்" !!??.

"சார் என் மொபைல யாரோ எடுத்துட்டாங்க. கொஞ்சம் குடுங்க கால் பண்ணிக்கிறேன்".

அவர் யோசித்தார். இவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் டயல் செய்தான்.

"The airtel mobile you are calling is curently sitched off"

உஷார் பார்ட்டி. உடனே ஆப் பண்ணிவிட்டான்.

"சார் ஒரு கருப்பு கலர், சாம்சுங் மொபைல். நீங்க பாத்திங்களா ?"

"எங்கப்பா ஏறுன. எந்த ஸ்டாப்பு?"

"tvs ஸ்டாப் சார். "

"தம்பி நம்பர் சொல்லு".

இரண்டு மூன்று பேர் கேட்டுவிட்டு டயல் செய்தார்கள். ஒருத்தர் speekaril போட்டு "சுவிட்ச் ஆப்" என்பதை காண்பித்தார்.

கம்பியில் சாய்ந்து கொண்டிருந்த ஒருவன் கேட்டான். "என்ன சார் சின்ன மொபைலா?"

"ஆமாங்க அங்க இருக்குதா? "

சுவிட்ச் ஆப் செயப்பட்ட மொபைல் அங்கு கீழே விழுந்து கிடக்க கூடாதா என்று தேடிய அவன் முகத்தை பார்க்கையில் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருந்தது.சுற்றி உள்ள எல்லோரும் திருடர்கள் மாதிரி தெரிந்தார்கள் .
சார் தப்ப எடுத்துகாதிங்க என்று ஒருவர் பாக்கெட்டை தொட்டு பார்த்தான்.
இதுல என்னப்பா? பாத்துக்க என்றார். ஒரு ஐந்து ஆறு பேர் பாக்கெட்டை அலசி விட்டு விரக்தியாய் கொஞ்சம் பதட்டமாக மறுபடியும் கால் செய்து பார்த்தான்.

"….switched off"

பார்ட்டி அதுக்குள்ள சிம்ம தூக்கி போட்டுருப்பான் என்று ஒருவன் ஜோசியம் சொல்ல மீண்டும் டிக்கட் எடுக்காமலயே கீழ் இறங்கினான்.இறங்கிய இடம் பார்க் ஸ்டேசனாக இருந்தது. பிளாட்பாரத்தில் நடந்த பொழுது இரண்டு முறை காற்றை கைய்யால் குத்தினான். .Shit சொல்லிகொண்டான்.
வேளச்சேரி செல்வதற்கு ஏறவேண்டிய வண்டிக்கு பதில் பீச் வண்டியில் ஏறிய பின் தலையில் அடித்து கொண்டான். அருகிலிருந்த ஒருவர் மொபைலை வாங்கி மீண்டும் டயல் செய்ய

 " The airtel mobile…off "

உடனே நம்பர லாக் பணிருங்க சார் என்றார் அவர்.விரக்தியாக படிகட்டை ஒரு முறை உதைத்து விட்டு கம்பியில் சாய்ந்து கொண்டான்.சிங்கார சென்னையில் அன்று மொபைலை தொலைத்த பல பேரில் அவனும் ஒருவன்.

பின்குறிப்பு:

1. அந்த அவன் - சாட்சாத் நானே.

2.ஆறாவது ஏழாவது வார்த்தைகளை தயவு கூர்ந்து மன்னிக்கவும்

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read