எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது.
ஆம்! நானே ராஜா. ஆனால் மந்திரி நானில்லை
என்னகென்று ஒரு மந்திரி சபை.
சில பல சேவகர்கள் என் சேவை அறிந்து செய்ய.
அதிகம் ஆசை படாததால் அந்தபுரத்தில்
ஒரே ஒரு ராணி !(சத்தியமாக உண்மை இல்லை)
எங்கு படை எடுத்து சென்றாலும் வெற்றி முழக்கம்.
என் தினவெடுத்த தோள் கண்டவுடன்
எதிரி நாட்டு மன்னன் அடி பனிகிறான்.
கப்பம் பலர் கட்டுகிறார்கள்.
எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது!


அதோ அங்கே சாலையில் ஒருவன்
என்னை பார்த்து முறைக்கிறான்
“யாருடா நீ ? “ ஒங்கி ஒரு குத்து
உடனே கீழே விழுந்தான்.
அதோ காரில் பந்தாவை ஒருத்தன்.
கார் உடனே எனக்கு சொந்தமாகியது.
போலிஸ்காரர்கள் என்னிடம் ஒன்றும் கேட்பது
இல்லை. லைசென்ஸ் காமிக்க முடியாது என்று
சொல்கிறேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை.
எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது!வானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன்.
ஏபிஜே அப்துல் கலாமோடு.
அவரிடம் நான் அப்பாயின்ட்மன்ட் வாங்கவில்லை.
அவர் என்னிடம் வாங்கினார்.
பல நாடுகள் செல்லுகிறேன்.
சென்ற இடமெல்லாம்
ரத்தின கம்பள வரேவெற்பு!
இது எனக்கு புதிது இல்லை.
எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது!

இதோ மீண்டும் என் பின்னால் பெண்கள் கூட்டம்.
வேண்டாம் என்று அடிக்கடி சொல்கிறேன்.
அதிகமாய் என்னிடம் எதிர்பார்கிறார்கள்
என் ஆட்டோகிராபை!
நான் விரும்பிய என் காதலியுடன்
அல்ப்ஸ் மலையிலும் ஆகாயத்திலும்
டுயட் அரங்கேறியது செலவில்லமால்.
எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது!என்னுடைய ராஜ்ஜியம் இது.
உலகம் முழுவதும் என் கட்டளையில்.
சொடக்கு பொடும் நேரத்தில்
ஆரவாரம் என்ன? அரங்கேற்றம் என்ன?
நினைத்த நேரத்தில் எல்லாம் நடக்கிறது.
கர்ப்பக மரம் அதிகம் வளருகிறது
என் வீட்டின் முன்னால்.
போதும் எனக்கு சேவை செய்வதை நிறுத்துங்கள்.
போதும் போதும் என்று சொல்லி எனக்கு அலுக்கிறது.
எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது

இது என் கனவுலகம்

1 comments:

நக்கலாகச் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்லுகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கனவு காண்பதற்கும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்!

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read