என்னடா இது?...ஆர்குட் அலம்பல்னு கேட்பது புரியுது. இது ஒன்னும் புளியொதரை சாப்பிடுட்டு செரிமானம் ஆகாம எழுதல. ஒரு ஆர்குட் குடிமகனின் புலம்பலனு கூட வச்சிக்கலாம். கடைசில வயித்தெரிச்சல்னு சொன்னா உங்க சௌகர்யம்.

சரி. புலம்பலுக்கு வருகிறேன்.

வர வர ஆர்குட்ல இவங்க தொல்லை தாங்க முடியலை சார். எப்ப பாத்தாலும் ஏதாவது பேரு வச்சிட்டு...அய்யய்யொ.[பர்க்க...உங்கள் நண்பர்களின் profile] அத ஏன் கேக்றீங்க?

சில பேர் இப்படி சாதாரணமக போட்டு கொள்வதை குறைகூறவில்லை. எப்படி?

" xxxx in chennai"

"xxxx- MS @ some University"

"xxxx- check my album"

ஆனால் பின்வருமாறு போட்டால் தான் ஏதொ கைக்கு எட்டாத இடத்தில் முதுகில் கொசு கடிப்பது பொன்ற உணர்வு.

ஒரு நண்பர்,"xxxx- whats happening with me?" அப்படின்னு ஒரு ஆறு மாசமா போட்டுருக்கார்.

இன்னொருத்தர் "xxx- discovering hte world"- ஏன் கலீலியொ கண்டுபிடிச்சது போதாதா?


சரி இது, " xxxx- crying for the moon?? "

இன்னொரு ஆசாமி," xxxx- feeling bored"

"xxx- i dont know what to do?"

இதெல்லாம் பார்க்கின்ற பொழுது ஏன் நாமும் இது போல் வைக்கலாமே என்று தோன்றுகிறது.

"smams- முறுக்கு சாப்பிட்டேன் "

"smams-இன்னைக்கு குளிக்கலாமுன்னு தோணுது. "

"smams-புது செருப்பு கடிக்குது "

"smams-எங்க வீட்டு நாய் இன்னைக்கு சப்பிடலை "

கொஞ்சம் விவகாரமான பேச்சு தான். என்ன செய்றது. அடக்க முடியலயே.


இதெல்லாம் விடுத்து சில senior citizenகளின் profilaஐ பார்க்கும் போது கொஞ்சம் அடக்கம் அல்லது நிதானம் தெரிகிறது. சிலவை எளிமையாக தெரிகின்றன.


"Balaji krishnamoorthy"

"ammayyappan"

"Karivel Manickam"

அவ்வளவே இருக்கின்றன. ஒரு வேளை ஆர்குட் நமக்கல்ல என்ற உணர்வா? இல்லை நாங்கள் பார்க்காததா என்ற களைப்பா?

நாமெல்லாம் ஆடித்தான் அடங்குவோம் என்று தோன்றுகிறது. எனக்கு ஏன் வம்பு? விடு ஜூட்

1 comments:

Soora Comedy da... Hey dude, seems u have very fertile HUMOUR>.. Try to write morreeeeeeeee MoReeeeeeeeeeeeee and Moooooooooooooooooooooooooooreeeee :))

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read