சென்னைக்கு வந்தது முதல் நான் சப்பிட்டேனா என்று வேளாவேளைக்கு கேட்பது போல் அடிக்கடி சுருட்டபள்ளி போய் பார்த்து விட்டு வா என்று அம்மா கூறுவதுண்டு. விஷேஷம் என்னவென்றால் அங்கு சிவன் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டிருப்பதே.பொதுவாக மனித வடிவில் சிவனை பார்ப்பது அபூர்வம்.அதுவும் அனந்த சயனத்தில் !!. ஒரு முறை மேலோட்டமக விசாரித்து பார்த்ததில் அது ஆந்திரா அருகில் இருக்கும் என்று தெரிய வர பிறகு பார்க்கலாம் என்று ஒத்தி வைத்தேன்.
ஆனால் ட்ரைனிங் முடிந்து ப்ராஜெக்ட் ல் என்னை அமர்த்திய பிறகு வேலை பழு அதிகமிருந்த காரணத்தினாலும் சிறிது கூட திரும்பி பார்க்க நேரமில்லாத காரணத்தினாலும் வலைதளத்தில் தேடி பார்த்த பொழுது சுருட்டபள்ளி என்பது வட சென்னையை தாண்டி பெரிய பாளையம் அருகாமையில் இருப்பது தெரிய வந்தது. அதுவுமில்லாமல் காஞ்சிபுர மாவட்டத்தையே தற்போது சென்னை என்று அழைக்கிறர்கள். செங்கல்பட்டிலிருந்து அசாரதணமாக சென்னை பீச்சில் வந்து வேலை பார்த்துவிட்டு செல்கிறர்கள். அதனால் கண்டிப்பாக மு.க.ஸ்டாலின் பேரூந்து விட்டிருப்பார் என்ற நம்பிக்கையில் தேடி பார்க்க திருப்பதி செல்லும் அனைத்து APSRTC பேருந்துகளும் போகும் என்பது தெரிய வந்தது. விடு ஜூட்.

நான் சுருட்டப்ள்ளி போவதற்கு முன்பு தேடியவை மற்றும் அங்கு கண்டு கொண்டதை இங்கு தருகிறேன். சென்னை கோயம்பேடிலிருந்து முன் சொன்னது போல் திருப்பதி செல்லும் அனைத்து APSRTC பேருந்துகளும் அதன் வழியாகத்தான் செல்லும். எல்லமே TATA ரகப்பேருந்துகள். இதைத்தவிர காலஹஸ்திரி செல்லும் தமிழ்நாட்டு பேருந்துகளும் செல்கின்றன. அதையும் விட்டால் கோயம்பேடிலிந்து பெரிய பாளயம் சென்று அங்கிருந்து பின்பு ஊத்துக்கோட்டை செல்ல வேண்டும். பின்பு ஒரு ஷேர் ஆட்டொ. ஐந்து ரூபாய் இருக்கலாம்.மொத்தமாக இரண்டு மணி நேரத்தில் சுருட்டபள்ளி கண்ணில் காண கிடைக்கும். தமிழ்நாடு பேரூந்து என்றால் 23 ரூபாய் பயண டிக்கட். APSRTC க்கு 26 ரூபாய் . அதிக நிறுத்தங்கள் இல்லை. பயண நேரம் குறைவு.
கோவில் கோபுரத்தை புதுப்பித்திருக்கிறார்கள். கி.பி. 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் அது. நானும் உடன் என் நன்பனும் சென்றிருந்தோம். நங்கள் சென்ற நேரம் சரியாக 12 மணி. நிலா காய்ந்ததில் காலை கீழே வைக்க முடியவில்லை. பிரதோஷ நாள் வேறு. சாதரணமாக அந்த நாளில் மட்டும் 15000 பேர் கூடுவார்களாம். சிவராத்திரியென்றால் 30000 மாம். கோவில் மிக சிறிது தான். இரண்டு கோபுரங்கள். ஒன்று மூலவர் மற்றும் பிள்ளையார், முருகன், தஷினாமூர்த்தி என்று குடும்பத்துடன். இன்னொன்றில் முன் சொன்னது போல் சிவன் அனந்த சயனத்தில். மூலவர் சுயம்பு. பழங்காலக்கோவில்கள் முழுவதிலும் சுயம்பு லிங்கங்கள் தான். இப்பொழுது கட்டப்பட்ட கோவிலில் இருப்பதை போல பாலீஷ்டாக இருக்க மாட்டார். முதலில் பரிவாரங்களை தரிசித்து விட்டு பின்பு இரண்டாமவரை தரிசிக்கச்சென்றோம். கூட்டமே இல்லை. ஒரு பாட்டி, இரண்டு பெண்கள் தான். தரிசிக்க நூறு ரூபாய் டிக்கட். ஏதோ தெலுங்கு பாட்டு பாடி கொண்டிருந்தான்.

நல்ல வேளை குடுக்காமல் பிரகாரச்சுற்று வரும்பொழுது இன்னொரு வழி இருப்பது தெரிந்தது. ஃப்ரீ யாகவே உள் சென்றோம். சிறிய நுழை வாயில் தான். உள்ளே எட்டிபார்த்தால் தான் அவருடைய சிரம் முதல் பாதம்வரை தரிசிக்க முடிகிறது. அந்த சிலை மட்டும் இரண்டாள் உயரம் இருக்கும்.அவரது மார்புக்கருகில் பார்வதி காட்சி தருகிறார்.மிகப்பிரமாண்டமான சிலை. இதற்கு 15000 என்ன 30000 பேர் கூட வந்தாலும் தகும் என்று தோனிற்று.காண கண் கோ….. பின்புறம் ரிஷிகளும் முனிவர்களும் வரைந்திருக்கிறாகள் மொத்தம் மூன்று முறை தரிசித்தோம். மூன்றாவது முறை அய்யர் கேட்டே விட்டார். தம்பி தேர்டா ஃபோர்த்தா என்று?. மூன்று என்று சொல்லி விட்டு பிரசாதத்தை ஈநாடு பேப்பாரில் மடித்து கொண்டு கிளம்பினோம். கோவிலிலிருந்து ஒரு மணி நேரத்தில் திருப்பதி என்று பழக்கடைக்காரர் சொல்ல நண்பனை பார்த்தேன். மொட்டை வெயிலில் வதங்கியிருந்த அவன் என்னை பதிலுக்கு முறைத்து பார்க்க APSRTC யில் திரும்பிவிட்டோம். டிரைவர் M.G.R பாட்டாகப்போட்டதில் அவ்வளவாக வெயில் தெரியவில்லை.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read