அவசரம் ஆரவாரம் இவற்றினிடையே அமைதியாய் நடப்பாய்!
ஒசையில்லா மோனதின் ஒப்பற்ற அமைதியை எண்ணி பார்!இயன்றவரையிலும் எல்லோரிடமும் அன்பு காட்டு-ஆனால்
அடிமை படாதே!உண்மையே பேசு!
அதை மெல்ல தெளிவாக பேசு!
மடத்தனமாக பேசுபவர்கள் சொல்வதையும் கேள்,
அவர்களுக்கும் கதைகள் உண்டு மறக்காதே!
காட்டு தனமான முரடர்களிடமிருந்து தள்ளியே இரு!
அவர்கள் வெறுப்பில் உருவானவர்கள்.
மற்றவர்களோடு உன்னை ஒப்பிட்டு பார்க்காதே!
அதனால் மிஞ்சுவது மன உளைச்சலும் கசப்பும் தான்!
உன்னை காட்டிலும் மேலானவர்களும், கீழானவர்களும்
இருக்கத்தானே செய்வார்கள்?உன் சாதனைகளையும்
திட்டங்களையும் மகிழ்வோடு எண்ணி பார்!
செய்யும் தொழில் எத்தனை எளிமை ஆனாலும்
அதில் கண்ணும் கருத்துமாய் கவனம் செலுத்து.
காலசக்கரம் மாறிச்சுழலும்போது அது கை கொடுக்கும்!
ஏமாற்றுகின்ற உலகில் ஏமாறாமல் கவனமாக இரு!
அதற்காக எல்லாமே ஏம்மாற்று தான் என எண்ணாதே!
அதிலுள்ள நல்லவைகளைக் கண்டு கொள்ளத்தவறாதே!
உயர் நோக்குடன் வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
உயர்வு தருகின்ற பெருமை மிகப்பெரியது!
நீ நீயாக இருக்கப் பழகு! அன்பு காட்டுவதாக நடிக்காதே!
அதற்காக வெறுப்பை வளர்த்துக்கொள்ளாதே!
வெறுமையிலும் வறட்சியிலும் கூடப் பசுமயான புல் தழைக்கவில்லையா?இளமையின் வளமையை முழுவதுமாகத் தந்து முதுமையை ஏற்று கொள்!மன உறுதியை வளர்த்துகொள், தாழ்மையில் அது உதவும்
கற்பனை உலகில் துயரப்படாதே சோர்வும் தனிமையும் அச்சம்தரும்
கட்டுப்பாடுகள் உனக்குத் தேவை தான்!
அதில் கொஞ்சம் கனிவும் இருக்கட்டுமே!
நீ இந்த பிரபஞ்சத்தின் குழந்தை!
வளரும் மரங்களை போல,வானத்து நட்சத்திரங்களைப்போல
உனக்கும் இங்கே வாழும் உரிமை உண்டு!
உனக்கு புரிகிறதோ இல்லையோ இந்தப்பரந்த
பிரபஞ்சம் உனக்காகவே மடியை விரிக்கிறது
நீ எதை கடவுள் என்று நம்புகிறாயோ-அதைஅமைதியாக மனதில் நினை!உனது கனவுகள் கடும் முயற்சி, மற்றும் வாழ்கையின்
ஆரவாத்திலும்உனது ஆன்மாவை அமைதியாக வைத்துக் கொள்!
பொய்மை சிதைந்த கனவுகள்; மனச்சோர்வு இவைகளின்
நடுவே இந்த உலகம் மிக அழகானது!
கவனமகாச் செல் மகிழ்ச்சியை எட்டி பிடிக்க முயற்சி செய்!
-Anonymous
written in paldimore st.paul's church

A short story is coming soon

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read